Tuesday, November 22, 2011

மீனம்மா - சென்டோசா, சிங்கப்பூர் (படங்களுடன் பாகம் 4)

# 1. தக தக தங்கமீன் (Parrot Fish)
செண்டோஸா தீவில் கடலுக்குக் கீழே நீளுகிறது பயணம் சுமார் 80 மீட்டர் ட்ரான்ஸ்பரெண்ட் அக்ரலிக் குகையினுள். 250 வகைகளில் 2500 கடல் வாழ் உயிரனங்களை மிக அருகாமையில் ரசிக்க முடிகிறது. மெதுவாக நகரும் தரை(moving travellator)யில் நின்றபடியே பயணிக்கலாம். சற்று நேரம் எடுத்து ரசிக்க விரும்பும் இடங்களில் வெளியேறிக் கொள்ளலாம்.

கண்ணாடியைத் தாண்டி நீரினைத் துழாவிச் சென்று கேமராவின் லென்ஸ் பதிவாக்கிய காட்சிகள் என்பது மட்டுமின்றி, அங்கிருந்த விளக்குகளின் ஒளியினால் ஏற்பட்ட பிரதிபலிப்பையும் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் ஓரளவு நன்றாக வந்தவை உங்கள் பார்வைக்கு.

பூக்களைப் பறிக்காதீர்கள், தயவு செய்து தொடாதீர்கள் எனும் அறிவிப்புகளைப் பார்த்திருப்பீர்கள். இங்கே “வாங்க வாங்க வந்து தொட்டுப் பாருங்க” என்றே அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் “நீருக்கு வெளிய மட்டும் தூக்கிடாதீங்க” எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.

# 2


நான்கடி விட்டத்தில் தட்டையான தட்டு போன்ற அமைப்புடனும் இரண்டடிக்கு நீண்ட வாலுடனும் தொட்டியில் கிடக்கிற ரே-ray மீன்களையும் தொட்டுப் பார்த்துக் குதூகலிக்கிறார்கள் சிறுவர்களோடு பெரியவர்களும்:

#3 Ray Fish


#4
கூடவே வவ்வால் போலவும் சில மீன்கள்

ரே வகை மீன்கள் 2, 3 சென்டி மீட்டர் அளவிலும் நீந்திக் கொண்டிருந்தன வேறொரு கண்ணாடித் தொட்டிகளில்.

ஆரஞ்சு பிங்க் மஞ்சள் என விளக்கொளியில் வண்ணம் மாறி மாறி ஜொலிக்கின்றன நிறமற்ற ஜெல்லி மீன்கள்.

# 5 Jelly Fish# 6


ஜாஸ் பட சுறா போல Grouper வகை மீன்கள் சில தலைக்கு மேலே நீத்திச் செல்கின்றன:

# 7


# 8சில பெரிய மீன்கள் கண்ணாடி மேல் சாய்ந்து அசைவில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தன:
# 9 Grouper


# 10 அதே மீன் அருகாமையில்..


இப்படிக் கண்டிராத பளிச் வண்ணங்களில் வியக்க வைத்தன விதம் விதமான வகைகளில், வண்ணங்களில், அளவுகளில் மீன்கள்:

# 11


# 12 யார் தூரிகை தீட்டிய ஓவியம் ? (Blue Hippo Tang)


# 13 Moorish Idol Fish# 14
வாள மீனோ..


# 15
விலாங்கு மீனோ:)?


# 16 Parrot Fish
தங்க மீன்கள் அரையடி உயரமும் ஒன்றரையடி நீளமுமாக..

அடிக்கடி யாரேனும் ‘வாவ் வாவ்’ எனக் குரல் எழுப்பியபடி இருக்கிறார்கள். இறைவனின் அற்புதப் படைப்புகள் இவையென நின்று நின்று ரசிக்கிறார்கள்.

இந்த அரங்கிலிருந்து வெளிவந்ததும் அடுத்து டால்ஃபின் காட்சிக்குச் சென்றோம். அது குறித்தப் பகிர்வு அடுத்த பாகத்தில்..

ஒரு வருடத்துக்கு சுமார் ஐம்பது இலட்சம் பேர்கள் இங்கு வருவதாகச் சொல்லப்படுகிறது.

# 17

சாலைவழி, கேபிள் வாகனங்களில் வருபவர் போக இந்த மோனோ ரயிலும் இடைவிடாமல் மேலும் கீழும் போய் வந்தபடியே இருந்தது கவனித்த அரைமணியில். பச்சை மரங்களின் பின்னணியோடு தெரிகிற இக்காட்சி விவோ சிடி மேல்தளத்திலிருந்து படமாக்கியது.

# 18 மேலும் கீழும்...

***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
43 comments:

 1. மஞ்ச மீன் அழகு ....ஆடாமல் அசையாமல் போஸ் தந்திருக்கிறதே.

  ReplyDelete
 2. தங்க மீன் ரொம்ப அழகு.. தண்ணிக்குள்ள இருக்கற மாதிரியே தெரியலை. அவ்ளோ துல்லியமா தூண்டில் போட்டிருக்கு உங்க கேமரா :-)

  ReplyDelete
 3. ரொம்ப நன்றி அக்கா.. நேர்ல பாத்தது போல இருக்கு :)

  ReplyDelete
 4. அக்கா...நானும் காமெராவாலதான் போட்டோ எடுக்கிறேன்.ஆனா இப்பிடி அழகா வாறதில்லையே.கொடுத்து வைத்த மீன்கள்.உங்கள் கண்ணில் பட்டதால் நிரந்தரப் பதிவில் பதிந்துகொண்டனவே !

  ReplyDelete
 5. த்ரில்லான, அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும். படங்கள் பிரமாதம்.சுறா படம் டாப்.தங்க மீனும்! அருமையான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. வழக்கம் போல் அருமை. மீன் வளர்ப்பவர்கள் மிக ரசித்து பார்ப்பார்கள்

  ReplyDelete
 7. அழகான மீன்கள் - மேலும் அழகாக தெரிகிறது, உங்கள் கேமரா (கை) வண்ணத்தில்.

  ReplyDelete
 8. இது தான் என் மகள் ரொம்ப ஆசையா பார்த்த இடம் சிங்கப்பூர்ல ..:)

  படங்கள் அழகு ..ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 9. அடிக்கடி யாரேனும் ‘வாவ் வாவ்’ எனக் குரல் எழுப்பியபடி இருக்கிறார்கள். இறைவனின் அற்புதப் படைப்புகள் இவையென நின்று நின்று ரசிக்கிறார்கள்.//

  அற்புதம்படங்கள் எல்லாம்.

  இறைவனின் அற்புதப் படைப்புகளை நீங்கள் படம் பிடித்துக் காட்டும் போது நாங்களும் ’வாவ் வாவ்’ எனக் குரல் எழுப்பிய படி விழிகள் விரியப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் திறமையை வியந்து ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 10. -அடேங்கப்பா... மீன்களில் இத்தகை வகைகளா? இவ்வளவு க்ளோஸப்பில் நான் மீன் பார்த்ததில்லை. உங்கள் காமிரா கவிதை பாடியிருக்கிறது... உன்னதமான ரசனைக்கு உயரிய விருந்து!

  ReplyDelete
 11. படங்கள் நன்றாக உள்ளது ராமலக்ஷ்மி. தொட்டுப் பார்க்கும் மீன் ஒரு வித்யாசமான அனுபவம்.. எனக்கு அதை தொடவே ஒரு மாதிரி இருக்கு வழுவழுனு ஐயையோ அதை தொட்டு வழுக்கிக்கொண்டு சென்றதைப் உணர்ந்து ஒரு மாதிரி ஆகிட்டேன். பொதுவாக மீன்கள் வழுவழுப்பாக இருக்கும் என்றாலும் இது என்னாலே முடியவே இல்லை :-) உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.

  ReplyDelete
 12. நட்சத்திர வாரத்தில் நல்ல இடுகைகள் வாசிக்கக் கிடைக்கும் என நினைத்திருந்தேன்..இப்படி படம் போட்டு ஏமாத்தலாமா,ராமலஷ்மி...நியாயமா?!?
  :‍-(

  ReplyDelete
 13. அத்தனை மீன்களும் உங்க காமிராவுக்குப் போஸ் கொடுத்திருக்கும் அழகு. அருமை.இத்தனை வகை மீன்களை வேற எந்த நாட்டிலும் பார்க்கவில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 14. goma said...
  //மஞ்ச மீன் அழகு ....ஆடாமல் அசையாமல் போஸ் தந்திருக்கிறதே.//

  மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 15. அமைதிச்சாரல் said...
  //தங்க மீன் ரொம்ப அழகு.. தண்ணிக்குள்ள இருக்கற மாதிரியே தெரியலை. அவ்ளோ துல்லியமா தூண்டில் போட்டிருக்கு உங்க கேமரா :-)//

  மிக்க நன்றி சாந்தி.

  ReplyDelete
 16. சுசி said...
  //ரொம்ப நன்றி அக்கா.. நேர்ல பாத்தது போல இருக்கு :)//

  நன்றி சுசி.

  ReplyDelete
 17. ஹேமா said...
  //அக்கா...நானும் காமெராவாலதான் போட்டோ எடுக்கிறேன்.ஆனா இப்பிடி அழகா வாறதில்லையே.கொடுத்து வைத்த மீன்கள்.உங்கள் கண்ணில் பட்டதால் நிரந்தரப் பதிவில் பதிந்துகொண்டனவே !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 18. ஸ்ரீராம். said...
  //த்ரில்லான, அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும். படங்கள் பிரமாதம்.சுறா படம் டாப்.தங்க மீனும்! அருமையான பகிர்வுக்கு நன்றி.//

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 19. மோகன் குமார் said...
  //வழக்கம் போல் அருமை. மீன் வளர்ப்பவர்கள் மிக ரசித்து பார்ப்பார்கள்//

  மிக்க நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 20. Thekkikattan|தெகா said...
  //cool shot :)//

  நன்றி தெகா:)!

  ReplyDelete
 21. சந்தனமுல்லை said...//நட்சத்திர வாரத்தில் நல்ல இடுகைகள் வாசிக்கக் கிடைக்கும் என நினைத்திருந்தேன்..இப்படி படம் போட்டு ஏமாத்தலாமா,ராமலஷ்மி...நியாயமா?!?//

  நீங்கள் உரிமையுடன் இப்படிக் கேட்டிருப்பது பிடித்துள்ளது முல்லை. முதல் பதிவில் சொன்னது போல படங்கள் மாலைநேரப் பகிர்வாக இன்னும் ஓரிரு தினமே. வாரம் முடிந்து விடவில்லை. பெரிய திட்டமிடல் இயலவில்லையெனினும் முடிந்த வரை செய்ய முயன்றிடுகிறேன். அக்கறையுடனான கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 22. வல்லிசிம்ஹன் said...
  //அத்தனை மீன்களும் உங்க காமிராவுக்குப் போஸ் கொடுத்திருக்கும் அழகு. அருமை.இத்தனை வகை மீன்களை வேற எந்த நாட்டிலும் பார்க்கவில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி வல்லிம்மா. நீங்கள் வளர்த்த மீனாட்சியும் நினைவுக்கு வருகிறாள்.

  ReplyDelete
 23. படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு...

  ReplyDelete
 24. படங்களும் விவரிப்பும் அருமை. எனக்குப் பிடித்தது வண்ண வண்ண ஜெல்லி மீன்.

  ReplyDelete
 25. நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராக மட்டுமல்ல மிகச் சிறந்தப் புகைப்படக் கலைஞராகவும் நிரூபித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. கேமரா செமையா விளையாடி இருக்கே....???!!!!

  ReplyDelete
 27. பாச மலர் / Paasa Malar said...
  //படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு...//

  மிக்க நன்றி மலர்.

  ReplyDelete
 28. Shakthiprabha said...
  //படங்களும் விவரிப்பும் அருமை. எனக்குப் பிடித்தது வண்ண வண்ண ஜெல்லி மீன்.//

  நன்றி ஷக்தி.

  ReplyDelete
 29. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராக மட்டுமல்ல மிகச் சிறந்தப் புகைப்படக் கலைஞராகவும் நிரூபித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.//

  நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 30. MANO நாஞ்சில் மனோ said...
  //கேமரா செமையா விளையாடி இருக்கே....???!!!!//

  வருகைக்கு நன்றி மனோ.

  ReplyDelete
 31. மீனம்மா...மீனம்மா அழகிய கண்ணம்மா....

  ReplyDelete
 32. //யார் தூரிகை தீட்டிய ஓவியம் ?//
  குட்டீஸ் வண்ணம் தீட்டியது போல் அத்தனை அழகு..பகிர்வும் படங்களும் சூப்பர்.
  ராமலஷ்மி எத்தனை நாட்கள் மொபைலில் படம் எடுப்பது?எனக்கே எனக்குன்னு ஒரு கேமரா வாங்க ஆசை வந்து விட்டது..

  ReplyDelete
 33. @ மாதேவி,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 34. @ ஆசியா,

  நல்லது ஆசியா:)! சீக்கிரம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் எடுத்த படங்களை PiT-ல் நீங்கள் பகிரக் காத்திருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 35. மீன் கூட சூப்பரா போஸ்கொடுத்திருக்கே?

  ReplyDelete
 36. தக தக தங்கமீன் - முதல் படமே
  அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 37. Lakshmi said...
  //மீன் கூட சூப்பரா போஸ்கொடுத்திருக்கே?//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 38. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //தக தக தங்கமீன் - முதல் படமே
  அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி.//

  மிக்க நன்றிங்க vgk.

  ReplyDelete
 39. துரைடேனியல் said...
  //Arumai.//

  மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin