#1
40 ஏக்கர் பரப்பளவிலான வெங்கையா அல்லது வெங்கைநகரே ஏரி, பெங்களூரின் (Old Madras Road) பழைய சென்னை சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் வரையிலும் இது மோசமான நிலைமையில் இருந்தது. ஏரி முழுவதும் தீங்கு விளைவிக்கும் நீர் பதுமராகம் மற்றும் களைகளால் நிரம்பியிருந்திருக்கிறது. மேலும் மோசமாகும் முன் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டத்தில், பெங்களூர் மாநகராட்சி 15 வருடங்களுக்குப் பராமரிக்குமாறு ஏரியை Lake Development Authority (LDA) - ஏரி வளர்ச்சி அதிகாரக்குழுவிடம் ஒப்படைத்தது. ஏரியை ஓரளவுக்கு சீரமைத்த LDA, “ஃபேன்டஸி லகூன்” என்ற பெயரில் இயங்கும் தீம் பார்க் நிர்வாகத்திடம் மாதாந்திர வாடகைத் திட்டத்தில், ஒப்படைத்து விட்டது.
#2
ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.
#3