ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

வண்ணக் கனவுகள்

#1
‘திரும்பும் வழிகள் அடைபட்டுப் போகையில், உங்கள் உள்ளுணர்வு உங்களை முன்னடத்திச் செல்லும்.’
#2
பெருமைகளைக் கடந்து நிற்பது நல்ல விஷயம், ஆனால் அப்படி கடப்பதற்குப் பெருமைப்படக் கூடிய விஷயம் இருந்தாக வேண்டும்.
- Georges Bernanos

#3
‘உங்கள் வாழ்க்கையைக் கருப்பு வெள்ளையில் காண்பது போல உணருகிறீர்களா?
கனவுகளை வண்ணத்தில் காணத் தொடங்குங்கள்.’


#4
நமக்கிடையேயான ஒப்புடைமைகளைப் பகிர்ந்து கொள்வோம். வேறுபாடுகளைக் கொண்டாடிடுவோம். - M. Scott Peck

#5
உண்மையை நோக்கிய பாதையில் ஒருவர் இரண்டு தவறுகள் மட்டுமே செய்ய நேரும்; இறுதி வரை செல்லாதிருப்பது, தொடங்காமலே இருப்பது.
-புத்தர்
#6
‘ஏதோ நமக்கு வாக்களிக்கப்பட்டு விட்டது போலக் கவலைப் படுகிறோம், நாளையைப் பற்றி.’


***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]

12 கருத்துகள்:

 1. படங்களும் சிந்தனைகளும் மிகச் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் !

  சிந்தனைகள் என்றும் செழிக்கச் செய்பவர்
  விந்தைகள் சேர்ப்பார் விரைந்து !

  பதிலளிநீக்கு
 3. படங்கள் வெகு அழகு. துல்லியம். வரிகளும் அழகு.

  பதிலளிநீக்கு
 4. படங்களும்
  எண்ணங்களும்
  அருமை

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin