புதன், 18 ஜூன், 2014

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்.. நிலமும் காற்றும்..

பஞ்ச பூதங்களில் நான்கு பூதங்கள்!

இந்த நான்கு இயற்கை சக்திகளையும் படமாக்கக் கேட்டுள்ளார் இந்த மாத PIT போட்டிக்காக, நடுவர் ஆன்டன்.

*நீர்த்துளி முதல் சீறும் சமுத்திரம் வரை..
*வெப்பத்தில் வெடித்துப் போன நிலம் முதல் அழகாகத் தெரியும் எந்த நில அமைப்பும்..
*சீறும் தீக்குச்சி முதல் காட்டுத்தீ வரை..
* உருவமில்லாக் காற்றை உணர வைப்பதாக..

உங்கள் படங்கள் இருக்க வேண்டும் என்கிறார். குறிப்பாக, இயற்கை சக்தி பார்த்ததும் ஈர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும்.

அறிவிப்புப் பதிவு இங்கே.

மாதிரிக்காகவும் ஒரு நினைவூட்டலாகவும் மேலும் சில படங்களை இங்கு பகிருகிறேன். [கடைசி இரு படங்கள் தவிர்த்து மற்றவை புதியவை:). படங்கள் இரண்டும் மூன்றும் தலைப்புக்காகவே எடுத்தவை.]

#1 சிற்றருவியின் தீம்தனனா..

#2 காற்றலை இல்லையென்றால்..
#3 சுடர்த் தாமரை

வியாழன், 5 ஜூன், 2014

சுற்றுச்சூழல் காப்போம்! - கைக்கொண்டனஹள்ளி ஏரி, பெங்களூரு (பாகம் 1)

5 ஜுன். உலகச் சுற்றுச் சூழல் தினமாகிய இன்று கைக்கொண்டனஹள்ளி ஏரியில் எடுத்த சில படங்களையும், ஏரியின் சுற்றுச் சூழலைப் பராமரிக்க அவர்கள் வலியுறுத்தும், கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும் பகிருவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.

#1

#2

#3

சனி, 24 மே, 2014

அமைதி காத்தல் - பாப்லோ நெருடா (1)

இப்போது நாம் பன்னிரெண்டு வரை எண்ணுவோம்
எண்ணுகையில் அனைவரும் அசையாமல் நிற்போம்

ஒரு முறையேனும் இப்பூமியில்
எந்த மொழியிலும் பேசாதிருப்போம்
ஒருநொடியேனும் நம் கைகளை
அதிகம் அசைக்காமல் நிற்போம்

அவசரங்களின்றி, இயந்திரங்களின்றி
அதிசயமாய் நாம் அனைவரும் இணைந்திருப்பது
விநோதமாய்த் தோன்றலாம்.

திங்கள், 19 மே, 2014

யானை பலம்

1. முன் முடிவுகளால் மனக் கோப்பையை நிரப்பி வைக்காதீர்கள்.

'Have an open mind! Have an empty cup!' _ Tae Yun Kim
2.  தங்களின் தனித்தன்மை மற்றும் திறமை மேல் நம்பிக்கை கொள்ளாதவர்களே  மற்றவர்களின் மலர்ச்சியில்.. வளர்ச்சியில் வாட்டம் அடைகிறார்கள்.

Individuality
3. ஒருதுளி வியர்வையேனும் சிந்தாது எந்த இலக்கும் நிறைவேறுவதில்லை.

ஞாயிறு, 11 மே, 2014

நாளை மலரும்

Flickr_ல் பகிர்ந்த மலர்கள் பத்தின் தொகுப்பு.
# 1
வசீகரம்..
வண்ணமும் வடிவமும்

# 2
சோலை மலர்.. 
காலைக் கதிரில்!

#3 உன்னிப் பூ

# 4
நித்திய கல்யாணி

வெள்ளி, 9 மே, 2014

சிலைகளை ஆவணப்படுத்தும் கலை - கல்கி கேலரியில் லக்ஷ்மி

சித்திரக் கலைக்காகக் கையில் எடுத்த கேமராவை கீழே வைக்காமல், ஒளிப்படக் கலை மூலமாகத் தற்போது சிற்பக் கலையை ஆவணப்படுத்தி வருவது குறித்த லக்ஷ்மியின் பகிர்வு, படங்களுடன் 11 மே 2014 கல்கி கேலரியில்..
# பக்கம் 44

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin