திங்கள், 19 மே, 2014

யானை பலம்

1. முன் முடிவுகளால் மனக் கோப்பையை நிரப்பி வைக்காதீர்கள்.

'Have an open mindHave an empty cup!' _ Tae Yun Kim
2.  தங்களின் தனித்தன்மை மற்றும் திறமை மேல் நம்பிக்கை கொள்ளாதவர்களே  மற்றவர்களின் மலர்ச்சியில்.. வளர்ச்சியில் வாட்டம் அடைகிறார்கள்.

Individuality
3. ஒருதுளி வியர்வையேனும் சிந்தாது எந்த இலக்கும் நிறைவேறுவதில்லை.

4. ஒருவருக்கு நல்லது நடக்கும் போது மற்றவர் இழப்பது என்பது எதுவுமே இல்லை.


5. மற்றவருக்காக மகிழ்ச்சி கொள்ளும் போது பூரிக்கிற மனது உணர்த்துகிறது நமக்கு, உண்மையான மகிழ்ச்சி எதுவென்பதை.

True Happiness

6. எழும் நன்றியுணர்வை வெளிப்படுத்தாமல் விடுவது வாங்கிய பரிசுப்பொருளைக் கொடுக்காமல் விடுவதற்கு ஒப்பானது. _ William Arthur Ward

7. பந்தயத்தின் இறுதிக் கட்டத்தில் மட்டுமின்றி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இருக்கிறது, வெற்றி. _ Jordan

8. கூட்டு முயற்சியில் குழுவினருக்கு நடுவேயான இடைவெளிகள் தவிர்க்கப்பட வேண்டியது.


9. குழுவாக செயல்படுகையில் இணைந்து முன் நகர்ந்தால் வெற்றி தானாகத் தேடி வரும்.

10. உங்கள் வளர்ச்சியைக் கண்டு எழுகிற முணுமுணுப்புகள், அதனால் மற்றவர் பாதிப்படைந்திருப்பதையே காட்டுகிறது. அவர்தம் செயலால் பாதிப்புக்கு உள்ளாகாமல் தொடர வேண்டும் முன்னேற்றப் பாதையில்..

..யானை பலத்துடன்!
**

[சிந்தனைத் துளிகள் பத்து, நான் எடுத்த சில ஒளிப் படங்களுடன். எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]

***

18 கருத்துகள்:

 1. படித்ததும் யானை பலம் மனசுக்கு.. அழகான படங்களுக்கும் வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 2. சிந்தனைத்துளிகள்
  சிந்தை கவர்ந்தன...

  பதிலளிநீக்கு
 3. முதலில் சொல்லப் பட்டிருக்கும் கருத்து ரசித்தேன். இதுபோலவே சிலர் நாம் இன்னதுதான் சொல்லப்போகிறோம் என்று அவர்களாகவே யோசித்து அதற்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். நாம் சொல்வது வேறாக இருக்கும்!

  எல்லாத் துளிகளுமே பொருத்தமான படங்களுடன் அருமை. நான் எல்லாம் இணையத்தில் பொருத்தமான படம் தேடுவேன். நீங்கள் உங்கள் சொந்தத் தொகுப்பிலிருந்தே இணைத்துள்ளீர்கள்! :)))

  பதிலளிநீக்கு
 4. யானைன்னதும் ஓடோடி வந்தேன்! ஏமாற்றவில்லை:-)

  கப் அபாரம்!

  சூப்பர் பலம்:-)

  இனிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. அற்புதமான மொழிகள்
  படத்துடன் இணைந்து
  கூடுதல் சிறப்புச் செய்கின்றன
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. யானை பலம் தரும் கருத்துக்கள். முதலாவது அசத்தல்.

  பதிலளிநீக்கு
 7. யானை என்றதுமே துளசியும் கீதாவும் வந்திருப்பார்கள் என்று நினைத்தேன். உங்கள் யானைகள் அத்தனையும் சிறப்பம்சமாக இடம்பெற்றிருக்கின்றன. சிந்தனைத் துளிகளும் அருமை.வாழ்வின் ஒவ்வொரு சமயத்திலும் நாம் சந்திக்கும் பல்வேறு கருத்துகள். நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 8. @ஸ்ரீராம்.,

  ஆம். வாக்குவாதங்களில் கூட மற்றவர் சொல்வதை உள்வாங்காமல் முன் முடிவோடு பேசிக் கொண்டே போவார்கள்.

  நன்றி ஸ்ரீராம். இவற்றில் படங்களுக்காகவேப் பதிந்த சிந்தனைகளும் அடக்கம்:)!

  பதிலளிநீக்கு
 9. @துளசி கோபால்,

  உங்களிடத்திலில் இருக்கும் யானை சம்பந்தமான கலெக்‌ஷனை அறிவேன். நீங்கள் பார்க்க நேர்ந்தால் கப் பிடித்துப் போகுமென நானும் நினைத்தேன்:). நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அனைத்துமே அருமை....

  கருத்துகளும், படங்களும் போட்டி போட்டுக் கொள்கின்றனவே....

  பதிலளிநீக்கு
 11. சிந்தனைக் கருத்து அனைத்தும் அருமை.
  யானை படம் போட்ட கப்,அழகு.ரோஜாமொட்டு, யானைகள் , ரோஜாபூ அனைத்தும் அழகு.

  பதிலளிநீக்கு
 12. @வல்லிசிம்ஹன்,

  கீதாம்மா குழும மடலில் யானையைப் பார்த்துக் கொண்டார்கள்:)! நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin