#1
கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் ஒன்று.மைசூரிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாண்டியா மாவட்டத்தில் காவேரி நதியின் தீவான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்.
#2
வைஷ்ணவர்களின் முக்கிய தீர்த்த ஸ்தலமாகவும், ஆழ்வார் பக்தி இயக்கத்துடன் தொடர்புடையதுமாக உள்ளது. குறிப்பாக காவேரி நதி ஓரத்தில் அமைந்துள்ள ‘பஞ்சரங்க க்ஷேத்திரங்கள்’ என அழைக்கப்படும் ஐந்து முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காவேரி நதி ஆரம்பமான இடத்திலிருந்து முதலில் அமைந்துள்ள கோயில் இதுவே ஆகையால் இது ‘ஆதி ரங்கம்’ என்றும் அறியப்படுகிறது. ஸ்ரீரங்கபட்டண நகரம் இந்த கோயிலின் பெயரைக் கொண்டே உருவாகியுள்ளது.
#4


















