பாகம் 1: இங்கே
கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.
விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
வள்ளி, தெய்வயானையுடன் ஆறுமுகப் பெருமான், வடிவுடையம்மன், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, சரஸ்வதி, கஜலக்ஷ்மி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி அருகே தல விருட்சமான அழிஞ்சி மரம் கல்லால் செய்து வைக்கப்பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, சிறியதும், பெரியதுமாக இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. அதில் பெரிய சிற்பமாக எழுந்தருளிய தட்சிணாமூர்த்தி சன்னதியைச் சுற்றி இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
#13
இக்கோயிலின் அழகான சிற்பங்களையும், ஓவியங்களையும், கலை வேலைப்பாடுகளையும் கண்டு ரசிக்க அதிக நேரம் அவசியம். திடீரெனத் திட்டமிட்டு சென்றதாலும் அடுத்து பிள்ளையார்பட்டி, ஆத்தங்குடி, காரைக்குடி செல்ல வேண்டியிருந்ததாலும் நிதானமாக நேரம் செலவழிக்க இயலவில்லை. வாய்ப்புக் கிடைக்கையில் மீண்டும் செல்ல வேண்டும்.
#16
கண்கவரும் அந்தக் கட்டிடக்கலையை அருமையாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமிகவும் அழகிய படங்கள்.
பதிலளிநீக்குஇந்த கோவில் வாகனங்கள் மிக அழகாய் இருக்கும் அதையும் எடுத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
உண்மையில் படங்கள் எல்லாம் பேசுகிறது.
நன்றி கோமதிம்மா.
நீக்குகோயில் வாகனங்கள் பிரகாரத்தில் கண்ணில் தென்படவில்லையே. அவசரத்தில் தவற விட்டிருக்க வாய்ப்புள்ளது.
பிரமிக்க வைக்கும் நிழற்படங்கள். அந்தக் கட்டிடக்கலையும் ஓவியங்களும் அசத்துகின்றன. நீங்கள் சொல்வது போல, இந்த ஆலயத்தின் அழகை நின்று நிதானித்து இரசிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் சென்று வர ஆசை. பார்க்கலாம் அழைப்பு கிடைக்குமா என…
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவாய்ப்புக் கிடைத்தால் அவசியம் சென்று வாருங்கள்.
வித விதமான கலை வடிவங்கள், நுட்பமான விவரணைகளுடன் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படமும், திரும்பத் திரும்பக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. குறைந்த கால அவகாசத்திலும் மிக நேர்த்தியாகப் படங்களை எடுத்து, அதைச் சிறந்த பதிவாகக் கோர்த்துள்ளீர்கள். கோவிலை நேரில் பார்த்த உணர்வை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. மிக்க நன்றி.
நீக்குசென்ற வருடம் இந்தியா வந்திருந்தபோது திருச்சியிலிருந்து பிள்ளையார்பட்டி, நார்த்தாமலை இன்னும் சில கோவில்களுக்குச் சென்றுவந்தோம். வைரவர் கோவில் பற்றி அப்போது தெரியவில்லை. அடுத்த முறை கட்டாயம் பார்க்கவேண்டும். கோவிலின் கலைநயம் அசத்துகிறது. உங்கள் கைவண்ணத்தில் படங்கள் நேரில் தரிசித்த உணர்வைத் தருகின்றன.
பதிலளிநீக்குநன்றி கீதா. பிள்ளையார்பட்டி செல்லும் வழியில் இக்கோயில் இருப்பது பற்றி என் தம்பி சொல்லியே எங்களுக்கும் தெரிய வந்தது. அடுத்த முறை வரும் போது தவறாமல் சென்று வாருங்கள்.
பதிலளிநீக்கு