வியாழன், 6 மார்ச், 2025

ஒளிப்பட சவால்.. கடைசி வாரம்; எனது நூல்கள் குறித்து.. - தூறல்: 47

 "சென்ற பதிவின்தொடர்ச்சியாக, தனது இருபத்தியோராவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ஃப்ளிக்கர் தளம் அறிவித்த 21 நாள் ஒளிப்பட சவாலின் கடைசி வாரத் தலைப்புகளும் நான் சமர்ப்பித்தப் படங்களும் தொகுப்பாக இங்கே:

#நாள் 15: மகிழ்ச்சி


#நாள் 16: விசித்திரம்

#நாள் 17: குடும்பம்


#நாள் 18: உத்வேகம்

#நாள் 19: அன்பு

பார்வையற்ற இணைக்கு 
உணவளிக்கும் துணை

#நாள் 20: சமூகம்


#நாள் 21: பிரமிப்பு

இந்த சவாலில் உற்சாகமாகப் பல ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டிருந்தனர். வாழ்த்துகள் ஃப்ளிக்கர்!

***

ஃப்ளிக்கர் தளத்தில் ஜனவரி மாதத்தில் எனது பதிவுகளுக்கான புள்ளி விவரங்கள்: சேமிப்பிற்காக இங்கே:


நன்றி ஃப்ளிக்கர்!

***

மகளிர் சிறப்பிதழாக மலர்ந்துள்ள இந்த மாத மண்வாசனை இதழில் கவிதை ஒன்றுக்கு  பயன்படுத்தப்பட்டிருந்த, 2011_ஆம் ஆண்டில் நான் எடுத்த படம்:

வயதான காலத்தில் சுயமாக நிற்க விரும்பி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்த மூதாட்டியின் படம் முன்னர் தினமலர், குமுதம் பெண்கள் மலர், குங்குமம் தோழி ஆகிய இதழ்களிலும் இடம் பெற்றிருந்தன. 

***

னது நூல்கள் குறித்து எழுத்தாளரும், கவிஞருமான திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய விமர்சனங்கள் “இங்கும்” , “இங்கும்” உள்ளன. தனது யுடியூப் சேனலிலும் இந்நூல்கள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிந்துள்ளார்.

#அடைமழை


#இலைகள் பழுக்காத உலகம்

இலைகள் பழுக்காத உலகம் l ராமலெக்ஷ்மிராஜன் l தேனம்மைலெக்ஷ்மணன்

அன்பும் நன்றியும் தேனம்மை!

***

கவித்துளியாக ஒரு படத்துளி:

***

4 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் அருமை.  பூனையின் வாயில் ஓணான்..  கணநேரத்தில் கேமிராவில் சிறைப்பிடிப்பு.

    அந்த வயதான மாது படம் அடிக்கடி கண்ணில் பட்டிருக்கிறது.  ,மண்வாசனை இதழில் படம் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.  தேனம்மை யு டியூப் சேனல் வேறு தொடங்கி இருக்கிறார் போல...  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் மிக அழகு.
    தேனம்மை உங்களின் இரண்டு புத்தகங்களை மிக அழகாய் விமர்சனம் செய்து இருக்கிறார்.

    கதை தொகுப்பை அழகாய் சொன்னார், கவிதை தொகுப்பை மிக அழகாய் சொன்னார்.

    கடைசி படம் பிஞ்சு கால்காளின் கொலுசும் கால்களில் அவளே வரைந்த ஓவியங்களா? மிக அழகு.
    பகிர்வு அருமை.
    வாழ்த்துகள், பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தேனம்மை, நேரம் எடுத்து நன்கு விமர்சித்துள்ளார். குழந்தையின் கால்களில் யார் வரைந்தது எனத் தெரியவில்லை:). நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin