ஞாயிறு, 16 நவம்பர், 2025

குறையொன்றுமில்லை

 #1
"கனவுகள் உயரமானவையாக இருக்கட்டும். அதே சமயம், உங்களைச் சுற்றியுள்ள உண்மையை நோக்கி உங்கள் கண்கள் திறந்திருக்கட்டும்."


#2
"எதிலும் குறைவில்லை என்பதை நாம் உணருகின்றபோது, உலகம் நமதாகிறது."


#3
"பூக்கும் ஒவ்வொரு பூவும் நினைவூட்டுகிறது, அழகு என்பது அந்தந்த நிமிடத்தை அரவணைப்பதில் உள்ளது."

செவ்வாய், 11 நவம்பர், 2025

இறகுகளின் வண்ணவிழா.. நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்.. – மைசூர் கராஞ்சி இயற்கைப் பூங்கா (2)

#1
வானுயர்ந்த சோலையிலே..

#2
இயற்கையின் அமைதிக்குள் இறை உருவம்


இறகுகளின் வண்ணவிழா:

பறவைகளைக் கவனிப்பது ஒரு இனிய அனுபவம் எனில் எங்கு திரும்பினும் கண்ணைக் கவரும் வண்ண  இறக்கைகளுடனான பறவைகள் சூழ இருக்க எதைக் கவனிப்பது என்பது மேலும் இனிதான அனுபவம். நீல மயில்களும் வெள்ளை மயில்களும் தம் கம்பீரமான அசைவுகளால் சுற்றுப்புறத்தை அழகால் நிரப்பின என்றால், அலெக்ஸாண்ட்ரின் கிளிகள் தம் கீச்சொலிகளாலும், துடிப்பான பறத்தல்களாலும் பூங்காவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. வளைத்து வளைத்து எடுத்த படங்களை அவ்வப்போது ஃப்ளிக்கர் தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து முடித்து, இங்கு தொகுப்பாக அளிக்கிறேன்.

நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்:

#3


#4

#5

#6


#7


#8


#9


#10

#11


#12

#13


#14

#15

#16

#17

#18


#19

**
கராஞ்சி இயற்கைப் பூங்கா - பாகம் 1: இங்கே

***

ஞாயிறு, 9 நவம்பர், 2025

மன்னிப்புக் கோர மறுப்பவள் - 'பண்புடன்' இதழ்: 6

மன்னிப்புக் கோர மறுப்பவள்


அவர்கள் அவளிடம் சொன்னார்கள் 
அவள் ஒரு அழகி அல்ல என்று,
அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்த
லட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று.

அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்
அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்
அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்
அவளது கனவுகள் மிக உயரமானவை,
ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள்.

அவர்கள் ஒருபோதும் பார்க்கவில்லை
அவளது கைகள் 
வெறுமையிலிருந்து அழகை உருவாக்குவதை,
அவளது பொறுமை 
வலிகளைச் சித்திரமாக மாற்றுவதை,
அவளது திறமைகள்
பேசுபொருளாகிப் புகழ் பெறுவதை. 

அவள் சிரித்தபோது 
அவளது முகத்தைப் பாராட்டியவர்கள்

புதன், 29 அக்டோபர், 2025

அழகான கேசவன் - மைசூர் சோமநாதபுர கோயில் - பாகம் 2

 

புனித நதியான காவேரியின் கரையோரத்தில் அமைந்துள்ள சென்ன கேசவா கோயில் குறித்த தகவல்கள் மற்றும் 18 படங்களுடன்  பகிர்ந்த பாகம் 1 இங்கே

#2

இக்கோயில் ஹொய்சாளப் பேரரசு மன்னர்களால், அவர்களது ஆட்சியின் கீழிருந்த பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 1500 கோயில்களில் ஒன்று. அவர்களது கட்டிடக் கலையின் உச்சக்கட்ட வளர்ச்சியாக இந்தக் கோயில் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பல வழிகளில் தனித்துவமாக விளங்குகிறது.

திங்கள், 27 அக்டோபர், 2025

வழி நடத்தும் நிழல்கள் - பண்புடன் இணைய இதழில்..

வழி நடத்தும் நிழல்கள்

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றன 
தலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டி
மேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.
அதுவே சத்தியம் என 
கூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.
அவற்றின் காதுகள் 
பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமே 
செவிமடுக்கப் பழகி விட்டன.

வெள்ளி, 24 அக்டோபர், 2025

இந்திய வெள்ளைக்கண்ணி ( Indian white-eye ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்:  Indian white-eye 
உயிரியல் பெயர்: Zosterops palpebrosus
வேறு பெயர்கள்: முன்னர் Oriental white-eye என அறியப்பட்டு வந்தது.

இந்திய வெள்ளைக்கண்ணி, Zosterops palpebrosus எனப்படும் வெள்ளைக்-கண் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பாடும் பறவை இனமாகும். இதன் கண்களைச் சுற்றி ஒரு வெள்ளை வளையம் இருப்பதால், இதற்கு "வெள்ளைக்கண்ணி" என்று பெயர் வந்தது. 8-9 செ.மீ நீளமே உடைய மிகச் சிறிய பறவை. 

#2

இவற்றின் உடலின் மேற்பகுதி மஞ்சளும் பச்சையும் கலந்த ஒரு வித ஆலிவ் நிறத்தையும்,  கீழ்ப்பகுதியும் கழுத்தும் நல்ல மஞ்சள் வண்ணத்தையும்  வயிற்றுப் பகுதி வெள்ளை கலந்த சாம்பல் வண்ணத்தையும் கொண்டு காணப்படும். சில துணை இனங்களில் வயிற்றின் பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

[வெகு காலமாக இதைக் காண இயலாதா என எதிர்பார்த்துக் காத்திருந்த போது கிளைகளுக்கு நடுவே, அடர்ந்த இலைகளுக்கு உள்ளேயிருந்து வெளிப்பட்டது ஓர் நாள்:)! 

செவ்வாய், 7 அக்டோபர், 2025

சென்னகேசவா கோயில் - சோமநாதபுரம், மைசூர் - பாகம் 1

 #1

சென்னகேசவர் கோயில் மைசூரிலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள சோமநாதபுரத்தில், காவேரி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. வைணவ இந்து கோயிலாகிய இது, சென்னகேஷவா கோயில் மற்றும் கேசவா கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சென்னகேசவ என்ற சொல் "அழகான கேசவன்" என்று பொருள்படும். இதுவே ஹொய்சாள அரசர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். ஹொய்சாள கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றும் ஆகும்.

#2


#3


#4

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

கிளி ஜோஸியம் - பண்புடன் இணைய இதழின் நவராத்திரி சிறப்பிதழில்..

 


லய வாசலின் முன்னிருந்த
ஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டி
வீதியின் அமைதியான ஓரத்தில்
சாயம் போன குடைக்குக் கீழ்
மூங்கில் கூண்டிற்கு உள்ளே
சைகைக்காகக் காத்திருக்கிறது கிளி.

வருவோர் போவோரைக் கவரும்
வாய்கொள்ளாப் புன்னகையுடன்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

செம்பருந்து ( Brahminy Kite ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்:  Brahminy Kite
உயிரியல் பெயர்: Haliastur indus
வேறு பெயர்கள்: பிராமணி கழுகு; கருடன்

செம்பருந்து ஒரு நடுத்தர அளவிலான வேட்டைப் பறவை. இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ‘சிவப்பு முதுகுடைய கடல் கழுகு’ என்றும் அழைக்கப்படுகிறது. சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும். 

#2

இப் பறவையின் உடல் செம்மண் நிறத்திலும் தலையும் மார்புப் பகுதியும் வெண் நிறத்திலும் இருக்கும்.  சிறகுகளின் நுனி கருப்பு நிறத்தில் இருக்கும். மற்ற கழுகுகளைப் போல் முட்கரண்டி வடிவில் அன்றி இதன் வால் பகுதி வட்டமாக இருக்கும்.

#3

நிறம் தவிர்த்து, தோற்றம் மற்றும் குணாதிசயங்களில் கரும்பருந்துக்கு நெருங்கிய உறவுப் பறவை எனலாம்.

புதன், 17 செப்டம்பர், 2025

கோபுர தரிசனம் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்

 #1

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 6_ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வைணவக் கோவில் பார்த்தசாரதி வடிவிலான விஷ்ணு பகவானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. ' பார்த்தசாரதி ' என்ற பெயருக்கு ' அர்ஜுனனின் தேரோட்டி' என்று பொருள்படும். 

மூலவரான பார்த்தசாரதி பெருமாள் சுமார் ஒன்பது அடி உயர சிலையாக மீசையுடன் தனித்துவமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

உலகை நோக்கி விரியும் நிறங்கள்

 #1 

"பின்தொடருகிறவர் அனைவரும் பின்தங்கியவர் அல்ல, சிலர் தனித்துவமான வேகத்தில் உடன் நடப்பவர்."


#2 

"நீ நிறங்களை அணிவது மட்டுமல்ல, அதன் ஒளியை உலகெங்கும் பரப்புகிறாய்."


#3
"மங்க மறுக்கும் நிறமாகப் பிரகாசி."

திங்கள், 8 செப்டம்பர், 2025

கல்வாழை [ Canna Lily ]

 

ல்வாழை அல்லது மணிவாழை எனத் தமிழில் அழைக்கப்படுகிறது (canna lily) கன்னா லில்லி. தாவரவியல் பெயர்: Canna Indica. ஆங்கிலத்தில் Indian shot, African arrowroot, edible canna, purple arrowroot, Sierra Leone arrowroot ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றன. கன்னாசியே (Cannaceae) குடும்பத்தைச் சேர்ந்த இந்த வாழை இனத்தில் சுமார் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.

#2


இந்த வகைச் செடிகள் கண்களைக் கவரும் அழகிய இலைகளைக் கொண்டவை ஆகையால் தோட்டக் கலைஞர்கள் இவற்றை அலங்காரத் தாவரங்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

#3


இவற்றின் அனைத்து வகை இனங்களுக்கும் பூர்வீகம்

வியாழன், 4 செப்டம்பர், 2025

முக்தி - நவீன விருட்சம்: இதழ் 130

 முக்தி

அடர்ந்த மரத்திலிருந்து 
உதிர்ந்த இலையொன்று
காற்றின் போக்கில் பயணித்து
நதிக்கரையோரத்து
புதர்ச் செடி மேல் அமர்கின்றது.
கீழிருக்கும் நீரில் மிதக்கின்றது
மேலிருக்கும் சூரியன். 

சனி, 30 ஆகஸ்ட், 2025

கோபுர தரிசனம் - வடபழநி ஆண்டவர் கோயில்

#1

#2

#3

டபழனி முருகர் கோயில் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒன்றாகும். முருகரின் சிலை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பழனி கோயிலில் உள்ள சிலையைப் போலவே இருப்பதால், இது வடபழனி கோயில் என்று அழைக்கப்படலாயிற்று.

#4 தல வரலாறு:

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

வெற்றியின் வேர்

 

#1
"வாழ்வாதாரம் என்பது ஒரு வழிமுறையல்ல, செழித்து வளர்வதற்கான பணி."


#2
"உள்ளம் உறுதியாக இருக்கும்போது, கண்கள் உலகிற்குச் சொல்கின்றன."

#3
"புரிந்து கொள்ள ஒரே மாதிரி சிந்திக்க வேண்டியதில்லை, கேட்பதற்கான அக்கறை இருந்தால் போதும்."

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பது..


#1
"ஏறுவதற்கு பயப்படாதீர்கள். நீங்கள் தடுமாறினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் காணக் கிடைக்கும் காட்சிகள் அழகானவை."

#2
"ஞானம், பேசும் நேரம் வரும் வரைப் பொறுமையாக காத்திருக்கும்."
#3
"நிதானமாக இருப்பது என்பது ஒவ்வொரு விளைவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தைத் துறப்பது.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

மாயாஜாலத்தின் ஒரு கணம்

 1) 'உள்ளம் தயாராக இருக்கும்போது, அதன் விழிப்புணர்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.'


2) 'மிகக் குறுகிய, பூப்பூக்கும் காலம் கூட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.  இயன்றவரை ஒளிர்ந்திடு.'

#3 'பிரகாசிக்கும் வண்ண மலர்கள் நமக்கு நினைவூட்டுகின்றன,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin