Monday, September 20, 2010

செல்வக் களஞ்சியங்கள்


ண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயது காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலகாலமாய் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான். பெண்கள் எத்தனை சாதித்துக் காட்டி என்ன போயிற்று. இன்றைக்கும் கருவறைக்கே வேண்டாத விருந்தாளியாகத்தான் இருக்கிறாள் என்பதுதான் வேதனை தோய்ந்த உண்மை.

எல்லோருக்கும் தெரிந்த, எத்தனயோ பேரால் வேறுவேறு வார்த்தைகளால் அடிக்கடி சொல்லப்பட்டவைதானே எனத் தோன்றலாம். கள்ளிப்பால் கதைகளும், கருவிலேயே பெண்சிசுக்களின் உயிர்த்துடிப்பைச் சிதைக்கத் துணியும் அவலங்களும் தொடரும் வேதனையாகவே இருக்க, மக்கள் மனதில் மாற்றங்கள் வாராதா எனும் ஆதங்கத்தின் விளைவே இந்தப் பகிர்வு.

பிறக்கப் போகும் குழந்தை ‘ஆரோக்கியமாக வளர்கிறதா’ என்றறியக் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கேன் கருவி ஏனோ நம் நாட்டில் இப்படிப் பால் பாகுபாட்டினைத் தெரிந்து கொண்டு, பெண் என்றால் கருவிலேயே கலைத்து விடும் மாபாவத்துக்குத் துணை போய் கொண்டிருக்கிறது.

டந்த ஜூன் இரண்டாவது வாரம் பெங்களூர் மருத்துவமனை ஒன்றில் இப்படி சட்டத்துக்குப் புறம்பாக, கருவில் வளருவது பெண்ணா பையனா எனக் கண்டறிந்து சொல்கிறார்கள் எனத் தெரியவந்து, ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ய வைத்துள்ளார்கள் அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை ஏற்பாடு செய்த ஐவர் அணி . மருத்துவரும் தன் தவறு காமிராவில் பதிவாகிக் கொண்டிருப்பது தெரியாமல் ரூ 14000 வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடங்களில் அறிந்து சொல்லி விட்டார் வயிற்றில் இருப்பது பெண் சிசுதான் என.

வந்திருப்பது யாரெனத் தெரியவர மின்னலெனத் தப்பித்துத் தலைமறைவாகி விட்டார். உடந்தையாய் இருந்து மாட்டிக் கொண்ட அட்டெண்டர் பெண்மணி மூலமாக சராசரியாக ஒருநாளுக்குப் பத்து பேராவது இந்த சோதனையைச் செய்து கொள்ள வந்தபடி இருந்தது தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த மருத்துவமனையெங்கும் இச்சோதனை சட்டப்படி குற்றம் எனும் வாசகம் நிரம்பிய போஸ்டர்களால் நிரம்பி இருந்திருக்கின்றது.

தொடர்ந்து அரசு மேற்கொண்ட திடீர் சோதனைகளின் முடிவாக பலமருத்துவமனைகளில் இது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருப்பது தெரியவர அபராதம் விதிக்கப்பட்டதோடு, இக்கருவியையே கைப்பற்றி விட்டுள்ளது அரசு. இந்த அவலம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

றுமைக் கோட்டிலுள்ளவர்கள், படிப்பறிவில்லாதவர்கள்தான் அறியாமையால் இப்படிச் செய்கிறார்கள் என சொல்ல முடியாது. என்ன குழந்தையெனத் தெரிந்து அதன் துடிப்பை நிறுத்திட பல ஆயிரம் செலவிடத் துடிக்கும் வசதியானவரும்தான் இதில் அடக்கம். மெத்தப் படித்த மருத்துவர்களும் உடந்தை என்பது தலைகுனிவுக்குரிய விஷயம். ஆனால் மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

‘எந்தக் குழந்தையானால் என்ன? தாயும் சேயும் நலமாய் வந்தால் போதும்’ எனச் சொல்லியபடியே பிரசவ வார்டில் புதுவரவுக்குக் காத்திருக்கும் சுற்றங்களும் கூட, பிறந்தது பெண் எனத் தெரிவிக்கப் படும் வேளையில் ‘பெண்ணா’ என இழுப்பதையும், அதுவே ஆண் குழந்தையெனும் போது ‘ஆகா’ என ஆனந்தத்தில் துள்ளுபவதையும் இன்றளவிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆரம்ப வரவேற்பே இப்படி அலுப்பும் சலிப்புமாய் இருக்குமானால் பெண்குழந்தைகள் மீதான வெறுப்பு சமுதாயத்தில் மாற்ற முடியாத ஒன்றாகவே போய்விடும். கருவில் அழித்திடும் அளவுக்கு இறங்கி விடாத மக்களும், கருத்தினில் பெண்குழந்தைகளைக் கொண்டாட ஆரம்பித்தால்தான் ஒரு அலையாய் இந்த எண்ணம் சமுதாயத்தில் பரவும்.

மருத்துவக் காரணங்களுக்கான பரிந்துரைகள் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு கருவைச் சுமக்கும் தாய், குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக ஒருபோதும் இச்செயலுக்குத் துணை போகக் கூடாது. தானும் ஒரு பெண் என்பதை சுமப்பவளும் சரி, தூண்டும் பிற குடும்பத்துப் பெண்களும் சரி மறக்கக் கூடாது. கருவில் இருப்பது இன்னொரு உயிர், அதை மாய்க்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்பதை உணர வேண்டும். ஆணா பெண்ணா என்பது பிறக்கும்போது தெரிய வந்தால் போதும் என்பதில் கருவுற்ற பெண்கள் பிடிவாதம் காட்ட வேண்டும். நம் நாட்டின் குடும்ப அமைப்பில் இதற்காகக் கூடப் போராட வேண்டிய சூழலில் பெண்கள் தவிப்பது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே வெட்கக் கேடு.

ஆண்களும், தன்னைச் சுமந்தவளும் ஆளாக்கியவள் பெண்ணாயிருக்க, தன் தேவைகளை நிறைவேற்றக் கரம் பிடித்தவள் பெண்ணாயிருக்க ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருப்பதும் வளர்ப்பதும் சிரமம் என்கிற எண்ணத்தை கைவிட வேண்டும். கருவறைக்குள் குடிவருவது குடும்பத்தின் குலசாமி குலதெய்வமாகத்தான் இருக்க முடியுமே தவிர எந்த வேண்டாத விருந்தாளிகவும் இருக்க முடியாது. கோவிலில் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் ‘கர்ப்பக் கிரகம்’ என்றழைப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் கர்ப்பத்தின் புனிதத்தை. தாய்மையின் மேன்மையை. தன் பெற்றோரோ சுற்றமோ வற்புறுத்தினாலும் மனைவிக்குக் கணவன் துணை நின்றால் சுற்றம் தானாக வாயடைத்துப் போகும்.

ளர்க்கும் சிரமம் எங்களுக்கு’ என வாதம் செய்பவரும் இருக்கிறார்கள். ஆண் குழந்தை என்றால் உங்கள் சிரமங்கள் பஞ்சாகிப் பறந்து விடுமா? மாறிவரும் இக்காலத்தில் நமது எந்தக் கணிப்புகளும் உண்மையாக இருக்கப் போவதேயில்லை. பெற்றவரைக் கடைசி வரை வைத்துத் தாங்கும் மகள்களும் உள்ளனர். வயதான காலத்தில் தவிக்க விட்டு பிரிந்து சென்று விடும் மகன்களும் உள்ளனர். பல இடங்களில் மகன்களுடனே வாழ்ந்தாலும் கூட மனதால் தனிமைப்பட்டுப் போய் ஆதரவாய் தோள் சாய மகள்களின் தோள் தேடும் பெற்றோரும் உள்ளனர். இது போல் மனப்பாரம் இறக்கி வைக்க மகள்கள் இல்லாது போனார்களே என எண்ணி ஏங்கும் தம்பதியரும் உள்ளனர்.

இவையெல்லாம் இங்கு பட்டியலிடக் காரணம் எந்த அடிப்படையில் பெண் குழந்தைகள் வெறுக்கப் படுகிறார்களோ அது தவறு என்று சொல்லத்தான். படிப்பு முதல் திருமணம் வரை இந்தக் காலத்தில் ஆண் பெண் இருவருக்குமே எல்லாவித செலவுகளும் ஒரே மாதிரியாகி விட்டனவே. மேலும் பொருளாதார அடிப்படையில் பிள்ளை வளர்ப்பினைப் பாகுபடுத்திப் பார்ப்பதே கேவலமான ஒரு சிந்தனையாகும்.

உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம். குழந்தைகளே வாழ்வின் பொக்கிஷங்கள், அவர்களை வளர்க்கும் அனுபவம் இறைவன் தந்த பேரானந்தம், சந்திக்கும் சிரமங்கள் இன்பம் தரும் சவால்கள் என்கிற உணர்வும் புரிதலும் வந்து விட்டால் சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.

*** *** ***

படம் நன்றி: கருவாயன் என்ற சுரேஷ்பாபு
http://www.flickr.com/photos/30041161@N03/4702191239/in/pool-548474@N20/
 • ஜனவரி 2011 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகையின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழிலும்.., நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

82 comments:

 1. நூற்றுக்கு நூறு எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். எனக்குத் தெரிந்தவரையிலும், பெண் சிசு உதாசீன போக்கு அதிகம் படிப்பறிவு இல்லாத கிராமப்புறங்களில்தான் அதிகம் காணப்படுகின்றது. எங்கள் வீட்டில் வேலை செய்கின்ற பெண்மணி, சமீபத்தில் அவருடைய தங்கையின் பிரசவம் பற்றி கூறிய தகவலும் இதை உறுதிப்படுத்தியது.

  ReplyDelete
 2. நல்ல கட்டுரை. நல்ல படம்!

  ReplyDelete
 3. 14,000 ஏ அப்பா.. பின்னால் செலவுன்னு பெண்ணை நினைப்பதால் இவ்ளோ குடுத்து சோதிச்சிக்கிறாங்களா..
  அநியாயமப்பா..

  ReplyDelete
 4. படிக்கும் போதே வேதனை வருகிறது. இன்னும் இந்த கொடுமை மாறவில்லை என்பது அவமான கரமான விஷயம். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 5. அவசியமும் ஆழ்ந்த கருத்துகளையும் உடைய கட்ட்டுரை..

  //ஆண்களும், தன்னைச் சுமந்தவளும் ஆளாக்கியவள் பெண்ணாயிருக்க, தன் தேவைகளை நிறைவேற்றக் கரம் பிடித்தவள் பெண்ணாயிருக்க ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருப்பதும் வளர்ப்பதும் சிரமம் என்கிற எண்ணத்தை கைவிட வேண்டும்.//

  கண்டிப்பா

  ReplyDelete
 6. இன்னும் கூட இது போன்ற மனிதர்கள் உலாவுகின்றனர் என்பதை நினைத்தால் :(

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு ராமலஷ்மி. பெண்ணாக இருப்பவளே பெண் வேண்டாம்ன்னு நினைக்கிறதும், நினைக்க வைப்பதும்தான் கொடுமையின் உச்சக்கட்டம்...

  ReplyDelete
 8. அந்த 14,000-த்தை ஸ்கேன் பார்ப்பதற்குப் பதிலாக அப்போதே பாங்கில் ஃபிக்ஸ்ட் டெபாஸிடாகப் போட்டால் குழந்தை வளர்ந்து பெரியவளாகும் போது ஒரு பெருந்தொகை கைக்குக் கிடைக்குமே!!!

  ReplyDelete
 9. பெண் சிசுகொலை அவசியம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று

  பெண் சிசுக்களை திசுக்களை போல் காப்போம்

  வாழ்த்துக்கள் அக்கா

  விஜய்

  ReplyDelete
 10. உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம். குழந்தைகளே வாழ்வின் பொக்கிஷங்கள், அவர்களை வளர்க்கும் அனுபவம் இறைவன் தந்த பேரானந்தம், சந்திக்கும் சிரமங்கள் இன்பம் தரும் சவால்கள் என்கிற உணர்வும் புரிதலும் வந்து விட்டால் சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.


  .......அக்கா, அழகாக அறிவுரை தந்து இருக்கீங்க..... இருவரும் பொக்கிஷங்கள் தான்.

  ReplyDelete
 11. நல்ல பதிவு ராமலக்ஷ்மி.

  சின்னக் கண்ணன் ஆனாலும் செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள் தாம்.

  அருமையான வரிகள்.

  பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் சமூகம் திருந்த பிராத்திப்போம்.

  ReplyDelete
 12. ம்ம்.. என்னைப் போல பெண் குழந்தைக்கு ஏங்குறவங்களுக்குத்தான் அருமை தெரியும்!!

  ReplyDelete
 13. //சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.//

  அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா..

  இங்க கூட வெளிநாட்டவரகளுக்கு, குறிப்பா ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு, அவசியம் இல்லைனா என்னகுழந்தைன்னு சொல்றதில்லைன்னு கேள்விப்பட்டேன்.. எவளவு தூரம் உண்மைன்னு தெரியலை.

  இது ஒரு சாபக்கேடு :((((

  ReplyDelete
 14. என்ன படித்திருந்தாலும், படிப்பறிவே இல்லாத குடும்பமாக இருந்தாலும் அவரவர் சக்திக்கு மீறிய அளவில் சீர் செய்துதான் பெண்ணை திருமணம் செய்து தரவேண்டியிருக்கிறது. ஐந்தாயிரம் சம்பாதிப்பவன் தன் பெண்ணை, இருபதாயிரம் ரூபாயாவது சம்பாதிக்கும் இடத்தில்தான் வாழ வைக்க விரும்புகிறான். பேராசை என்பது பிள்ளையைப் பெற்றவர்களிடம் மட்டுமல்ல. பெண்ணைப் பெற்றவர்களிடமும் இருக்கிறது.

  வரும் முன் காப்போம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது பெண் இனத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் நிலைக்கு கொண்டுசெல்வது வேதனையான விஷயம் மட்டுமல்ல. தடுக்க வேண்டிய விஷயமும்தான். உலகை விருத்தி செய்யும் இவர்களை அழித்துவிட்டு ஆளில்லா கடையில் டீ ஆற்றலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. பெண்களை அழித்துவிட்டால் டீ ஆற்ற ஆண்களும் இருக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

  பெண் சிசுக்களை பெரும்பாலானோர் விரும்பாததற்கு முக்கிய காரணம், வரதட்சணைதான். அதை வேண்டாம் என்றால் ஆணின் உடல் தகுதியை சந்தேகப்படும் போக்கும் பெண் வீட்டாரிடம் இருக்கிறது.இதற்கு பயந்தே பலரும் எதையாவது கேட்டு வைக்கிறார்கள்.

  என் பார்வையில் இந்த சமுதாய சிக்கலை ஒரே உத்தரவில் சரிசெய்து விட முடியாது. படிப்படியான மன மாற்றம்தான் மருந்தாக முடியும். என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 15. படிச்சவங்க மத்தில தான் இந்த பாகுபாடு நிறைய்ய இருக்கு. இதுனால எதிர்காலத்துல ஆண் பெண் விகிதம் குறஞ்சு போயி பையன்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பெண் தேடி தேவுடு காக்க போறாங்க. இப்பவே அதான் நெலமை. :))

  ReplyDelete
 16. அருமை ராமலெக்ஷ்மி .. பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே..:))

  ReplyDelete
 17. எனக்கென்னவோ இப்போது சிசுக் கொலைகள் இல்லையென்றே தோணுகிறது.
  குழந்தை பிறக்கும் முன்னரே அது ஆணா இல்லை பெண்ணா என்று அறியும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். அதற்காக அவர்கள் பெண் என்றால் கலைத்துவிடுவதற்குத்தான் முயல்வார்கள் என்றும் சொல்லமுடியாது.
  ஒருவேளை சிசுக்கொலைகள் இன்னும் இருந்தால், மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும். அதுவும் போகப் போக முழுவதும் இல்லமாலே போய்விடும்.
  நல்ல பதிவு

  ReplyDelete
 18. இன்னமும் இப்படி நடப்பதை அறிந்து வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை ஆர்வம் காரண்மாக இருந்தால் இதை மன்னிக்கலாம். கள்ளிப் பால் கேசாக இருந்தால் விடியலுக்கு நிறைய நாள் இருக்குன்னு தான் சொல்லணும் ராமலக்ஷ்மி,.

  ReplyDelete
 19. தமிழ் பிரியன் said...
  //Nice post!//

  நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 20. kggouthaman said...
  //நூற்றுக்கு நூறு எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். எனக்குத் தெரிந்தவரையிலும், பெண் சிசு உதாசீன போக்கு அதிகம் படிப்பறிவு இல்லாத கிராமப்புறங்களில்தான் அதிகம் காணப்படுகின்றது. எங்கள் வீட்டில் வேலை செய்கின்ற பெண்மணி, சமீபத்தில் அவருடைய தங்கையின் பிரசவம் பற்றி கூறிய தகவலும் இதை உறுதிப்படுத்தியது.//

  மேற்சொன்ன சம்பவம் பெருநகரமான பெங்களூரில். அப்படியிருக்க கிராமங்களில் கேட்கவே வேண்டாம். மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். தங்கள் முதல் வருகைக்கு நன்றி கெளதமன்.

  ReplyDelete
 21. அபி அப்பா said...
  //நல்ல கட்டுரை. நல்ல படம்!//

  நன்றி அபி அப்பா. படத்துக்கான பாராட்டு கருவாயன் அவர்களைச் சேரும்:)!

  ReplyDelete
 22. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //14,000 ஏ அப்பா.. பின்னால் செலவுன்னு பெண்ணை நினைப்பதால் இவ்ளோ குடுத்து சோதிச்சிக்கிறாங்களா..
  அநியாயமப்பா..//

  அப்படியான எண்ணம்தான் போலிருக்கிறது. நன்றி முத்துலெட்சுமி!

  ReplyDelete
 23. அப்பாவி தங்கமணி said...
  //Very nice post//

  நன்றி புவனா.

  ReplyDelete
 24. நசரேயன் said...
  //நல்ல கட்டுரை//

  நன்றி நசரேயன்.

  ReplyDelete
 25. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //அருமையான இடுகை.//

  நன்றிகள் புவனேஸ்வரி.

  ReplyDelete
 26. அம்பிகா said...
  //படிக்கும் போதே வேதனை வருகிறது. இன்னும் இந்த கொடுமை மாறவில்லை என்பது அவமான கரமான விஷயம். நல்ல பகிர்வு.//

  செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய நிறைய உள்ளது. நன்றி அம்பிகா.

  ReplyDelete
 27. ப்ரியமுடன் வசந்த் said...
  //அவசியமும் ஆழ்ந்த கருத்துகளையும் உடைய கட்ட்டுரை..

  //ஆண்களும், தன்னைச் சுமந்தவளும் ஆளாக்கியவள் பெண்ணாயிருக்க, தன் தேவைகளை நிறைவேற்றக் கரம் பிடித்தவள் பெண்ணாயிருக்க ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருப்பதும் வளர்ப்பதும் சிரமம் என்கிற எண்ணத்தை கைவிட வேண்டும்.//

  கண்டிப்பா//

  கருத்துக்கு நன்றி வசந்த்.

  ReplyDelete
 28. Mrs.Menagasathia said...
  //good post!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 29. ஆயில்யன் said...
  //இன்னும் கூட இது போன்ற மனிதர்கள் உலாவுகின்றனர் என்பதை நினைத்தால் :(//

  நினைத்தால்... எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் நாம் எனும் குழப்பமே விஞ்சுகிறது:(! நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 30. ஈரோடு கதிர் said...
  //நல்ல பகிர்வு//

  நன்றி கதிர்.

  ReplyDelete
 31. அமைதிச்சாரல் said...
  //அருமையான பகிர்வு ராமலஷ்மி. பெண்ணாக இருப்பவளே பெண் வேண்டாம்ன்னு நினைக்கிறதும், நினைக்க வைப்பதும்தான் கொடுமையின் உச்சக்கட்டம்...//

  ஆமாங்க பெண்களின் பங்கும் இதில் இருப்பது மிகவும் வேதனையான ஒன்று.

  ReplyDelete
 32. நானானி said...
  //அந்த 14,000-த்தை ஸ்கேன் பார்ப்பதற்குப் பதிலாக அப்போதே பாங்கில் ஃபிக்ஸ்ட் டெபாஸிடாகப் போட்டால் குழந்தை வளர்ந்து பெரியவளாகும் போது ஒரு பெருந்தொகை கைக்குக் கிடைக்குமே!!!//

  பலமடங்கு கொடுத்து ஸ்கேன் செய்து கொள்ளும் போதே இந்த விஷயத்தில் அவர்களின் தீவிரம் புரிந்து போகிறதே:(!

  கருத்துக்கு நன்றி நானானி.

  ReplyDelete
 33. விஜய் said...
  //பெண் சிசுகொலை அவசியம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று

  பெண் சிசுக்களை திசுக்களை போல் காப்போம்

  வாழ்த்துக்கள் அக்கா//

  நல்லது. நன்றி விஜய்.

  ReplyDelete
 34. நல்ல பதிவு....பெண்குழாந்தைகளை அழிக்கப்போய்தான் இன்று பெண்சிசு பிறப்பு மிகவும் குறைந்துவிட்டது.. .

  ReplyDelete
 35. Chitra said...
  //உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம். குழந்தைகளே வாழ்வின் பொக்கிஷங்கள், அவர்களை வளர்க்கும் அனுபவம் இறைவன் தந்த பேரானந்தம், சந்திக்கும் சிரமங்கள் இன்பம் தரும் சவால்கள் என்கிற உணர்வும் புரிதலும் வந்து விட்டால் சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.


  .......அக்கா, அழகாக அறிவுரை தந்து இருக்கீங்க..... இருவரும் பொக்கிஷங்கள் தான்.//

  கருத்துக்கு நன்றி சித்ரா.

  ReplyDelete
 36. தியாவின் பேனா said...
  //super//

  நன்றி தியாவின் பேனா.

  ReplyDelete
 37. இந்தப் பாகுபாடு எப்பதான் மாறுமோ தெரியல.

  //பல இடங்களில் மகன்களுடனே வாழ்ந்தாலும் கூட மனதால் தனிமைப்பட்டுப் போய் ஆதரவாய் தோள் சாய மகள்களின் தோள் தேடும் பெற்றோரும் உள்ளனர். இது போல் மனப்பாரம் இறக்கி வைக்க மகள்கள் இல்லாது போனார்களே என எண்ணி ஏங்கும் தம்பதியரும் உள்ளனர்.//

  இது அநேகர் வீடுகளில் காணக்கிடைக்கிற நிஜம் அக்கா.

  சிறப்பான பதிவு.

  ReplyDelete
 38. கோமதி அரசு said...
  //நல்ல பதிவு ராமலக்ஷ்மி.

  சின்னக் கண்ணன் ஆனாலும் செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள் தாம்.

  அருமையான வரிகள்.

  பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் சமூகம் திருந்த பிராத்திப்போம்.//

  நிச்சயமாய். நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 39. ஹுஸைனம்மா said...
  //ம்ம்.. என்னைப் போல பெண் குழந்தைக்கு ஏங்குறவங்களுக்குத்தான் அருமை தெரியும்!!//

  என்னையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்:)! நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 40. சுசி said...
  ***//சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.//

  அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா..

  இங்க கூட வெளிநாட்டவரகளுக்கு, குறிப்பா ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு, அவசியம் இல்லைனா என்னகுழந்தைன்னு சொல்றதில்லைன்னு கேள்விப்பட்டேன்.. எவளவு தூரம் உண்மைன்னு தெரியலை.

  இது ஒரு சாபக்கேடு :((((***

  ஆம். மேலும் நீங்கள் தந்திருக்கும் தகவல் அங்கும் நம் மக்களைப் பற்றி புரிந்து, முன் சாக்கிரதையாய் செயல்படுகிறார்கள் மருத்துவர்கள் என்றே எண்ண வைக்கிறது.

  நன்றி சுசி.

  ReplyDelete
 41. திருவாரூரிலிருந்து சரவணன் said...
  //வரும் முன் காப்போம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது பெண் இனத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் நிலைக்கு கொண்டுசெல்வது வேதனையான விஷயம் மட்டுமல்ல. தடுக்க வேண்டிய விஷயமும்தான். உலகை விருத்தி செய்யும் இவர்களை அழித்துவிட்டு ஆளில்லா கடையில் டீ ஆற்றலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. பெண்களை அழித்துவிட்டால் டீ ஆற்ற ஆண்களும் இருக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.//

  அப்படியான சுயநல நோக்குடனாவது மாற்றங்கள் வரட்டும். மேலும் நீங்கள் சொன்னதுபோல இருதரப்பினரிடமும் தவறுகள் உள்ளனவே. வறுமை, வரதட்சணை என பல காரணங்கள். ஆனால் குழந்தைகளை இதுபோன்ற பொருளாதார ரீதியான காரணங்களுக்காக பாகுபடுத்துவது கேவலமானது எனும் சிந்தனை முதலில் வர வேண்டும்.

  //என் பார்வையில் இந்த சமுதாய சிக்கலை ஒரே உத்தரவில் சரிசெய்து விட முடியாது. படிப்படியான மன மாற்றம்தான் மருந்தாக முடியும். என்று தோன்றுகிறது.//

  அந்த நாளுக்காகக் காத்திருக்க வேண்டியதுதான். விரிவான கருத்துக்கு நன்றி சரவணன்.

  ReplyDelete
 42. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //அருமை ராமலெக்ஷ்மி .. பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி தங்கமே..:))//

  நல்லாச் சொன்னீர்கள். நன்றி தேனம்மை.

  ReplyDelete
 43. "உழவன்" "Uzhavan" said...
  //எனக்கென்னவோ இப்போது சிசுக் கொலைகள் இல்லையென்றே தோணுகிறது.//

  அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் இப்போது. கடந்த ஆண்டு கூட மதுரையில் ஒரு நிகழ்வு. முன்னை விடக் குறைந்திருப்பது உண்மையே. ஆனால் அதற்கு மாற்றுவழியாக அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பதே மேற்கண்ட முறை போலுள்ளது:(!

  //குழந்தை பிறக்கும் முன்னரே அது ஆணா இல்லை பெண்ணா என்று அறியும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். அதற்காக அவர்கள் பெண் என்றால் கலைத்துவிடுவதற்குத்தான் முயல்வார்கள் என்றும் சொல்லமுடியாது.//

  ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். அதை புரிந்து கொண்டு சில நேரங்களில் மருத்துவரே கூட பிரசவம் நெருங்குகையில் குடும்பத்தினரிடம் தெரிவிப்பதும் உண்டு. அது வேறு வகை.

  ஆனால் கருவுற்ற ஆரம்பக் காலத்திலே அவசரமாய், சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் ஸ்கேன் செண்டர்களில், அதிக பணம் கொடுத்த செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? மேல் குறிப்பிட்ட சம்பவம் பெங்களூர் ஜெயநகரிலுள்ள பிரபல ஸ்கேன் செண்டரில் நடந்துள்ளது. தொடர்ந்து 56 இடங்களில் இதுபோல நடந்தது கண்டுபிடிக்கப் பட்டு, கருவிகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. Times of India-வில் ஜூன் 12 மூன்றாம் பக்கம் வெளியான செய்தி இது. இணையத்தில் லிங்க் தேடினேன் கிடைக்கவில்லை. அதை வாசித்தால் செய்தியின் தீவிரம் பிடிபடக் கூடும்.

  //ஒருவேளை சிசுக்கொலைகள் இன்னும் இருந்தால், மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும். அதுவும் போகப் போக முழுவதும் இல்லமாலே போய்விடும்.
  நல்ல பதிவு//

  நல்வாக்கு பலிக்கட்டும். நன்றி உழவன்.

  ReplyDelete
 44. வல்லிசிம்ஹன் said...
  //இன்னமும் இப்படி நடப்பதை அறிந்து வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை ஆர்வம் காரண்மாக இருந்தால் இதை மன்னிக்கலாம். கள்ளிப் பால் கேசாக இருந்தால் விடியலுக்கு நிறைய நாள் இருக்குன்னு தான் சொல்லணும் ராமலக்ஷ்மி,.//

  ஆர்வம்... பதிவர் உழவனுக்கு நான் தந்திருக்கும் பதில் அதை தெளிவு படுத்தக் கூடுமென நினைக்கின்றேன். விடியலுக்கு நிறைய நாள் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறதே! நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 45. தமிழ் மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 22 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 46. கண்ணகி said...
  //நல்ல பதிவு....பெண்குழாந்தைகளை அழிக்கப்போய்தான் இன்று பெண்சிசு பிறப்பு மிகவும் குறைந்துவிட்டது..//

  கருத்துக்கு நன்றி கண்ணகி.

  ReplyDelete
 47. சுந்தரா said...
  ***/இந்தப் பாகுபாடு எப்பதான் மாறுமோ தெரியல.

  //பல இடங்களில் மகன்களுடனே வாழ்ந்தாலும் கூட மனதால் தனிமைப்பட்டுப் போய் ஆதரவாய் தோள் சாய மகள்களின் தோள் தேடும் பெற்றோரும் உள்ளனர். இது போல் மனப்பாரம் இறக்கி வைக்க மகள்கள் இல்லாது போனார்களே என எண்ணி ஏங்கும் தம்பதியரும் உள்ளனர்.//

  இது அநேகர் வீடுகளில் காணக்கிடைக்கிற நிஜம் அக்கா.

  சிறப்பான பதிவு./***

  மிக்க நன்றி சுந்தரா.

  ReplyDelete
 48. வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
  வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


  சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
  சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
  பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

  ReplyDelete
 49. நேரமின்மையால் இப்போதுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.

  ஏற்கனவே திண்ணையில் வாசித்து பெருமைப்பட்டுக்கொண்டேன் அக்கா.வாழ்த்துகள்.

  ReplyDelete
 50. ambi said...
  //படிச்சவங்க மத்தில தான் இந்த பாகுபாடு நிறைய்ய இருக்கு. இதுனால எதிர்காலத்துல ஆண் பெண் விகிதம் குறஞ்சு போயி பையன்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பெண் தேடி தேவுடு காக்க போறாங்க. இப்பவே அதான் நெலமை. :))//

  நல்ல கவலை:)! சரவணனும் இதையே சொல்லியுள்ளார். சுயநல நோக்குடனாவது மக்கள் திருந்தட்டும்.

  ReplyDelete
 51. @ sweatha,

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 52. ஹேமா said...
  //நேரமின்மையால் இப்போதுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.

  ஏற்கனவே திண்ணையில் வாசித்து பெருமைப்பட்டுக்கொண்டேன் அக்கா.வாழ்த்துகள்.//

  அன்புக்கு மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 53. என்ன குழந்தையாக இருந்தால் என்ன? என்றுதான் நம் மக்கள் திருந்துவார்களோ ?

  ReplyDelete
 54. எத்தனை காலம் போனாலும் இந்தக் கொடுமை மட்டும் மாறவில்லை என்பது வருத்தத்தைத்தான் தருகிறது. கிராமப் புறங்களில் மட்டுமல்லாது நகர்ப் புறங்களிலும் இது இருப்பது கொடுமை.

  ReplyDelete
 55. சிந்தனையைத் தூண்டும்..
  நிந்தனையைப் போக்கும் அருமையான பதிவு!

  ReplyDelete
 56. அவசியமும் ஆழ்ந்த கருத்துகளையும் உடைய கட்ட்டுரை.


  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 57. குழந்தை ஆணா பெண்ணா - ஸ்கென் ரிபோர்ட் என்றதும் முன்பு படித்த ஜோக் நினைவு வந்தது. உங்கள் பதிவைப் பார்த்ததும் எழுத நினைத்தேன். இரண்டு நாளாக ஆபீஸ் வேலை, கரெண்ட் கட் என்றானதால் முடியவில்லை.
  டாக்டர் ஒரு கர்ப்பிணியை பரிசோதனைக்காக ஸ்கேன் செய்து உனக்கு இரட்டைக் குழந்தைகள் என்றார். அந்தப் பெண் கேட்டாள் "ஆணா பெண்னா ? அதை நான் சொல்லக் கூடாது என்றார் டாக்டர். அவள் தந்திரமாக கேட்டாள், "இரண்டும் ஒரே இனம்தானே? அதையாவது சொல்லுங்கள்"
  டாக்டரின் பதில், "இல்லை"
  சகாதேவன்

  ReplyDelete
 58. அருமையான பதிவு ராமலக்ஷ்மி !

  ReplyDelete
 59. சிங்கக்குட்டி said...
  //என்ன குழந்தையாக இருந்தால் என்ன? என்றுதான் நம் மக்கள் திருந்துவார்களோ ?//

  அதே ஆதங்கமே. நன்றி சிங்கக்குட்டி.

  ReplyDelete
 60. ஸ்ரீராம். said...
  //எத்தனை காலம் போனாலும் இந்தக் கொடுமை மட்டும் மாறவில்லை என்பது வருத்தத்தைத்தான் தருகிறது. கிராமப் புறங்களில் மட்டுமல்லாது நகர்ப் புறங்களிலும் இது இருப்பது கொடுமை.//

  படித்தவர் படிக்காதவர் எனும் பாகுபாடுமில்லை இந்த விஷயத்தில். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 61. அண்ணாமலை..!! said...
  //சிந்தனையைத் தூண்டும்..
  நிந்தனையைப் போக்கும் அருமையான பதிவு!//

  நன்றி அண்ணாமலை.

  ReplyDelete
 62. சே.குமார் said...
  //அவசியமும் ஆழ்ந்த கருத்துகளையும் உடைய கட்ட்டுரை.


  நல்ல பகிர்வு.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 63. @ சகாதேவன்,

  தாமதமானாலும் நினைத்ததை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. சாமர்த்தியசாலிதான் அந்தப் பெண். டாக்டர்:)?

  ReplyDelete
 64. James Vasanth said...
  //அருமையான பதிவு ராமலக்ஷ்மி !//

  நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete
 65. என்றுதான் மாறுமோ? நல்ல கட்டுரை.

  ReplyDelete
 66. That is one of the lovliest photographs I 've ever seen !!!Whoever took it hats off to him / her !!
  " பெண் " அருமையும் அழகும் புரிபவர்களுக்குத்தான் புரியும்!நம்ப சொஸைட்டி திருந்தும்ங்கறீங்க? திருந்தும் என்கிற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுப்போய்க்கொண்டிருக்கிறது:(( என் அம்மா சொல்கிறார் இப்ப கல்யாணம் பண்ணனும்னா பெண் தட்டுப்பாடு 1) நம்பர் குறைவுனால 2) பெண்களோட எதிபார்ப்புகளினால என்று!!- அதுவும் இருக்கு:)

  ReplyDelete
 67. @ மாதேவி,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 68. @ Jayashree,
  //That is one of the lovliest photographs I 've ever seen !!!//

  எனக்கும் அதே உணர்வே!

  //Whoever took it hats off to him / her !!//

  சுரேஷ்பாபு எடுத்த படம். ஃப்ளிக்கர் சுட்டியும் தந்திருக்கிறேன் பாருங்கள்.

  //பெண்களோட எதிபார்ப்புகளினால என்று!!- அதுவும் இருக்கு:)//

  மறுப்பதற்கில்லை. கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 69. நல்ல பகிர்வு மேடம்.

  /*உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது.*/
  உண்மை.

  ReplyDelete
 70. @ அமுதா,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 71. //சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.//

  அருமையான கட்டுரை.

  ReplyDelete
 72. @ ஜிஜி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 73. அருமையான கருத்துக்கள்! ஒரு மாத இதழிலோ வார இதழிலோ இந்தக் கருத்துக்கள் வெளியாகியிருந்தால் இன்னும் நிறைய பேரை இக்கருத்துக்கள் சென்றடைந்திருக்கும்! அந்தப் புகைப்படம் இலேசான சோகத்துடன் தாக்குகிறது!

  ReplyDelete
 74. @ மனோ சாமிநாதன்,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 75. நல்ல கட்டுரை. வலை சரத்தில் குறிப்பிட்ட பிறகு இப்போது தான் வாசித்தேன். கடைசி பாரா மிக அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin