சனி, 6 அக்டோபர், 2018

அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - கொல்கத்தா (3)

#1

றுபத்து நான்கு ஏக்கர்கள் பரப்பளவில், பரந்து விரிந்த மலர்த் தோட்டங்களுடன் கூடிய விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial),
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஜவஹர்லால் நேரு சாலை அருகே, ஹூக்ளி நதிக்கரையோரத்தில் உள்ளது.

#2

1819–1901 வரை வாழ்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இந்த பளிங்கு மாளிகை, 1906-1921 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜார்ஜினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்நினைவிடம் பிரிட்டிஷ் அரசின் வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. விக்டோரியா மகராணி இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

#3#4

#5
ராணியின் உருவச் சிலை..

#6
எங்கெங்கே சிலைகள் உண்டோ அங்கெல்லாம் காகங்களும்..


கொல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக இருந்திருக்கிறது என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். அப்போதைய வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு, இத்தாலிய மறுமலர்ச்சி பாணியில் இக்கட்டிடத்தை வடிவமைக்கத் திட்டமிட்டிருந்தார். ஆயினும் பிரபல கட்டிடக் கலை நிபுணரான வில்லியம் எமர்சன் உண்மையான திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டு பிரிட்டிஷ் மற்றும் முகலாயக் கட்டிடக் கலையின் கலவையாக, இந்தோ-சாராசனிக் பாணியில் பிரமிக்கத் தக்க வகையில் இதன் கட்டுமானத்தை உருவாக்கினார்.

#7

#8


#9
கர்சன் பிரபு

இதன் கட்டுமானத்திற்கு இலண்டன் பிரிட்டிஷ் அரசு மட்டுமே நிதி வழங்கவில்லை. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மாநிலங்களும், தனிநபர்களும் பங்களிக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். இதன் பிரதான மண்டபம் 338 X 228 அடி அளவிலும், உயரம் 184 அடி அளவிலும் உள்ளது. 

#10
அழகிய கட்டிடக் கலை


லார்க் ரெடெஸ்டேல் மற்றும் டேவிட் பிரெயின் ஆகியோர் தோட்டங்களை வடிவமைக்க, வின்சன்ட் எஸ்ச் கட்டடக் கலைஞர் மேற்பார்வை செய்ய, கட்டமைப்புப் பணிகள் கல்கத்தாவைச் சேர்ந்த மெஸ்ஸ்ர்ஸ் மார்ட்டின் & கோவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

#11
பிரதான மாடம்

கைகளில் குழலுடன் இருக்கும் 16 அடி உயர வெற்றி தேவதை ஒன்றின் கருப்பு வெண்கலச் சிலை, நினைவிடத்தின் நடுவே உள்ள பிரதான மாடத்தின் முகட்டின் மேல்,  இடம் பெற்றுள்ளது. இது ஒரு பந்து கோளம் கொண்ட தாங்கியுடன் (ball bearing) அதன் பீடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது, போதுமான வேகத்தில் காற்றடிக்கும் போது காற்றுத் திசைகாட்டியாகவும் செயல்பட்ட இது தற்போது வேலைபார்க்கிறதா எனத் தெரியவில்லை. 1978 ஆம் ஆண்டில் அது நின்று போனது கவனிக்கப்பட்டதாகச் செய்திக் குறிப்புகள் சொல்கின்றன.

#12
வெற்றி தேவதை

இந்நினைவிடத்தின் அருமையான கட்டமைப்பு வியக்கவும் பாராட்டவும் ரசிக்கவும் வைக்கிறது.

#13
மாலை மஞ்சள் வெயிலில் மிளிரும்  கட்டிடம்..


#14
மற்றொரு பக்கத்திலிருந்து மாளிகை


#15
மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களின் வரிசை..


கட்டிடங்களின் மற்றும் உள்ளிருக்கும் அருங்காட்சியகத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளைத் தவிர்த்து ஏராளமான உள்ளூர் வாசிகள் மாலைப் பொழுதை அங்கிருக்கும் நீர்நிலையைச் சுற்றி அமைந்த பூங்காவில் அமைதியாகக் கழிப்பதற்காக வந்திருப்பதைக் காண முடிந்தது. 

#16


#17

மேலும் பல தகவல்களையும் கூடியிருந்த மக்களில் சிலரையும் அடுத்த பாகத்தில் விரைவில் காணலாம்:).

( தொடரும்)

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ரவீந்திர சேது - கொல்கத்தா (1)
பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2) 

8 கருத்துகள்:

 1. கட்டுமானத்தின் பிரமாண்டம், கலை நுணுக்கம் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். தொழில்நுட்ப குறிப்புகளையும் (bearing) இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அழகான படங்கள். அருமையான விவரங்கள்.
  நாங்கள் போய்வந்த நினைவுகள் மனதில் வந்து சென்றது.

  பதிலளிநீக்கு
 3. வெகு நாள்களாக நான் பார்க்க ஆசைப்படுகின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. நேரில் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் அந்த நாள் வாய்க்கட்டுமாக. மிக்க நன்றி.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin