#1
பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கொல்கத்தா. மக்கள் தொகையில் நான்காவது இடம். மேற்கு வங்கத்தின் தலைநகரம். உலக அளவிலும் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகத் திகழ்கின்றது.
கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், எப்படி வந்தது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், காளிகத்தா (காளி மாதாவின் இடம்) எனும் பொருளில் ஏற்பட்டதென்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. வங்க மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்ததால் அதுவே அதிகாரபூர்வப் பெயராக இருந்து வந்தது. பிறகு 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரப்பூர்வப் பெயராக அறிவிப்பானது.
#2
இலங்கைப் பயணம் போல இதுவும் ஒரு குறுகிய காலப் பயணமே.
இரண்டு வருடங்களுக்கு முன் மகனின் பட்டமேற்பு நிகழ்வுக்காக பெங்களூரிலிருந்து விமானத்தில் ராஞ்சி சென்று, அங்கிருந்து சாலை வழியாக ஜம்ஷெட்பூர் சென்றிருந்தோம். அப்போது கால அவகாசம் இல்லாத நிலையில் 'ஒன்றரை நாளானாலும் பரவாயில்லை, முடிந்ததைப் பார்க்கலாம், கொல்கத்தா வழியாகத் திரும்பலாம்’ என நான் சொல்ல, டாடாநகரில் இருந்து இரயிலில் கொல்கத்தா வந்து, விமானத்தில் பெங்களூர் திரும்ப முடிவாயிற்று.
#3
ஹூக்ளி நதி மேல் கட்டப்பட்ட ஹெளரா-கொல்கத்தா நகரங்களை இணைக்கும் ஹெளரா பாலத்தை முழுமையாகத் தொலைவிலிருந்து படமாக்க வேண்டுமெனில் அதற்காக மட்டுமே நேரம் ஒதுக்கி நகரின் எங்கோ ஒரு மூலைக்குப் போக வேண்டும் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. போகட்டுமென, இரயில் நிலையத்திலிருந்து ஹெளரா பாலம் வழியாகச் செல்லும் போது டாக்ஸிக்குள் இருந்து ஓரிரு படங்கள் எடுத்துத் திருப்திப் பட்டுக் கொண்டேன்.
#4
நட், போல்ட் இல்லாமல் முழு அமைப்பும் அப்படியே இரும்பை உருக்கிச் செய்யப்பட்டவை. 26500 டன் இரும்பு தேவைப்பட்டிருக்கிறது. அதில் 23000 டன் டாடா ஸ்டீல் நிறுவனத்தால் வழங்கப் பட்டிருக்கிறது. 1943_ஆம் ஆண்டு கட்டப்பட்டக் காலத்தில் உலகிலேயே மூன்றாவது நெடும்பாலமாக இருந்திருக்கிறது. தற்போது ஆறாம் இடத்தில் இருக்கிறது. Cantilever எனப்படும் ஒருபக்கம் மட்டுமே பிடிமானம் கொண்ட இந்தத் தொங்குபாலம் ஒரு நாளில் இலட்சத்துக்கும் மேலான வாகனங்களும், ஒன்றரை இலட்சத்துக்கும் மேலான பாதசாரிகளும் கடந்து செல்கிற, உலகின் ஓயாத போக்குவரத்து கொண்ட பாலங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக 14 ஜூன் 1965_ல் இப்பாலத்துக்கு “ரவீந்திர சேது” எனப் பெயரிடப்பட்டது என்றாலும் ஹெளரா பாலமாகவே பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது.
#5
ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக இருந்தது. அந்த சமயத்தில் கல்வி, இலக்கியம், அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் என அனைத்திலும் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றிருக்கிறது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி வந்ததாகக் கூறப்பட்டாலும், பிற இந்தியப் பெரு (மெட்ரோ) நகரங்களோடு ஒப்பிடுகையில் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல் என நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடு.
#6
நகரத்தின் ஒரு சில பக்கங்கள் நவீனமாகத் தெரிந்தாலும் பொதுவாகப் பல இடங்களில் கட்டிடங்கள் அழுக்கடைந்தாற் போல, பராமரிப்பில் அக்கறை காட்டப்படாமல் காட்சி அளித்தன.
#7
மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத சேரிகளில் வாழ்கின்றனர்.
#8
மேற்கு வங்கம் என்றதும் தாகூர் நினைவுக்கு வருவது போல கொல்கத்தா என்றால் அன்னை தெரஸா நினைவுக்கு வருகிறார் அல்லவா? இங்கே காளிகட் சாலையில் அமைந்திருக்கும் அன்னை தெரஸா அமைப்பின் கட்டிடமும், அதற்கு வருகை தரும் உறுப்பினரும்..
#9
#10
வழக்கம் போலவே இணையத்தில் சேகரித்த சில தகவல்களோடு அனுபவமும் சேர்ந்த பகிர்வுகளாக, அடுத்தடுத்த பாகங்கள் விரைவில்..! குறிப்பாக கொல்கத்தாவின் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பிர்லா மந்திர், காளிகட், விக்டோரியா நினைவிடம் ஆகிய இடங்கள் பற்றி நான் எடுத்த படங்களோடு..!
(தொடரும்)
பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கொல்கத்தா. மக்கள் தொகையில் நான்காவது இடம். மேற்கு வங்கத்தின் தலைநகரம். உலக அளவிலும் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகத் திகழ்கின்றது.
கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், எப்படி வந்தது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், காளிகத்தா (காளி மாதாவின் இடம்) எனும் பொருளில் ஏற்பட்டதென்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. வங்க மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்ததால் அதுவே அதிகாரபூர்வப் பெயராக இருந்து வந்தது. பிறகு 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரப்பூர்வப் பெயராக அறிவிப்பானது.
#2
இலங்கைப் பயணம் போல இதுவும் ஒரு குறுகிய காலப் பயணமே.
இரண்டு வருடங்களுக்கு முன் மகனின் பட்டமேற்பு நிகழ்வுக்காக பெங்களூரிலிருந்து விமானத்தில் ராஞ்சி சென்று, அங்கிருந்து சாலை வழியாக ஜம்ஷெட்பூர் சென்றிருந்தோம். அப்போது கால அவகாசம் இல்லாத நிலையில் 'ஒன்றரை நாளானாலும் பரவாயில்லை, முடிந்ததைப் பார்க்கலாம், கொல்கத்தா வழியாகத் திரும்பலாம்’ என நான் சொல்ல, டாடாநகரில் இருந்து இரயிலில் கொல்கத்தா வந்து, விமானத்தில் பெங்களூர் திரும்ப முடிவாயிற்று.
#3
ஹூக்ளி நதிக் காற்றை வாங்கியபடி பாலத்தின் நடைபாதையில் அதிகாலை நடைப் பயிற்சி |
#4
#5
ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக இருந்தது. அந்த சமயத்தில் கல்வி, இலக்கியம், அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் என அனைத்திலும் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றிருக்கிறது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி வந்ததாகக் கூறப்பட்டாலும், பிற இந்தியப் பெரு (மெட்ரோ) நகரங்களோடு ஒப்பிடுகையில் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல் என நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடு.
#6
நகரத்தின் ஒரு சில பக்கங்கள் நவீனமாகத் தெரிந்தாலும் பொதுவாகப் பல இடங்களில் கட்டிடங்கள் அழுக்கடைந்தாற் போல, பராமரிப்பில் அக்கறை காட்டப்படாமல் காட்சி அளித்தன.
#7
மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பதிவு செய்யப்பட்ட, செய்யப்படாத சேரிகளில் வாழ்கின்றனர்.
#8
மேற்கு வங்கம் என்றதும் தாகூர் நினைவுக்கு வருவது போல கொல்கத்தா என்றால் அன்னை தெரஸா நினைவுக்கு வருகிறார் அல்லவா? இங்கே காளிகட் சாலையில் அமைந்திருக்கும் அன்னை தெரஸா அமைப்பின் கட்டிடமும், அதற்கு வருகை தரும் உறுப்பினரும்..
#9
#10
வழக்கம் போலவே இணையத்தில் சேகரித்த சில தகவல்களோடு அனுபவமும் சேர்ந்த பகிர்வுகளாக, அடுத்தடுத்த பாகங்கள் விரைவில்..! குறிப்பாக கொல்கத்தாவின் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பிர்லா மந்திர், காளிகட், விக்டோரியா நினைவிடம் ஆகிய இடங்கள் பற்றி நான் எடுத்த படங்களோடு..!
(தொடரும்)
அழுக்கடைந்த கட்டிடம் படம் கண்டதும் புன்னகை வந்தது. அடடே... இவங்க நம்மாளுங்க!
பதிலளிநீக்குநடைபாதை வியாபாரிகளைக் கண்டால் உங்கள் கேமிரா தானே தயாராகிவிடும் என்று நினைக்கிறேன். கவலையான வியாபாரியின் படம் நன்று.
பதிலளிநீக்குஉண்மைதான்:)!
நீக்குபடங்களையும், விவரங்களையும் ரஸித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஹளரா பாலத்தின் பெயர் ரவீந்திர சேது என்பதை அறிந்தேன்
பதிலளிநீக்குஆனாலும் நம் மக்கள் ரவீந்திரர் பெயரில் அழைக்க மறந்தது வேதனைதான்
படங்கள் அழகோ அழகு
நன்றி சகோதரியாரே
மிக்க நன்றி.
நீக்குமுதலில் உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபடங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
நீங்கள் சொல்வது போல் ஹெளரா பாலத்தை முழுமையாக பார்க்க வெகு தோலைவு சென்றோம்.
கொல்கத்தா பயண்ம் 78ம் வருடம் காசி செல்லும் போது சாரின் அண்ணன் வீட்டில் கொல்கத்தாவில் தங்கி எல்லா இடங்களையும் பார்த்தோம். டிராம், டபுள்டக்கர் பஸ், எஸ்கலேட்டர் முதன்முதலில் அமைத்து இருந்த பாங்க் சென்று அதில் பயத்துடன் பயணித்து மகிழ்ந்தோம்.( இப்போது எல்லா இடங்களிலும் அதில்தான் பயணிக்கிறோம்)
பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. வீடுகள் மிகவும் பழமையாக மரங்கள் வளர்ந்து பார்க்கவே பயமாய் இருக்கும்.
30 வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறீர்கள். பராமரிப்பற்றப் பழமையான கட்டிடங்கள் இன்னமும் பல இடங்களில் உள்ளன. அப்போதே எஸ்கலேட்டர் வந்து விட்டதா? பெங்களூரில் 90களின் தொடக்கத்தில் முதன் முதலாக பிரிகேட் ரோட் மோட்டா சூப்பர் மார்க்கெட்டில் அறிமுகமானது:).
நீக்குஇப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
கருத்துப் பகிர்வுக்கு நன்றி கோமதிம்மா.
அழகான படங்களை பார்க்க மீண்டும் வருகிறேன்.
பதிலளிநீக்குஅழகான படங்கள். பழைய கொல்கத்தா நகரம் இப்படி அழுக்கு என்றால் புதிய நகரம் அழகு. உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளவும், எடுத்த படங்களைப் பார்க்கும் ஆவலுடனும் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபாலம் தகவல்கள் வியக்க வைக்கிறது...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குபல தகவல்களுடன்..மிக தத்துருப படங்கள் அருமை
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்கு