ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

தேடலுடன் ஒரு படைப்பாளி

#1

தேடலுடன் இருக்கும் ஒரு படைப்பாளியின் ஆக்கத்திறன் எவரும் அறிந்திராத பாதைகளில் பயணப்படுகிறது. மனதில் உதிக்கும் கருவினை கேன்வாஸிலோ பேப்பரிலோ வடித்து முடிக்கும் வரை அது சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும். பல விதங்களில் பரீட்சித்துப் பார்ப்பது கலைஞனுக்குப் பிடித்தமான ஒன்று.” என்கிற ஓவியர் வசந்த் ராவ் ஒரு எழுத்தாளரும் கவிஞரும் கூட.  ஆங்கிலத்தில் 3 கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. எழுதிய கட்டுரைகள் பல முக்கிய பத்திரிகைகளில் வந்துள்ளன.

# 2



“முன் எப்போதையும் விட இந்தியச் சித்திரக் கலை மக்களை எளிதாக சென்றடைந்து வருகிறது. ஒரு மனிதன் எங்கெங்கோ பயணப்பட்டு இயற்கை அதிசயங்களையும், புராதானக் கோவில்களையும், பாரம்பரிய மிக்க திருவிழாக்களையும் கண்டு களித்து வரலாம். ஆனால்
ஒரே ஒருமுறை சமகால ஓவியக் கண்காட்சிக்கு சென்று வரட்டும். மரபுகளைத் தாண்டியக் கலவையான உணர்வுகளை, வித்தியாசமான அனுபவத்தை நிச்சயம் பெற்றிட முடியும்.” என அழுத்தமாகச் சொல்கிறார் இந்த ஓவியர்.

அது எவ்வளவு உண்மை என்பதை கடந்த சில வருடங்களில் நான் என் அனுபவத்திலேயே உணர்ந்து விட்டேன். இவரை நான் சந்தித்தது 2011 டிசம்பரில், சித்திரகலா பரிக்ஷ்த்தில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில். வடக்கு வாசல் சிற்றிதழுக்காக பெங்களூர் குறித்த  ஒரு கட்டுரையின் (விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றதும் இழந்ததும்..) தயாரிப்புக்காகவே இக்கண்காட்சிக்குச் சென்று வந்தேன். அதன் பின்னர் தொடர்ந்து வரிசையாக நான் பெங்களூர் சித்திரச் சந்தையில் கலந்து கொள்வதும், யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் எனக் கண்ட காட்சிகளை உங்களோடு பகிர்ந்து வருவதும் ஓவியர்களையும் அவர்களது கை வண்ணங்களையும் ‘சித்திரம் பேசுதடி’ எனும் பகுப்பின் கீழ் தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதும் நீங்கள் அறிந்ததே:). இந்த ஆர்வத்துக்கெல்லாம் பிள்ளையார் சுழியாகக் கொள்ளலாம் நான் முதன் முதலில் சென்ற இந்தக் ஓவியக் கண்காட்சி. அன்றைய தினம் கண்ட சித்திரங்களிலிருந்து உதித்த கவிதையே ‘இருப்பு’.

#3


# 4



“வண்ணத் தீட்டல்களைத் தாண்டி ஒரு ஓவியம் சொல்ல வருகிற கருத்துக்களும், வெளிப்படுத்த விரும்புகிற உணர்வுகளும் முக்கியமானவை.  ஒரு கேன்வாஸ் பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாகத் தீட்டப்பட்டு முழுமை பெறும்போது உருவாகிறது ஓவியம். இது வாழ்க்கைக்கும் அதில் நாம் சந்தித்து வெளிவர வேண்டிய சவால்களுக்கும் ஒப்பானது. ஒவ்வொரு ஓவியமும் ஒரு போர்ட்ரெயிட் போல  படைத்தவனின் ஆன்மாவை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.” என்ற ஓவியர் “தன் படைப்பில் இடம் பெறும் முக்கோணங்கள் நெருப்பின் உருவகம்” எனக் குறிப்பிட்டார்.


நெருப்பின் உருவகம்:

#5


#6

குழந்தைப் பருவம் என்கிற வாசல் இல்லாமல் வாழ்க்கையின் எந்தப் பாதையும் சிறக்காது’ என்று சொல்கிறவர் குழந்தைகளுக்கென்றே எண்ணற்ற ஓவியங்களைப் படைத்திருக்கிறார்.

வீடு, பாதை, மரங்கள், மலை, சூரியன் என குழந்தைகளின் பார்வையில் அவர்களது கற்பனை உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன இந்த அழகான ஓவியங்கள்...

#7



 #8


அப்ஸ்ராக்ட் வகை, பசுக்களைக் கொண்டாடும் ஓவியங்கள், சேவல் சண்டைக் காட்சிகள், விதம் விதமாக விநாயகர், ரித்தி சித்தி ஆகியவை இவரது படைப்புகளில் பேசப்படும் வரிசைகள்.

# 9


#10
விநாயகர்


# 11
பசுக்கள்


#12 ரித்தி சித்தி
 #13



ரு சில குறிப்பிட்ட வகை ஓவியங்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபாடு காட்டி வரும் கலைஞர்களுக்கு மத்தியில் எல்லா வகை ஓவியங்களையும் சவாலாக எடுத்துச் செய்து வருவதே என் தனிப் பாதை என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்’ என்றார். அத்தகு பெருமைக்கு அனைத்து தகுதியும் கொண்டவர் என்பதை ஓவியங்களே சொல்லும்.

#
ஓவியர்: வசந்த் ராவ்
குழுவாகவும் தனியாகவும் பல கண்காட்சிகளில் பங்கு பெற்றிருக்கும் இவருக்கு மாநில அரசின் விருதும் கிடைத்துள்ளது. பயிற்சி பட்டறைகளை நடத்தியுள்ளார்.  உடுப்பி, மங்களூர், பெல்காம், மனிப்பால் ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் உட்பட பல நட்சத்திர விடுதிகள், மருத்துவ மனைகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இண்ட்டீரியர் அலங்காரமாக இவரது சுவர் சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
**



முக்கோண ஓவியங்கள் (படங்கள்: 5,6); சித்தி புத்தி ஓவியங்கள் (படங்கள்:12,13 ) ஆகியன  மட்டும் ஓவியரின் அனுமதியுடன் அவர் தளத்திலிருந்து எடுத்தவை.

***





13 கருத்துகள்:

  1. படைத்தவனின் ஆன்மாவை வெளிப்படுத்தும் ஓவியங்கள் அருமை.

    ஓவியர் வசந்த ராவ் அவர்களுக்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    சேவல்களின் சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. அவற்றிற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த 'இருப்பு' கவிதை உங்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது அல்லவா! நான் ரசித்த கவிதைகளில் ஒன்று!

    //ஒரு கேன்வாஸ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாகத் தீட்டப்பட்டு முழுமை பெறும்போது...//

    ஆச்சர்யம். எப்படி முடிகிறது என்று வியப்பாக உள்ளது. ஓவியர் வசந்த் ராவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ‘இலைகள் பழுக்காத உலகம்’ நூலில் மூன்றாவது கவிதையாக இடம் பெற்றிருக்கும் ‘இருப்பு’. நான் எழுதியவற்றில் எனக்கு மிகப் பிடித்த ஒன்றும் ஆகும் :) .

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஒவ்வொன்றும் வித்தியாசம்...

    திரு. வசந்த ராவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஓவியங்கள்.....ஓவியருக்கு எனது பாராட்டுகள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமை ராமலெக்ஷ்மி. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தேனம்மை. தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்:)!

      நீக்கு
  6. படங்கள் அருமை என்றால் எழுத்து கவிதை போல் காத்திரமாக தெறிக்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin