ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மறுபக்கம் - ஏப்ரல் போட்டி

#1 ஜெய மங்களம்

 .

#2 சுப மங்களம்


மங்களம் பாடி விட்டதால் பதிவு முடிந்து விட்டதெனப் பக்கத்தை மூடி விட வேண்டாம்:). பார்வைக்கு விருந்தாகக் காத்திருக்கின்றன மேலும் 15 படங்கள்.


ஒரு காட்சியின் முன் பக்கம் பெறுகிற முக்கியத்துவத்தை மறுபக்கமும் பல சமயங்களில் பெற்று விடுகிறது. அந்த மறுபக்கத்தை இம்மாதத் தலைப்பாக அறிவித்திருக்கும் நடுவர் ஆன்டன், மறு பக்கங்கள் எதார்த்தமான பார்வையையும் கூடவே ஒரு செய்தியையும் தரவல்லது எனக் கருதுகிறார். எப்படி ஒரு கலைஞனின் பார்வையில்  பூவின் மறுபக்கம்கூட அழகாகிறது என மாதிரிப் படங்களுடன் விளக்கியிருக்கிறார் அறிவிப்புப் பதிவில்.

இங்கே நான் பதிந்திருக்கும் படங்களில் முதல் 7 முன்னர் எங்கும் பகிராதவை. அதிலும் 5, 6 போட்டிக்காக முயன்றவை.  PiT எப்போதும் கேட்டுக் கொள்கிற ஒரு விஷயம்.. போட்டியின் தலைப்புக்காகப் புதிதாகப் படம் எடுங்கள்’ என்பதுதான். சவாலே அதுதான். நமக்கான நல்ல பயிற்சியும் ஆகும். ஆனால் தலைப்புக்குப் பொருத்தமாக ஏற்கனவே எடுத்தது இருப்பின் அதையே போட்டிக்குத் தருவதுதான் பெரும்பாலும் பலர் செய்வது. நானும் விதிவிலக்கல்ல. போட்டியில் கலந்து கொண்ட காலத்தில் பலமுறை அப்படி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது போட்டியின் கடைசித் தேதிக்கான நாள் நெருங்குகையில் உங்களுக்கு நினைவூட்டுவதற்கான இப்பகிர்வுகளுக்காக முடிந்தவரை புதிதாகவும் எடுக்கிறேன்.

#3 திருப்பம்


#4 தன் கையும் தன் காலுமே என்றும் துணை..


உப்புத் தாத்தா” பதிவில் இதே போன்ற படம் ஒன்று உண்டு. ஒரு கையில் கோலப்பொடி மூட்டையும் மற்றொரு கையில் உப்பு மூட்டையுமாக. இந்தப் படத்தில்.. கையிலிருந்த கோலப்பொடி விற்றுத் தீர்ந்திருக்க உப்பு மூட்டை தலையில். சென்ற அக்டோபரில் எடுத்த படம். ஒன்றரை வருட இடைவெளியில் தளரவில்லை இவரது உறுதி.

#5 பொடி நடையாய் கிளம்பி விட்ட பொம்மனும் பொம்மியும்


#6 பரந்த உலகில்.. பயணங்களுக்கு முடிவில்லை..

சுமை
#7

தலைப்புக்குப் பொருத்தமாக என் ஃப்ளிக்கரில் ஸ்ட்ரீமில் தேடியபோது கிடைத்த ஒவ்வொன்றும் சுவாரஸ்யமே.

#8
**


#7 மலரே முகம் காட்டு..

#8 சங்கீத நேரம்


அப்பா
#9 செல்லக் கோபம்

#10 தோளில் செல்லம்
**

அம்மா

#11 கண்ணே பாப்பா

#12 கனிமுத்துப் பாப்பா
**

#13 குறுகுறுப்பு


#14 கூண்டுக் கிளிகள்


#15 புது வசந்தம்

இரு பறவைகள்

#16


#17


இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் காண “இங்கே” செல்லலாம்.
படங்களை அனுப்பக் கடைசித் தேதி 20 ஏப்ரல் 2015. போட்டி அறிவிப்பு “இங்கே”. போட்டி விதிமுறைகள் “இங்கே”.

12 கருத்துகள்:

  1. வித்தியாசமான படங்கள்.

    செல்லக்கோபம் - புன்னகைக்க வைக்கிறது!
    கூண்டுக்கிளிகள் - மறுபக்கத்தில் முன்பக்கம்!!
    புது வசந்தம் - மலரும் நினைவுகள்!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கைத்திறனும் கலைத்திறனும் வியப்பில் ஆழ்த்துகின்றன. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை கொள்ளை கொண்டன...

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள்...... அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. படங்களே கவிதையாக,,,,,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin