ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

“குழந்தைகளின் அழுகுரல்” - பாடல்கள் 12 & 13 (நிறைவுப் பாகம்)


ங்கள் முன்னே நன்றாக அழட்டும் குழந்தைகள்;
இதிலிருந்து ஓட முடியாமல் அவர்கள் களைத்து விட்டார்கள்
அவர்கள் சூரியனின் பிரகாசத்தை கண்டதில்லை,
சூரியனை விடப் பிரகாசமான எந்தப் பிரமாதத்தையும்.
மனித குலத்தின் பெருந்துயரை அறிந்திருக்கிறார்கள்,
அதன் விளைவான ஞானத்தை அடையாமல்;
வெறுமையில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்,
அதிலிருக்கக் கூடிய அமைதி கிட்டாமல்;
சுதந்திரமின்றி அடிமைகளாகக் கிறுஸ்துவலோகத்தில்;
தியாகிகளாகச் சொல்லொண்ணா வேதனையில் தவித்து;
முதுமை எய்தாற்போல் கிழிந்து கந்தலாகி,
மீட்டெடுக்க எந்த ஒரு இனிய நினைவுகளும் இல்லாமல்;
அனாதைகளாக, மண்ணுலக அன்பு மட்டுமின்றி
தேவலோக அன்பும் கிட்டாமல்;
அவர்கள் அழட்டும்! நன்றாக அழட்டும்!

வெளிறிய, குழிவிழுந்த முகங்களோடு நிமிர்ந்து நோக்குகிறார்கள்,
நடுங்க வைக்கிறது அவர்களின் அந்தப் பார்வை;
அவர்களது தேவதைகளை அவர்களுக்கான இடத்திலிருந்து
நீங்கள் பார்ப்பதாக நினைக்கிறார்கள்.
“எவ்வளவு காலம், கொடுந்தேசமே” கேட்கிறார்கள்  “எவ்வளவு காலம்,
இந்த உலகை இயங்க வைக்க, ஒரு குழந்தையின் இதயத்தின் மேல் நிற்பாய்?
வணிக ஸ்தலத்தின் நடுவேயிருக்கும் உன் ராஜாங்கத்தை அடைய
குழந்தையின் இதயத் துடிப்பைப் பாதங்களால் அடக்கி மிதித்து நடப்பாய்?
எங்கள் இரத்தம் மேல்நோக்கிப் பீறிடுகின்றது, கொடுங்கோலர்களே,
அதன் கருஞ்சிவப்பு நிறம் காட்டுகிறது உங்கள் பாதையை;
ஆனால் ஒரு மாவீரனின் கடுஞ்சினத்தை விடவும் ஆழமானது
தேம்பி அழும் குழந்தையின் மெளனமான சாபங்கள்!” உ வெ
***

படங்கள் நன்றி: இணையம்
மூலம்: “The Cry of the Children
by Elizabeth Barrett Browning
அதீதம் வெளியீடு.

12 கருத்துகள்:

  1. அதற்குள் முடிந்து விட்டதா! பின்னூட்டமிட இயலவில்லையே தவிர தொடர்ந்து வாசித்து வந்தேன். அத்தனையும் அருமையான மொழியாக்கம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin