வியாழன், 5 மார்ச், 2015

நாளைய உலகம் - ‘தென்றல்’ அமெரிக்க இதழின் கவிதைப் பந்தலில்..

[ ~ படமும் கவிதையும் ~]
ள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி 
இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக.
‘ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா’
ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர்.
முழங்கால் வரை காலுறைகளும்
முட்களில் நிற்கும் காலணிகளும்
தேடிப் பிடித்து வாங்கப்பட்டன.
குழுவின் நம்பிக்கை நட்சத்திரமாக
பந்தைத் தடுக்கும் பணியில் அஷ்வத்.
போட்டி நாளில் பெருங்கூட்டம்
கைத்தட்டி உற்சாகம் தர.
எதிரணியோடு பந்தும் திணறியது
அஷ்வத்தின் திறன் முன்.
திடுமென மைதானத்தைக் கடந்த கொக்குக் கூட்டத்தை
நண்பனுக்குக் காட்டி மகிழ்ந்த ஒரு கணப்பொழுதில்
தலையை தாண்டிச் சென்றது பந்து
நழுவியது வெற்றிக்கனி.
வெளிறிய முகத்தோடு வெளியே வந்தவனை
தட்டிக்கொடுத்து வரவேற்ற ஆசிரியர்களுக்கும்
கட்டியணைத்து முத்தமிட்டப் பெற்றோருக்கும்
மத்தியில்
நம்பிக்கையுடன் சிறகு விரிக்கிறது
நாளைய உலகம்.
**

இந்தப் படம்: தம்பி அனுப்பியது.. உங்கள் பார்வைக்கு..:)!

[பயனர் கணக்குடன் இணையத்தில் ‘வாசிக்க’..

ஒலி வடிவம்’: நன்றி திருமதி.சரஸ்வதி தியாகராஜன்!]


நன்றி தென்றல்!
 ***

16 கருத்துகள்:

 1. ரசனை பெரிதா? வெற்றி பெரிதா? அஷ்வத்துக்கு வாழ்த்துகள். தென்றல் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

  பதிலளிநீக்கு
 2. தோல்வியைக்கண்டு துவளாமல் இருக்க ஆறுதல்படுத்தும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கிடைத்தது வரப்பிரசாதம்.
  கவிதை அருமை.
  மருமகன் படம் அழகு.

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப கியூட் ..... அழகான கவிதையும் ,படங்களும்

  பதிலளிநீக்கு
 4. அருமை...அஷ்வத்துக்குப் பதில் சண்முகம் என்றே போட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin