ஞாயிறு, 30 நவம்பர், 2014

தூறல் 22: ‘அதீதம்’ புதிய பொலிவுடன்; திருச்சியில் 26_வது இலக்கிய விழா; திறமைகள் 70+, 5+; பட்டாணி விலை

ருமாத இடைவெளிக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவந்து விட்டுள்ளது அதீதம்.


2011_ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் சில நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதீதம் மின்னிதழ், ஜூலை 2011_ல் எங்கள் குழுவின் வசம் வந்தது.
அதே பாதையில் மூன்று வருடங்களாகப் பல சுவாரஸ்யமான கட்டுரைகள், வித்தியாசமான தொடர்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், கதை, கவிதை, நூல் மற்றும் திரை விமர்சனங்கள், ஃபோட்டோ கார்னர், இ_புத்தகங்கள், வலைப்பூ-எழுத்தாளர் அறிமுகங்கள் என செப்டம்பர் 2014 வரை எடுத்துச் சென்றோம். Domain தளத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட இரு மாத இடைவெளியோடு, பழைய படைப்புகளை உடனடியாக புதிய தளத்துக்குக் கொண்டு வர முடியாத சூழல். இருப்பினும் இதழின் இயக்கம் நின்று போக வேண்டாமென்கிற முடிவுடன் சுவைபடச் சொல்லும் பணியைத் துவங்கி விட்டுள்ளது அதீதம். முந்தைய வெளியீடுகள் விரைவில் வேறுதளத்திலோ அல்லது அதீதத்திலேயே   “2011-2014 படைப்புகள்” எனும் பகுப்பின் (லேபிள்) கீழோ கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றிடும் எண்ணம் உள்ளது.


னி அதீதம் ஒவ்வொரு மாதமும் ‘முதலாம், இரண்டாம்’ இதழ்களாக வெளிவரும்.  தொடர்கள் தருகிறவர்கள் வசதிக்காகவும், வகைப்படுத்தும் வசதிக்காகவும் மாதமிருமுறை என்பது பின்பற்றப் பட்டாலும், வருகிற படைப்புகள் உடனுக்குடன் அப்போதைய இதழுடன் இணைக்கப்பட்டு வெளியாகும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை articlesatheetham@gmail.com எனும் வழக்கமான மின்னஞ்சல் முகவரிக்கே தொடர்ந்து அனுப்பிடலாம்.


மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இணைந்து நடத்திய 26_வது இலக்கியப் போட்டியில் எனது “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்குக் கிடைத்த விருதினைப் பற்றி இங்கே பகிர்ந்திருந்தேன். 12 அக்டோபர்  2014 அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற விழாவில் எனக்காக வழங்கப்பட்ட விருதினை அனுப்பி வைத்திருந்தார் மன்றத்தின் மாநிலச் செயலாளர், முனைவர். திரு. நா. இராமச்சந்திரன். அவருக்கு என் நன்றி.


#  போட்டியில் பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

 விழா அமைப்பாளர்களுக்கு நன்றி! 


70+. இந்தப் பதிவில் தன் எழுபதுகளின் ஓவியம் தீட்டும் ஆசை ஏற்பட்டு, கலையை முறையாகக் கற்றுக் கொண்டு என் பெரியம்மா திருமதி. லோகா சுப்பிரமணியம் அவர்கள் தீட்டிய முதல் ஓவியத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்து அவர் தீட்டிய ஓவியங்களில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

# மாலே மணிவண்ணா..
திறமைக்கு வணக்கம்!

கவை ஆறினை அடுத்த மாதம் பூர்த்தி செய்யவிருக்கும் அருமை மருமகனின் திறமைகள் சில:).

# இளம் கவிஞர்

I can't wait
# இளம் விஞ்ஞானி
வாழ்த்துகள் சண்முகம்!
உருளைக் கிழங்கிலிருந்து மின்சாரம். ஒளிரும் LED விளக்குகள்! ஐந்தாவது நாட்களாக ஒளிர்ந்து கொண்டிருப்பதாக உற்சாகமாக ஃபோனில் தெரிவித்தவனிடம் ‘அப்பாவைப் படம் எடுத்து அனுப்பச் சொல்’ என்றேன். தம்பி அனுப்பிய படத்தை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். சென்றமுறை சென்றிருந்தபோது ஞாபகமாக அவன் தெரிவித்த மேலதிகத் தகவல், 21 நாட்கள் வரை ஒளிர்ந்தனவாம் விளக்குகள்:)!

டத்துளி:
பச்சைப்பட்டாணி.. கிலோ அறுபது.. இப்போது பெங்களூரில்.. 
 நேற்று BVK ஐயங்கார் சாலையில்..
***

13 கருத்துகள்:

  1. அதீதம் புதிய பொலிவுடன் வருவது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    இலைகள் பழுக்காத உலகத்திற்கு விருது வந்து சேர்ந்தது அறிந்து மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.

    கற்றுக் கொள்ள வயது தடை இல்லை என்று சாதித்து அருமையாக வரைந்த கண்ணன் ஓவியம் அருமை.

    மருமகனுக்கு வாழ்த்துக்கள், இளம் கவிஞர் ,இளம்விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.
    இங்கு இன்று வாங்கிய பச்சைபட்டாணி வில்லை 80.


    பதிலளிநீக்கு
  2. அதீதம் மீண்டு(ம்) வருவது சந்தோஷம்.

    திருச்சி விழாவில் வழங்கப்பட்ட விருதுக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

    லோகா சுப்பிரமணியம் அவர்களின் ஓவியம் அழகு.

    இளம் கவிஞர் ஆங்கில டி ஆர் ஆராராயிருக்கிறார்!பலே..

    இளம் விஞ்ஞானிக்கு எங்கள் பாராட்டுகள். "பலே பையா..."

    பதிலளிநீக்கு
  3. அதீதம் புதுப் பொலிவு பெற்றதற்கு சந்தோஷம்...

    கவிஞர் மற்றும் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.

    விருதுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. @ வெங்கட் நாகராஜ்,

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  5. @ -'பரிவை' சே.குமார்,

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  6. விஞ்ஞானி, கவிஞர் என்று அத்தையைப் போலவே பன்முக அவதாரமெடுக்கிறார் போல!! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நீண்ட நாட்களாக முத்துச்சரம் பக்கம் வரவில்லை. அதனால், இன்றுதான் 70+ மற்றும் 5+ பற்றி அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இருவருக்கும் எனது வாழ்த்துகள்! கவிதை நூலிற்கு பரிசு பெற்றமைக்கு தங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin