திங்கள், 24 நவம்பர், 2014

யன்னல் நிலவு - ‘சொல்வனம் 115’, பெண்கள் சிறப்பிதழில்..

சுற்றி வளரும் புற்றினை உணராது 
தியானத்திலிருக்கும் துறவியின் தலையில்
விழுகிறது இலையொன்று.
காற்றில் பறந்து நதியில் விழுந்து 
கப்பலாகிறது 
தத்தளிக்கும் கட்டெறும்புக்கு.
பாயும் நீரில் பலமைல்கள் பயணித்து
நாளின் இறுதியில் எறும்பைக் கரைசேர்த்து 
ஏற்ற கடமை வழுவாத களிப்பில்
இளைப்பாறத் தொடங்கிய இலையின்மேல் 
நதியின் மிச்சங்கள் நீர்த்திவலைகளாக.
ஒவ்வொரு திவலைக்குள்ளும் 
ஒளிர்ந்த தேய்பிறையை
வெறித்து நிற்கிறாள் 
புவனத்தின் வேறோர் மூலையில்
யன்னல் சீலைகளின் அணைப்பில்
யசோதரை.
**


‘சொல்வனம் 115’, பெண்கள் சிறப்பிதழில்.. வெளியான கவிதை. நன்றி சொல்வனம்!
***

13 கருத்துகள்:

  1. இலை பயணிக்கும் அழகிய காட்சி.

    அருமை, சொல்வனத்தில் இடபெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. @ திண்டுக்கல் தனபாலன்,

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  3. @ சாந்தி மாரியப்பன்,

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான காட்சி, மென்மையான கவிதை நடையில் ரசிக்கத்தக்காக இருந்தது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin