வியாழன், 20 நவம்பர், 2014

மனிதனும் பிரம்மனே..

இந்த மாத PiT போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பைக் கொடுத்து, சப்ஜெக்டைத் தெரிவு செய்யும் வாய்ப்புக்கான கதவுகளையும் விரியத் திறந்து விட்டிருக்கிறார் நடுவர். மனிதனின் கைவண்ணத்தில் உருவான எந்தப் பொருளையும் ஒளிப்படமாக்கி அனுப்பலாம். சின்னஞ்சிறு குண்டூசி முதல் கலைநயமிக்கச் சிலைகள், பிரமாண்டமானக் கப்பல்கள் வரை இரசனையுடன் படமாக்கி அனுப்பிடலாம். மாதிரிப் படங்களுடனான அறிவிப்புப் பதிவு இங்கே.

படங்களை அனுப்ப இன்றே கடைசித் தேதி ஆகையால் உங்களுக்கு நினைவு படுத்திட 10 மாதிரிப் படங்களுடன் ஒரு பகிர்வு. 5,6 தவிர்த்து மற்றன யாவும் புதிது.

#1 கலைவாணி கலையழகுடன்..


#2 ஆயர்ப்பாடி மாளிகையில்..

#3 புத்தம் சரணம்
#4 Made for each other


#5  Pinocchio

#6 Eco friendly 

 #7 சிந்தனையில் சிலையாகி..

#8 Start the music..!


#9 Above turn..!

#10 பொம்மனும் பொம்மியும்..
இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் கண்டு இரசிக்க இங்கே செல்லலாம். படங்கள் அனுப்ப நினைத்து மறந்து விட்டிருந்தவர்கள் இன்றைக்குள் அனுப்பலாம்:)!

***

16 கருத்துகள்:

 1. வணக்கம்
  நல்ல முயற்சி ஆர்வத்தை தூண்டும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. நினைவூட்டலுக்கு நன்றி.

  இருத்தலின் அடையாளமா, ஓடிக் களைத்த ஒன்றை அனுப்பி இருக்கேன்:-)

  பதிலளிநீக்கு
 3. அழகான படைப்புகள், திறமைவாய்ந்த பிரம்மாக்களின் கலை படைப்புகளை இங்கே அழகாய் படைத்த நீங்களும் பிரம்மனே.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 4. #1 is impressive picture in terms of color tone and PP. Is it a big stone statue or handicraft work?

  பதிலளிநீக்கு
 5. @துளசி கோபால்,

  ஓடிக் களைத்ததன் மேல் ஒய்யாரமாய் சாய்ந்திருப்பவரும் அருமை:).

  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. @திண்டுக்கல் தனபாலன்,

  நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 7. @Anton,

  Not stone. It is a handicraft piece, a brass idol of around 2 feet height. Thank you, Anton:).

  பதிலளிநீக்கு
 8. படங்களின் துல்லியம் கண்களிலேயே நிற்கிறது. அருமை.

  தமிழ்மணம் சப்மிட் செய்யப்படவில்லையே...

  பதிலளிநீக்கு
 9. அழகான படங்கள்! சிறப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. @ ஸ்ரீராம்,

  நன்றி.

  ரொம்ப நாளாச்சே என டெம்ப்ளேட் மாற்றினேன், அதுவும் தயக்கத்துடன்:). பயந்தபடியே முன்னர் செய்து வைத்திருந்த பல வசதிகள் காணமல் போய் விட்டன, தமிழ்மணமும் சேர்த்து. சிரமப்பட்டு இணைத்து விட்டேன். வாக்குப்பட்டை தெரியவில்லை. போகட்டுமென விட்டுவிட்டேன் உங்களைப் போலவே:).

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin