வியாழன், 3 அக்டோபர், 2013

நூற்றுக்கு நூறு

சமீபத்திய தினமொழிகள் பத்து, எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..

1. வானம்தான் எல்லையா? வரவேற்கும் சாலைகளில் சென்று பார்க்கலாம். மைல் கணக்கில் நடக்கலாம். கற்றுத் தரக் காத்திருக்கும் உலகம் மிகப் பெரிது.

2.
100%
நம்மால் முடியும் என மனதளவில் தயாராகி விட்டோமா? நமது எண்ணம் நூறு சதவிகிதம் சரி.

3. நேசிக்கவும் நேசிக்கப்படவும் நேரம் ஒதுக்கிடுவோம். சிறந்த வரம் அதுவே வாழ்வில்.

4. சாதாரண மனிதர்களின் அசாதராண உறுதி கற்றுத் தருகிறது உண்மையானத் தலைமைக் குணத்தை.

5.

மற்றவருக்கு வாரி வழங்கத் தயாராக வைத்திருக்கும் அறிவுரைகளைப் பின்பற்றத் தொடங்குவதே நமது வெற்றிக்கான வழி!

6. இருப்பதை வைத்து, இருக்கும் இடத்திலிருந்து, இயன்றவரை சிறப்பாகச் செய்வதும்.. வெற்றிக்கான வழியே.

7. வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. அது வாழ்க்கையின் ஒரு பகுதியே.

8. பெரிய திட்டங்களைச் செயல்படுத்த நேரம், வாய்ப்பு கூடி வரவில்லையா? சிறிய திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மகிழ்வோம். குறையாத உற்சாகமே நம்பிக்கைக்கு அஸ்திவாரம்.

9.
எப்போதும், எந்த நிலையிலும் நன்றி சொல்ல ஏதேனும் இருந்தே தீருகிறது.

10. நம்மில் குறை காணத் துடிக்கும் சிலர் நமது நிறைகளைத் தாங்கிக் கொள்ள முடியாதவராகவும் இருக்கலாம். சென்று கொண்டே இருப்போம்.

***

தோழிகளின் முகவரிகளாகக் குங்குமம் தோழி FB பக்கத்தில்..
நன்றி தோழி:)!
***25 கருத்துகள்:

 1. /// இருக்கும் இடத்திலிருந்து, இயன்றவரை சிறப்பாகச் செய்வதும்.. வெற்றிக்கான வழியே... ///

  உண்மை... மிகவும் பிடித்தது...

  பதிலளிநீக்கு
 2. கற்றுத் தரக் காத்திருக்கும் உலகம் மிகப் பெரிது.

  பயனுள்ள தின மொழி..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 3. பத்துமே அருமை.எனக்கான சேமிப்பாகவும் பதிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. /// இருக்கும் இடத்திலிருந்து, இயன்றவரை சிறப்பாகச் செய்வதும்.. வெற்றிக்கான வழியே... ///

  எல்லாமே அருமை...

  பதிலளிநீக்கு
 5. அருமை. இரண்டாவது எனக்கு இன்றைய என் மனநிலைக்கு தைரியத்தைக் கொடுத்தது.

  பதிலளிநீக்கு
 6. அனைத்தும் அருமை.

  அழகான படங்கள்.

  பயனுள்ள தின மொழி.

  நூற்றுக்கு நூறு 100% உங்களுக்கே.

  வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு


 7. பத்தும் முத்தே! படமதன் சொத்தே!

  பதிலளிநீக்கு
 8. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.ராமலக்ஷ்மி உங்கள் மனதில் உதித்த எண்ணங்கள் அருமை.தினசரி வாழ்வில் இருத்தவேண்டியவை,.

  பதிலளிநீக்கு
 9. ''மற்றவருக்கு வாரிவழங்கத்தயாராக வைத்திருக்கும் அறிவுரைகளைப் பின்பற்றத்துவங்குவதே நமது வெற்றிக்கான வழி''
  அர்த்தமுள்ள வரிகள்

  பதிலளிநீக்கு
 10. தினமொழிகள் 10 மிக அருமை ராமலக்ஷ்மி.
  மூன்றும், 10 மிக பிடித்தது.
  படங்கள் எல்லாம் அழகு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. கற்றுத் தரக் காத்திருக்கும் உலகம் மிகப் பெரியது....

  மிகவும் ரசித்தது.....

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin