திங்கள், 8 அக்டோபர், 2012

மகிழ்ச்சி எனும் பரிசு



1. எந்த வேலைக்கும் எதிர்காலம் என்றொன்று கிடையாது.   அது செய்கின்றவரிடத்து. ஒளிமயமாவது செய்திறன் பொறுத்து.

2. விழுந்து எழுதலும் உதவுகிறது எங்கு நிற்கிறோம் என்பதறிய.

3. சந்தேகங்களை சந்தேகிப்போம். நம்பிக்கைகளை நம்புவோம்.


4. பெரிய இலக்கை அடைவது பல சிறிய இலக்குகளின் பங்களிப்போடு நிறைவேறுகிறது.

5. காலத்தைக் கொன்று வாழ்க்கையைக் காயப்படுத்துகிறோம்.

6. கிடைத்த உடன் பிரித்துப் பார்ப்பவர் கைகளை மீண்டும் மீண்டும் அடைய விரும்புகிறது மகிழ்ச்சி எனும் பரிசு.

7.  தைரியத்தை விட ஆர்வம் வென்று விடுகிறது பயங்களை.

8. பின் நோக்கிப் புரிந்து முன் நோக்கி வாழ வேண்டியது வாழ்க்கை.

9. முட்டாள்த்தனமான தவறுகளைத் தவிர்க்க உதவுமெனில் முட்டாள்த்தனமான கேள்விகளைத் தயங்காமல் கேட்கலாம்.

10. உழுது விட்டு விதைக்காமல் விடுவதற்கு ஒப்பானது பெற்ற அறிவைப் பயன்படுத்தாமல் விடுவது.


(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)






33 கருத்துகள்:

  1. //உழுது விட்டு விதைக்காமல் விடுவதற்கு ஒப்பானது பெற்ற அறிவைப் பயன்படுத்தாமல் விடுவது//

    ரொம்பச்சரியானவை..

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி எனும்பரிசு நல்லா இருக்கு.. உடனே பிரிச்சுப்பார்த்துடுவேன்..:)

    பதிலளிநீக்கு
  3. எக்ஸலண்ட். இத்தனை முத்துக்களில் 1, 2, 9 ஆகியவை என் மனதுக்கு மிக உவப்பானவை. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. Well !
    Thirty two years ago to be precise, during a high level conference, where I was privileged to participate,( for the participants were more senior than me then) to my pointed question interrupting a speech, the speaker got wild and retorted, : I know you will ask it...( and after a pause ) he continued..since only Sury can ask such foolish questions..."
    Hardly did the applause he received from the audience stop, I stood up and said," Yes.Sir, as only Sury knows how to foresee foolish situations."
    The audience stood and gave me a standing ovation.
    Your article made me recollect that incident, which I chose to forget.

    subbu rathinam

    பதிலளிநீக்கு
  5. இரண்டு, ஐந்து, ஒன்பது, பத்து. ரொம்ப அருமை.

    (தமிழ்மணம் தமிழ் 10 சரி, இன்ட்லியில் வாக்களிக்கும் கலை தெரிய மாட்டேனென்கிறது! கிளிக் செய்தால் வோட்டு விழாதோ?!)

    பதிலளிநீக்கு
  6. முத்துக்கள் அனைத்துமே பளீர் வெண்மை

    பதிலளிநீக்கு
  7. Last one was fantastic. Others were also good, but liked the last one the most

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்துரைகள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. இவ்வாக்கியங்கள் எங்களுக்கு மிகச் சிறந்த மகிழ்ச்சிப் பரிசு..நன்றி ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  10. மகிழ்ச்சி எனும் பரிசு எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
    உங்கள் சேமிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி பரிசு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. @sury Siva,

    சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம்.

    இன்ட்லி புரியாத புதிர்:)! இணைப்பதால் அங்கிருந்து வருவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்வதில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin