புதன், 31 ஜூலை, 2013

அன்பின் வழியது

1. இருக்கின்றன இறக்கைகள் ஏற்கனவே. செய்ய வேண்டியதெல்லாம் சிறகை விரிப்பதும், பறப்பதுமே.

2. இன்றின் இனிமையை நேற்றின் கசப்புகள் குலைத்திடாமல் பார்த்துக் கொள்வோம்.

 3. சிலர் வெற்றியைப் பற்றிக் கனவு மட்டும் கண்டு நிற்க, மற்ற சிலர் உழைக்கிறார்கள் விழிப்புடன் வெற்றிக்காக.

4. கனவு கண்ட கவலை தந்த நேற்றைய நாளை, இன்றாக நம் கையில். பயனுள்ளதாக்குவோம்.

5. உலகின் ஒரு மூலையில் தொடங்கி மறுமூலை வரைக்கும் அனைவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டால், ஆயுதம் தூக்க எந்தக் கையும் மிச்சமாயிராது.

6. நம்பிக்கையைத் தளர விட வேண்டாம். மலரவிருக்கும் நாளை' நமக்காக எதைத் தரக் காத்திருக்கிறது என்றறியோம்.

7. பாரமென எண்ணி ஒட்டகத்தின் திமிலிலிருந்து அதற்கு விடுதலை தர எண்ணாதீர்கள். ஒட்டகத்தை ஒட்டகமாய் வாழ விடுவதே அதற்கான மரியாதை.

8. ஒரு செயலைச் செய்ய முழு மனதாக விரும்பினால் வழி நிச்சயம் கிடைக்கும். அரை மனதிலிருந்து சாக்குப் போக்குகளே பிறக்கும்.

9. துணிவென்பது மனபலத்தோடு தொடருவது மட்டுமல்ல. பலவீனமாகும் தருணங்களில் தளர்வின்றி நகருவதும்.

10. ஒளிப்படக் கலையைப் போன்றதே வாழ்க்கையும். எந்தவொரு விஷயத்திலும் பிரகாசமான பக்கத்தைப் பார்க்கப் பழகிடுவோம்.
***

[தொகுப்பது தொடருகிறது, எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..]

---



28 கருத்துகள்:

  1. அத்தனையும் அருமை..

    பையன் பெற்றோரோட கையைப் பிடிச்சிட்டு நடக்கும் இந்தப்படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என் பையருக்கு ஒரு வயசில் முடியிறக்க திருப்பதி போயிருந்தப்ப அவரும் இப்படித்தான் எங்க கைகளைப்பிடிச்சுட்டு தத்தக்கா பித்தக்கான்னு நடந்துட்டிருந்த ஞாபகத்தைக் கிளறி விட்டுட்டது.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை... முக்கியமாக 4,8,10

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை.....

    ஐந்து மட்டும் நடந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.....

    த.ம. 3

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே அருமை. குறிப்பாக,
    5 நடந்தால் நன்றாக இருக்கும்.
    7 நன்று.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை.
    படத்தேர்வும் ஜோர்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் மிகவும் நன்று!

    தங்களின் சிந்தனைகள் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பாமாக இருக்கும். அதற்கு, இவைகளை தாங்கள் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பலாமே?!



    பதிலளிநீக்கு
  7. சிறப்பான சிந்தனைத் துளிகள் அம்மா .வாழ்துக்கள் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் அருமைன்னாலும் பத்தாவது மிகவும் அருமை.

    நம்மில் பலருக்கும் நல்லதை விட கெட்டதை கவனிப்பதில்தான் ஆர்வம் அதிகம்.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான சிந்தனைகள். ஒன்பதாவது சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. படம்தான் முதலில் கண்ணை இழுக்குது அக்கா.அத்தனை மொழிகளும் அருமை !

    பதிலளிநீக்கு
  11. கொஞ்சம் முயன்றால் ஹைக்கூவாகவே எழுதி விடலாம் ! 5 ஆம் பொன்மொழி அருமை. அனைவரும் கைகோர்த்த பின் ஆயுதம் எதற்காக?

    பதிலளிநீக்கு
  12. @அமைதிச்சாரல்,

    மகிழ்ச்சி, படம் நினைவலைகளை எழுப்பியது அறிந்து:)! நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin