வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வாய்ப்புகள் வரமன்று

அதிர்ஷ்டம்
1. ஒரு புன்னகை போதும் நட்பைத் தொடங்க. ஒரு வார்த்தை போதும் மனஸ்தாபங்களை முடிவுக்குக் கொண்டு வர.

2. அரும்புக்குள் சுருங்கி நிற்கும் இறுக்கத்தை விடவா வலியைத் தந்து விடப் போகின்றன, மலரும் போது எதிர் கொள்ள நேரும் பிரச்சனைகள்?

3. ‘விட்டுவிடு’ உலகமே சொல்லும் போது கிசுகிசுக்கிறது காதோரம் நம்பிக்கை ‘முயன்றிடு மீண்டும் ஓர் முறை, முடியும் உன்னால்’ என்று.

4. எளிமையும் வலிமையும் இயல்பாகட்டும். விரல் வழி நழுவும் நீர், பெரும் கப்பல்களைத் தாங்கிப் பிடிக்கவும் வல்லது.

5. நேற்றைய நாட்களைப் பழித்தபடி இன்றைய பொழுதைக் கழிப்பதால் ஒருபோதும் பிரகாசமாகி விடாது  நாளை.

6. ஒருவரின் அமைதியை அறியாமை என்றோ, மெளனத்தை சம்மதம் என்றோ, கருணையை இயலாமை என்றோ தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம்.

7. மற்றவர் பேசுகையில் நன்கு கவனிப்போம். காதுகள் ஒருபோதும் நம்மைப் பிரச்சனையில் மாட்டி விடுவதில்லை.

8. சரிவுகள் தவிர்க்க இயலாதவை. வாடி விடாமல் வாழ்ந்து காட்டுவதில் அடங்கியிருக்கிறது வாழ்வின் பூரணத்துவம்.

9. நடக்குமெனக் காத்திருக்கிறது எதிர்பார்ப்பு. நடந்து விடுமென உறுதியாய் இருக்கிறது நம்பிக்கை. நடத்திக் காட்டுகிறது தைரியம்.

10. அதிர்ஷ்டம் வாய்ப்பைத் தருகிறது கடனாக. உழைப்பெனும் வட்டி செலுத்தி வெற்றியாகத் திருப்பித் தருவோம்.

***

[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது.]

---

30 கருத்துகள்:

  1. /// காதுகள் ஒருபோதும் நம்மைப் பிரச்சனையில் மாட்டி விடுவதில்லை...///

    தொகுப்பது தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அழகான தொகுப்பு. Sl.No.10 மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வரிகள் அனைத்தும் அருமை அக்கா...
    படம்.... சொல்லவே தேவையில்லை... அழகோ அழகு... அப்படி ஒரு அழகு...

    தொடர்ந்து தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. அத்தனையும் முத்துக்கள்.ராமலக்ஷ்மி
    படித்ததும் புது உற்சாகம் பிறக்கிறது. நன்றிமா.

    பதிலளிநீக்கு
  5. ''காதுகள் ஒரு போதும் நம்மை பிரச்சினையில் மாட்டிவிடுவதில்லை'' ஒருபுன்னகை போதும் நட்பைத்தொடங்க ஒரு வார்த்தை போதும் மனஸ்தாபங்களை முடிவுக்குக் கொண்டுவர. அருமையான தொகுப்பு

    பதிலளிநீக்கு

  6. நான் என் மக்களுக்குச் சொல்லும் அறிவுரை." WHEN OPPORTUNITY KNOCKS AT THE DOOR, DO NOT COMPLAIN ABOUT THE NOISE" வாய்ப்புகளை ஆப்ப்ர்சூனிடி என்று எடுட்ண்ட்னுக் கொள்ளலாமா.? பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமை. மோதிரத்தோட அழகு அப்படியே இழுக்குது ஹி..ஹி.

    பதிலளிநீக்கு
  8. எதைக்குறிப்பிட்டுச் சொல்வதென்று தெரியவில்லை. அனைத்துமே மனத்துக்கு இதம் தரும் இனிய முத்துக்கள். புகைப்படம் அழகு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. 2-கவிதை.
    4-கொஞ்சம் புரியலை.
    6,7 :)

    படம் ரொம்ப அழகு!

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி. முதல் கருத்து மிக நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. முத்துக்களால் கோர்க்கப்பட்ட
    நித்திலமான முத்துச்சரம்..
    அத்தனையும் அருமை...

    பதிலளிநீக்கு
  12. நட்பும் புன்னைகையும் சேர்ந்தே இருக்கும் அபூர்வம்/

    பதிலளிநீக்கு
  13. தலைப்பு ஒரு அருமையான கவிதை. அங்கேயே தங்கிவிடுகிறேன் ஒவ்வொரு முறையும்..

    பதிலளிநீக்கு
  14. @கவிநயா,

    மிக எளிதாக விரல்கள் வழியே நழுவிடும் இயல்பு கொண்ட நீரே கப்பல்களைத் தாங்கும் வலிமை கொண்டதாகவும்..

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin