Tuesday, September 11, 2012

காரணம் ஆயிரம்

ஒரு காரணம்..


1. கடமை ஒரு காரியத்தைச் சரியாகச் செய்து முடிக்கிறது. விருப்பம் அழகுறச் செய்ய வைக்கிறது.

2. அறிவார்ந்த மொழிகள் பலநேரங்களில் கவனத்தில் கொள்ளப்படாமல் தரிசு நிலங்களில் விழுகின்றன. அன்பான வார்த்தைகளை எல்லா நேரங்களிலும் மனங்கள் பத்திரப்படுத்துகின்றன.

3. அடைந்த இலக்கு ஆரம்பப் புள்ளியாகட்டும் அடுத்த முன்னேற்றத்துக்கு.

4. வாலினால் பறக்கிறது பட்டம். சின்னச் சின்ன விஷயங்களிலும் செலுத்தும் அக்கறையினால் சிறக்கிறது திட்டம்.

5. பெரும் இடைவெளிகளைக் குறைக்க சிறு புன்னகை போதும்.

6. சிந்திக்க அவகாசம் எடுக்கலாம். ஆற்றலின் ஊற்றுவாய் அதுவே.

7. சங்கிலிகளுடன் வாழுகிறோம் சாவி கையிலிருப்பதை உணராமலே.

8. தோல்விகளே வாய்ப்புகளாக மாறுகின்றன விவேகத்துடன் மீண்டும் தொடங்க .

9. பிறருக்கு உதவும் வாய்ப்பை எதிர்நோக்கியே இருக்கிறார் வெற்றி பெறுபவர். ‘இதனால் எனக்கென்ன கிடைக்கும்’ என்கிற தேடலிலேயே மற்ற சிலர்.

10. ஆயிரம் காரணங்களை அடுக்கலாம் எதனால் முடியாதென்பதற்கு. ஒன்று கூடவா கிடைக்காது ஏன் முடியும் என்பதற்கு?
***

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி

அறிவின் கருவி
உறுதி ஊற்றெடுக்கும் காலம்

திறக்கிற மறுகதவு

54 comments:

 1. எல்லாமே நல்லா இருக்கு . பிடித்தவரிகள் கீழே

  . ஆயிரம் காரணங்களை அடுக்கலாம் எதனால் முடியாதென்பதற்கு. ஒன்று கூடவா கிடைக்காது ஏன் முடியும் என்பதற்கு?

  ReplyDelete
 2. அன்பின் ராமலஷ்மி,

  அனைத்தும் அருமை. சிந்திக்கத் தூண்டும் வரிகள்!

  அன்புடன்
  பவளா

  ReplyDelete
 3. எல்லாம் மிகச் சரியே
  நல்ல பகிர்வு மேடம் நன்றிகள்

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை.

  //9. பிறருக்கு உதவும் வாய்ப்பை எதிர்நோக்கியே இருக்கிறார் வெற்றி பெறுபவர். ‘இதனால் எனக்கென்ன கிடைக்கும்’ என்கிற தேடலிலேயே மற்ற சிலர்.//

  ;)))))

  ReplyDelete
 5. //பெரும் இடைவெளிகளைக் குறைக்க சிறு புன்னகை போதும்//

  அருமை..!

  ReplyDelete
 6. சங்கிலிகளுடன் வாழுகிறோM.சாவி கையில் இருப்பதை அறியாமல். அருமையான வரிகள். நம்மச் சிறபிடிப்பது நம் சிந்தனைகளே.

  ReplyDelete
 7. எனக்கு ரொம்பப் பிடித்தது1,2,3,4,5,6,7,8,9,10 மட்டும்!

  ReplyDelete
 8. அருமையான சிந்தனைகள் அக்கா.. தொகுப்பாகத் தந்தமைக்கு நன்றிகள் :))

  ReplyDelete
 9. எல்லாம் எல்லாம் எல்லாமே வாழ்வியல் சொல்கிறது !

  **சங்கிலிகளுடன் வாழுகிறோம் சாவி கையிலிருப்பதை உணராமலே.
  **

  ReplyDelete
 10. ஆஹா.... வானம் வெளித்த பின்னும் தளத்தில் மேலே ஓட அடுத்த செட் வார்த்தைகள் தயார்!!

  சரிதானே ஹேமா...!

  ReplyDelete
 11. வாவ் சூப்பரா இருக்கு ராமலக்‌ஷ்மி,

  பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 12. முத்துச்சரத்தின் மென்மேலும் அழகு சேர்க்கும் நல்முத்துகள்...அருமை ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 13. ரொம்ப பிடிச்சது //7. சங்கிலிகளுடன் வாழுகிறோம் சாவி கையிலிருப்பதை உணராமலே.//

  ReplyDelete
 14. அனைத்துமே அருமைதான்... ஆனால் அந்த கடைசி பஞ்ச் மிக அருமையோ அருமை!

  ReplyDelete
 15. அனைத்தும் சிந்திக்க வைக்கின்றது.

  ReplyDelete
 16. அனைத்தும் அருமை... மிகவும் பிடித்தது : 3

  ReplyDelete
 17. பத்தும் படித்தேன்.
  நல்லதோர் அறிஉரை.
  பத்துமே புரிந்தால்
  வாழ்விலோர் பொன் மழை

  சுப்பு ரத்தினம்.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 18. நாங்களும் சேமித்து வைக்க வேண்டியவை...

  சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 19. அனைத்து செப்பு மொழிகளும்
  மிக மிக அருமை
  குறிப்பாக மூன்றும் பத்தும் என் மனம் கவர்ந்தது
  பய்னுள்ள பதிவு
  தொடர வாழ்த்துஹ்க்கள்

  ReplyDelete
 20. ஒரு காரணம் நூறு காரணத்திற்கு சமம்

  ReplyDelete
 21. அருமையான வரிகள்

  ReplyDelete
 22. மிக மிக அருமையான சிந்தனை வரிகள் ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 23. வாலினால் பறக்கிறது பட்டம். சின்னச் சின்ன விஷயங்களிலும் செலுத்தும் அக்கறையினால் சிறக்கிறது திட்டம்.

  அருமை ராமலக்ஷ்மி..குறிச்சு வெச்சுக்கணும்

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் சிறப்பான ஆக்கம் உண்மையில் இவை
  அனைவராலும் போற்றப்பட வேண்டியவையே !.....
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 25. @Lakshmi,

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 26. @ஸ்ரீராம்.,

  மற்றன எங்கே எனத் தேடிக் கொண்டேயிருக்கிறேன்:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 27. @ஸ்ரீராம்.,

  சொன்ன பிறகே கவனிக்கிறேன். ஹேமாவின் கவிதைகளோடு அவற்றையும் தொடருவேன் இனி:).

  ReplyDelete
 28. ஆயிரம் காரணங்களை அடுக்கலாம் எதனால் முடியாதென்பதற்கு. ஒன்று கூடவா கிடைக்காது ஏன் முடியும் என்பதற்கு?//
  முடியாது என்பதற்கு ஆயிரம் காரணம் அடுக்க முடிகிறது உண்மை.
  தேடினால் நிச்சியம் கிடைக்கும் முடியும் என்பதற்கு.
  10ம் அருமை.

  காரணம் ஆயிரம் தலைப்பே அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin