புதன், 10 ஜூலை, 2013

காற்றின் திசை

1. குமிழ் விட்டுக் கொதிக்கும் நீரில் பிரதிபலிப்பைக் காண முடியாது. கோபம் உண்மையை உணர விடாது. அமைதியில் பிறக்கும் தெளிவு.


2. நமது படகும் நதியில்தான். பிறர் தாழ்வில், தடுமாற்றத்தில் இகழ்ச்சி, மகிழ்ச்சி ஏன்?
3. அதிகம் உழைப்பவருக்கே அடிக்கடி காட்சி தருகின்றன அதிர்ஷ்ட தேவதைகள். அபூர்வமாய்த் தட்டப்படும் கதவைத் திறக்கத் தாமதித்தே தரிசனத்தைக் கோட்டை விடுகின்றனர் சோம்பேறிகள்.


4. குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம் மற்றவரோடு ஒப்பிட்டு. வித்தியாசங்கள் நமது தனித்தன்மை மட்டுமல்ல அழகும் கூட.


5. பெரிய கண்டுபிடிப்புகளுக்கான தீப்பொறிகள் பிறந்தது ஆர்வம் எனும் தீப்பொறியிலிருந்தே. தணியாத ஆர்வம் எதையும் சாதிக்கும்.


6. புழைக்கடையில் நதியிருக்கத் தாகத்தால் தவிக்கும் நிலை வருவதில்லை. நமக்குள் இருக்கும் சக்தியை உணர்ந்து கொண்டால் முன்னேறத் தடை எதுவுமில்லை.


7. பிரச்சனை ஒரு பிரச்சனையில்லை. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே பிரச்சனை.


8. பழுத்து உதிரும் இலை மீண்டும் சேருவதில்லை விருட்சத்தை. பிறப்பு ஒரு முறையே. வாழ்வோம் அன்பைப் பற்றி.


9. காற்றுக்கு நாம் கட்டளையிட முடியாது. அதற்கேற்பப் படகைச் செலுத்த முடியும்.

10 . கனவுகளைப் பின் தொடருங்கள். வழி அவற்றுக்குத் தெரியும்.
***

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது, பொருத்தமாக அமைந்த நான் எடுத்த படங்களுடன்..]





16 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அருமை. பயன்மிகு எண்ணங்கள் ரசனை.

    பதிலளிநீக்கு
  2. அழகான போட்டாக்களும் அதேற்கேற்ற வரிகளும் அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  3. அத்தனையும் அருமைன்னாலும் 4,5,6 ரொம்பப் பிடிச்சிருக்கு..

    பதிலளிநீக்கு
  4. படமும் விளக்கமும் அருமைங்க..

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை. பட விளக்கங்கள் அதைவிட அருமையோ அருமை. பரட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு ந்ன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. அத்தனை எண்ணங்களும் அதற்கேற்ற படங்களும் மிக அருமை.எண்ணங்களைப் பின் தொடர்ந்து கனவுகளும் அருமையாக அமைந்தால் வாழ்க்கை இன்பம்தான்

    பதிலளிநீக்கு
  7. பொன்னான படங்கள்! பொருத்தமான பொன்மொழிகள்!

    பதிலளிநீக்கு
  8. படங்களும், பொருத்தமான வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. அழகான படங்களுடன், அருமையான தத்துவங்கள்...

    பதிலளிநீக்கு
  10. அத்தனையும் மனதைக் கவரந்தன - படங்களும், உங்கள் மொழிகளும்....

    தொடர்ந்து பகிர வேண்டுகோளுடன்!

    பதிலளிநீக்கு
  11. படங்களும் அதற்கு பொருத்தமான வரிகளும் அருமை.
    அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  12. எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு போட்டோவின் மூலமே அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்!நன்றி

    பதிலளிநீக்கு
  13. படங்களும் சிந்தனைகளும் அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அருமை. அவற்றைக் காட்டிலும் அதற்கான எண்ணங்கள் மிக அருமை. 1,9 ரொம்பப் பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  15. படங்களும் வரிகளும் அருமை மேடம்..

    பதிலளிநீக்கு
  16. காற்றே என் வாசல் வந்தாய் என பாடவைத்த படங்கள். என் அருகில் இருந்த தோழி மாலா இந்தப் படங்கள் மிக அழகாக இருக்கிறது என எழுதச் சொன்னார் ராமல்க்ஷ்மி :) படங்களுக்குத் தகுந்த கேப்ஷன்கள் கருத்துகள் :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin