திங்கள், 8 ஏப்ரல், 2013

பூக்களைப் படமாக்குவதில் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது?

#1 ஒட்டகச் சிவிங்கியை ஓரங்கட்டிய மலர்..
 விவரம் கடைசியில்..
எனது 'படங்கள் ஆயிரம் - ஃப்ளிக்கர் பயணம்'  பதிவில் ‘நீங்கள் அதிகமாய் பூக்களைதான் எடுக்கிறீர்கள்.’ என ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார். ‘அனைத்து வகைப் படங்களும் எடுத்து வந்தாலும், அதிகமாய் சமூக வலைத்தளங்களில் பகிருவது பூக்களையே என்பதால் அப்படித் தோன்றுகிறது’ என்றொரு பதிலை நான் சொன்னாலும் உடனடியாக ஆராய்ந்து பார்த்ததில் (ஃப்ளிக்கரில் வகைப்படுத்தியிருக்கும் ஆல்பங்களில்) அதிக எண்ணிக்கையில் படங்களைக் கொண்டிருப்பது பூக்கள் ஆல்பமே. ஆயிரத்தில் 165 போலப் பூக்கள் படங்கள் இருந்தன அன்று. இப்போது மேலும் சில. இப்படியே போனால் தனிப்பட்ட ஆல்பத்தின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டு ‘பூக்கள் ஆயிரம்’ என ஒரு பதிவு போட்டாலும் போடுவேன் போலிருக்கிறது:)! என்ன செய்வது? இயற்கை பல்லாயிரக்கணக்கான வண்ணங்களில், வடிவங்களில் அல்லவா மலர்களைப் படைத்து வைத்திருக்கிறது!

ஒரு தோழி சொன்னார், ‘பூக்களைப் படமாக்குவதில், பொதுவாகவே புகைப்படங்களிலும்தான் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது?  கோலமோ, சித்திரமோ என்றால் நம் கைவண்ணம் என ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. இருக்கிறதை அப்படியே எடுத்துக் காட்டுவதில் என்ன பெரிய சுவாரஸ்யம்?’ என. மற்றவர் எடுப்பது குறித்து அல்லாமல் தனக்கு ஏன் அதில் ஆர்வம் இல்லை என்பதாகதான் சொன்னார். நல்லது. அது அவரது தனிப்பட்ட எண்ணம். என்னைப் பொறுத்தவரை,
இருப்பதை நேரில் பார்ப்பதை விடவும் அருகாமையில், அழகான கோணத்தில், சரியான ஒளி அமைப்பில், தொட்டு விடத் தூண்டும்படியாக இதழ்களின் மென்மையை.. வண்ணக் கலவைகளின் அற்புதத்தை.., படத்தில் கொண்டு வருவது சவாலோ, சுவாரஸ்யமோ கூட இல்லை. பரவசம்!  குறுகிய ஆயுளே கொண்ட மலர்கள், அழியாமல் காலத்திற்கும் வாழும் நம் படங்களில் என்பதிலும் கிடைக்கிறது ஆத்ம திருப்தி. இயற்கையோடு உரையாடிப் பூவின் மொழியைக் கற்றிட முயன்றிடுவதாயும் ஒரு நினைப்பு:)!

மைசூர் அரண்மனை வாசலில்..

#2
ராஜாவின் தோட்டத்தில்..
 #3

#4


#5
வீட்டுத் தோட்டத்தில் அன்றி வெளியிடங்களில் காண நேரும் பூக்களை ஓரிரு நொடிக்கு மேல் நின்று இரசித்திட நேரமிருப்பதில்லை. படைப்பின் அழகிய நுட்பங்களை எவ்வளவு தவற விடுகிறோம் என அவற்றைத் தீவிரமாகப் படமாக்க ஆரம்பித்த பின்னரே உணர்ந்தேன். பாதையோரம் அரையடி உயரச் செடியில், பூத்து நிற்கும் அங்குல அளவு மலரைக் கேமராக் கண்ணால் தெளிவாக இரசித்துக் காட்சி படுத்துவது தனி ஆனந்தம்தான். அது இரட்டிப்பாகிறது, பகிரும் போது ஒவ்வொரு பூக்களும் மற்றவர் மனதையும் மலரச் செய்வது கண்டு.

#6 பட்டுப் போலொரு மொட்டு

#7 மலர்ந்து மலராத பாதி மலர்..
[இந்தப் பதிவை இடும் எண்ணத்தைத் தந்த மலர்.. படம்..:)!]
#8 விரியும் அழகு..

மைசூர் Fortune JP Palace Hotel-லில் தங்கியிருந்த 3 தினங்களில் வாசல் தோட்டத்தில் இருந்ததை வெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களே மேலிருக்கும் மூன்றும்.

 #9 ஜனவரி லால்பாக் மலர்க் கண்காட்சியில்..
“Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it.”- Mark Twain

நடுவில் சிலகாலம் எடுக்கிற மலர்களின் பெயரை கூகுளின் உதவி கொண்டு தெரிந்து பதிவது அல்லது ஃப்ளிக்கரில் படத்தைப் பகிர்ந்து தெரிந்தவர் சொல்லுமாறு கேட்டு கொள்வது என இருந்தேன்.  தெரிந்தால் உடனடியாக உதவும் நண்பர்கள், தெரியாவிட்டாலும் நான் எடுக்கும் படங்களுக்காக தேடுதலில் ஈடுபடுவது பார்த்து சிரமம் கொடுக்கக் கூடாதென இப்போது அப்படியே வண்ணங்களைக் குறிப்பிட்டோ, பொருத்தமாய் ஓரிரு வரிகள், இயற்கை அல்லது வாழ்வியல் குறித்த மேற்கோள்களுடனோ பதிய ஆரம்பித்து விட்டேன். காரணம், கூகுள் தேடலில் உடனடியாக சரியான தகவல் கிடைக்காவிட்டால் தேடிக் கொண்டே இருப்பதில் கால விரயம் ஆகிறது. சிலசமயம் பெயர் கிடைத்தாலும் உறுதிப் படுத்திக் கொள்வதில் சிரமம் இருக்கிறது.

போகுமிடங்களில் காணும் மலர்களை எல்லாம் மனதுக்குள்ளும் கேமராவுக்குள் இழுத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. மைசூர் zoo-வுக்குள் நுழைந்ததும் வரவேற்ற ஒட்டகச் சிவிங்கிகளை விட்டுவிட்டு ஓரமாய் இருந்த மலரை முதலில் எடுக்க முனைவதை வருவோர் போவோர் சற்று விசித்திரமாகப் பார்த்தாலும் பொருட்படுத்தவில்லை.  அந்த சிவந்த மலர் [படம்: 1], சாதாரணமாக லால்பாக் மற்றும் கப்பன் பார்க்கில் காணக்கிடைக்கிற ஒன்றே என்றாலும் இப்படி அன்றலர்ந்து முகமன் கூறி சிரிக்கையில் அதோடு பேசாமல் நகர முடியுமா சொல்லுங்கள்!

ஒரு சமயம் தோழியின் குடியிருப்பிலிருந்த மலர்களைப் பகிர்ந்த போது (வாழும் வரை போராடு), ஹுஸைனம்மா எவை எங்கே எடுத்தவை என சொன்னால் நன்றாக இருக்குமென்றார். அதுவும் சரியே.  விளைந்த மண்ணுக்கும் நீர்வார்த்த கைகளுக்கும் அதனால் சேருகிறதே பெருமை. அதிலிருந்து எவை எங்கே எடுக்கப்பட்டவை என்பதை ஃப்ளிக்கரில் மேப் செய்து வைக்கத் தவறுவதில்லை. தோழியின் குடியிருப்பு மலர் இன்னொன்று:

#10 கதிரவனுக்குக் காலை வணக்கம்

நண்பர் சொன்னதைத் தொடர்ந்து பூக்கள் ஆயிரம் என சிந்திக்க ஆரம்பித்து விட்டது போல, தோழியின் வழிக்கே வருகிறேன்.  இந்தக் கணம் நானும் நீங்களும் படங்களில் இவற்றை இரசிக்கிறோமென்றால் நன்றி மற்றும் credit எப்போதுமே இயற்கைக்கும், தோட்டத்தை அருமையாகப் பரமாரித்து வருகிறவர்களுக்குமே!  அதற்கு முன்னே கிரியேட்டிவிட்டியெல்லாம் ஒன்றுமே இல்லைதான்:)!

***36 கருத்துகள்:

 1. மலரின் குறுகிய ஆயுளை படத்தின் மூலம் நிரந்தரம் செய்யும் வரிகளை ஆமோதிக்கிறேன்.

  மலர்ந்தும் மலராத பாதி மலர் = கூம்பிய குழந்தையின் முகம்!

  முதல் மலர் ஏன் ஒட்டகச்சிவிங்கியை ஓரம் கட்டுகிறது?

  ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று தலைப்பிட்டிருக்கலாமோ!

  பதிலளிநீக்கு
 2. பூக்கள் எல்லாமே ஜூப்பரு!!

  //இருப்பதை நேரில் பார்ப்பதை விடவும் அருகாமையில், அழகான கோணத்தில், சரியான ஒளி அமைப்பில், தொட்டு விடத் தூண்டும்படியாக இதழ்களின் மென்மையை.. வண்ணக் கலவைகளின் அற்புதத்தை.., படத்தில் கொண்டு வருவது சவாலோ, சுவாரஸ்யமோ கூட இல்லை. பரவசம்! குறுகிய ஆயுளே கொண்ட மலர்கள், அழியாமல் காலத்திற்கும் வாழும் நம் படங்களில் என்பதிலும் கிடைக்கிறது ஆத்ம திருப்தி//

  மிகச்சரி.. இதைத்தான் கல்கி பேட்டியிலும் "காலத்தை நிறுத்தி வைக்கணும்" என்று எனது ஆசையைச் சொல்லியிருந்தேன் :-))

  //ஒட்டகச் சிவிங்கிகளை விட்டுவிட்டு ஓரமாய் இருந்த மலரை முதலில் எடுக்க முனைவதை வருவோர் போவோர் சற்று விசித்திரமாகப் பார்த்தாலும் பொருட்படுத்தவில்லை.//

  ரொம்பச்சரி.. அதெல்லாம் பொருட்படுத்திட்டு இருந்தா வேலைக்காகுமா :-)))))

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகளின் படங்களை ரசிப்பவர்கள் பலர் பூக்களின் படங்களை ரசிப்பதில்லை. குழந்தை முகத்தை படமாக்குவதில் என்ன க்ரியேடிவிடி என்று கேட்பதில்லை.
  காலத்தைக் கட்டும் மாயம் தான் இங்கே க்ரியேடிவிடி. நன்றாகச் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. எல்லாமேஅருமை. கூடுதல் மகிழ்ச்சி இவை எல்லாமே நம்ம வீட்டில் இருக்கு என்பது!!!!

  ஏழு வருசம் காத்திருந்த பின் நம் வீட்டுக் கள்ளீயில் மொட்டு. இன்னும் ரெண்டு நாளில் மலரும் என்ற நிலையில் இருந்தபோது கொஞ்சம் க்ளிக்கி வச்சேன்.

  மறுநாள்........ராத்திரி பயங்கர குளிர் அண்ட் ஃப்ராஸ்ட். காலையில் ஓடிப்போய்ப் பார்த்தால் கருகிய மொட்டு:(

  பதிலளிநீக்கு
 5. படங்கள் அனைத்தும் அற்புதம்...

  மலர்களின் படங்கள் மன மகிழ்ச்சி, மன அமைதி அளிக்கிறது என்றால் மிகையாகாது... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. கண்கவர் வண்ணமலர்களில் மயங்கி நிற்கின்றோம். அருமை.

  பதிலளிநீக்கு
 7. தங்கள் கருத்துகள் அனைத்தும் சரியே.

  தொடருங்கள்....!  பதிலளிநீக்கு
 8. மலர்கள் காலையில் மலர்ந்து மாலையில் மறைந்து விடுகிறது ஆனால் ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் தினம் தினம் மலர்கிறது, சிரிக்கிறது. காலத்தால் அழிவில்லை.
  காட்டில் வளரும் கள்ளிச்செடிக்கூட அழகிய பூக்களுடன் இருக்கிறது.தரையில் புற்களுக்கு இடையே அழகாய் சிறு சிறு பூக்கள் பூத்து இருக்கும் பார்க்க அழகாய் இருக்கும்.

  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. மலர்கள் பறிக்கப்பட்டோ, பறிக்கப் படாமலோ வாடி விடலாம். ஆனால் உங்களின் காமிராவில் சிறைப்பட்ட இந்த மலர்கள் எவ்வளவு ஃப்ரெஷ்ஷாக மனதிற்கு உற்சாகம் தரபவையாக இரு்க்கின்றன! அது போதாதா...? காலத்தை நிறுத்தி வைக்கும் இந்த மாயத்துக்குப் பெயர் க்ரியேடிவிட்டி இல்லாமல் வேறென்னவாம்!

  பதிலளிநீக்கு
 10. பூக்களின் இயற்கை அழகைவிடகூடுதல் அழகாகப் படமெடுக்க முடிகிறது என்றால் அதற்குப்பெயரும் கிரியேட்டிவிடி தான்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  என் ’ஜாதிப்பூ’ என்ற சிறுகதையில் நான் எழுதியுள்ள ஆரம்ப வரிகளை மட்டுமே ஆயிரம் பேர்கள் பாராட்டினர்.
  அதுபோலத்தான் இதுவும்.

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_12.html

  பதிலளிநீக்கு


 11. மேடம் ராமலக்ஷ்மி அவர்களுக்கு வணக்கம்.

  பூக்களை காமிராவில் ஃபோட்டோ எடுப்பதில் என்ன கிரியேடிவிடி இருக்கிறது ?

  நான் இந்த ஸ்டேட்மென்டை இன்னொரு கோணத்தில் பார்க்கிறேன். ,, ஒன்றுக்கும் மேற்பட்ட.....

  நம்மை நாமே பலவித கோணங்களிலும் ஆடைகளிலும் வெளிச்சங்களிலும் பற்பல பின்புலக்காட்சிகள்
  பின்னணியிலும் ஒவ்வொரு நேரத்திலும் மழையிலும் வெய்யிலிலும் குளிரிலும்

  ஆண்டவன் சன்னதியிலும் நம்மையே ஆண்டவனாக எண்ணி மாலைகள் போட்டு மகிழும் கூட்டங்கள்
  இடையேயும்,

  நமது ஃபோட்டோ ஒரு இதழிலோ அல்லது நமது துறையின் செய்தித்தாளிலோ வெளியாகி இருந்தால்
  அவன் சரியாக, அழகாக, எடுப்பாக, ஏற்றமாக எடுத்திருக்கிறாரா என்று பார்ப்பது ம‌ட்டுமல்லாமல்,

  காதலிக்காக காத்திருக்கும் ஃபோடோ முதல், அறுபது வருடங்களாக எடுத்த ஃபோட்டோக்களெல்லாம்
  வைத்திருக்கும் ஆல்பங்கள் நமது அலமாரியை அலைமோத, பழைய ஃபோட்டோக்கள் இனியும்
  வேண்டுமா என மருமகள் பையனை ஜாடையாக பார்ப்பது அறிந்தும் அதை எடுத்துத் தூரப்போட மன நிலை
  மட்டுமல்லாமல்,

  மகன்,மகள், பேரன்,பேத்தி காலில் விழும்போது தன்னை சரியாக எடுக்கிறார்களா என சர்வ கவனமாக‌
  பார்த்துக்கொண்டும் இருக்கும்பொழுதும்,

  இந்த ஐந்தடி ஆறங்குல அறுபத்தி ஐந்து கிலோ உருவத்துக்கு இத்தனை இத்தனை ஃபோட்டோக்கள் தேவையா
  இதில் என்ன புதுமை இருக்கிறது ... புதுசா என்ன எடுப்பதற்கு என்னிடம் இருக்கிறது என்ற கேள்வி என்னிடம்
  இதுவரை பிறக்கவில்லை.

  திரும்பத்திரும்ப நம்மையே நாம் ஃபோடோ எடுப்பதில் என்ன க்ரியேடிவிடி இருக்கிறது என நான் என்னை இதுவரை கேட்கவில்லை.

  ஆனால் உங்கள் பதிவினைப்படித்தபின் தோன்றுகிறது... என்ன எனின்

  இது நமது கிரியேடிவிடி பற்றிய விசயமல்ல.

  இயற்கை பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் வண்ணங்களில் படைத்து இருக்கிறது என அதிசயித்தும் இருக்கிறீர்கள்.

  ஏதோ ஒரு பூவைப்பார்த்து அது ரோஜா என்கிறோம். அதே வகையைச் சார்ந்த அதே செடியிலிருந்து
  எடுத்துப்பாருங்கள். அந்த ரோஜாவின் ஒவ்வொரு இதழையும் இன்னொரு ரோஜாவின் இதழுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
  பார்ப்பதற்குத் தான் ஒன்றாகத் தோற்றமளிக்கிறதே தவிர, ஒவ்வொரு இதழும், ஒவ்வொரு இலையும், இன்னொரு இதழையும் இலையையும் விட மாறுபட்டவை. No leaf is ever congruent with any other leaf of the same tree. ஆலமரம், அரசமரம் எந்த மரத்தின் இலைகளையும் உற்று பாருங்கள்.

  உருவ ஒற்றுமை இருக்கும் அதே நேரத்தில் வேற்றுமை தெரிகிறது.
  இந்த வேற்றுமைக்கு காரணம் அதன் ஜெனடிக் மானேஜ்மென்ட் ஆஃப் த ப்ராஸஸ் இன் டெவல்ப்மென்ட்.
  அந்த மானேஜர் யார் ? ஒரு விதையின் உள்ளிருந்து வரும் விருட்சத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான‌
  இலைகள் ஒன்றோடொன்று மாறுபடுவதன் விந்தை என்ன ?

  இந்த வித்தை செய்பவனின் கிரியேடிவிடி யைப் பார்த்து என்ன செய்வது?

  ஆக, கிரியேடிவிடி யை உணர்பவன் ரியல் ஃபோடோகிராஃபர். அதனால் தான் அவன்/ள் அப்பப்ப ஆயிரக்கணக்கான‌
  மலர்களை சுட்டுத் தள்ளுகிறான். ஆம். தன் காமிராவால்.

  சுப்பு தாத்தா.
  ( பி.கு) கொஞ்சம் நீ..........................ள..................................மா................................கி ...........விட்டது.)
  அடுத்த 2 பதிவுகளுக்கு பின்னூட்டம் தராது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்திவிடுவேன்

  பதிலளிநீக்கு
 12. ந‌ல்ல‌ புகைப்பட‌ங்கள் எடுக்க‌ வேண்டும் என்ப‌து என் வெகுநாள் ஆசை. புத்த‌க‌ங்க‌ள் ப‌டித்து விட்டு, அதை முய‌ற்சித்துப் பார்க்கும் பொழுது பல நேர‌ங்க‌ளில் ச‌ரியாக‌ வராது. மிக‌ சில ப‌டங்க‌ள் ந‌ன்றாக‌ வ‌ரும். அப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும் பொழுது ஆன‌ந்த‌மாக இருக்கும். புகைப்ப‌டங்க‌ள் எடுப்ப‌து ஒரு க‌லை. அத‌ற்கும் கிரியேட்டிவிட்டி தேவை. என்னால் அதைச் சொல்ல‌ முடியும் :‍‍)). நல்ல‌தொரு ப‌திவு மேட‌ம்.

  பதிலளிநீக்கு
 13. பூக்களை நேரில் பார்ப்பதைப்போல் ஒரு ரியாலிடி உங்கள் படங்களில் இருக்கும்.இப்போது தந்து இருக்கும் படங்களும் அப்படியே.அற்புதம்.

  பதிலளிநீக்கு
 14. @ஸ்ரீராம்.,

  ஒட்டகச்சிவிங்கி... கடைசிப்பத்திக்கு மூன்றாவதில் விவரம் இருக்கிறது. அங்கே அடைப்புக்குள் படம் ஒன்று என இப்போது சேர்த்துள்ளேன். அமைதிச்சாரலும் அந்த வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்கள் பாருங்கள், அடுத்த பின்னூட்டத்தில்.

  ஆயிரம் பூ எடுத்ததும் அந்தத் தலைப்பை வைத்திடலாம்:)!

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 15. @அப்பாதுரை,

  உண்மைதான். ரசனை என்பது ஆளாளுக்கு மாறுபடுகிறது.

  பொதுவாக சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி ஃப்ளிக்கரிலும் கூட மற்ற படங்களை விட பூக்களை அதிகம் இரசிக்கப்படுவதைக் கவனிக்கிறேன்.

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. புகைப்படத்தின் நோக்கமே, நாம் அந்தக் கணத்தில் ரசிப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே. நீங்கள் காட்டும் பல பூக்களை உங்கள் படங்களில் மட்டுமே காண முடிகிறது... பகிரும்போது ஒவ்வொரு பூக்களும் மற்றவர் மனதில் மகிழ்ச்சியைப் பரப்பும் என்பது மிகச் சரி. உங்கள் பணி தொடரட்டும் ராமலக்ஷ்மி! :)

  பதிலளிநீக்கு
 17. @துளசி கோபால்,

  நன்றி. மகிழ்ச்சி. எத்தனை அழகான தோட்டம் உங்களுடையது. ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடன் அதைப் பராமரித்து வருவதை அறிவேன்.

  பூத்து இயல்பாய் வாடுவதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. மடலில் காண்பித்த அந்த இளம் மொட்டு பேரழகு.

  பதிலளிநீக்கு
 18. @கோமதி அரசு,

  ஆம் கோமதிம்மா. கள்ளிச்செடி பூவின் மொட்டைப் பற்றிதான் துளசி மேடமும் சொல்லியிருக்கிறார்கள். கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. @sury Siva,

  @sury Siva,

  நம்மை நாமே படம் எடுத்துக் கொள்வதில்.. அதென்னவோ சரிதான்:)!

  அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இலையோ பூவோ ஒன்றைப்போல் ஒன்று இருப்பதே இல்லை.

  விரிவான கருத்துக்கு நன்றி. என் நேரம் பற்றிக் கவலைப்படாதீர்கள்:)! வாசிக்கக் காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்களை.

  நன்றி சூரி sir!

  பதிலளிநீக்கு
 20. 'பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர்சன். உங்கள் படங்களில் பூக்கள் அழகாகச் சிரிக்கின்றன!

  பதிலளிநீக்கு
 21. // பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர்சன். உங்கள் படங்களில் பூக்கள் அழகாகச் சிரிக்கின்றன! //

  கே.பி.ஜனா சாரே ! இன்னா கமென்ட்... இன்னா கமென்ட்...  ஜனா சொன்னதுலே மனசு
  ஜில்லுன்னு போயிடுச்சு.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 22. முடி உள்ள சீமாட்டி இடக்கொண்டையும் போடலாம்; வலக்கொண்டையும் போடலாம். அது போல் ரா.ல. எதையும் எடுக்கலாம். கவிதையாகும். :))))))

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin