வியாழன், 4 ஏப்ரல், 2013

கோடை வந்தாச்சு! - ஏப்ரல் மாத PiT போட்டி

பென்ஷனர்ஸ் பாரடைஸ் என்பார்கள் ஒருகாலத்தில், இதமான சீதோஷ்ணத்திற்காகவே பெங்களூரை.  மெட்ரோவுக்கு, பாலங்களுக்கு, சாலை விரிவாக்கத்திற்கு என என்னென்னவோ காரணங்களைச் சொல்லிக் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் மேலான மரங்களைப் பலி கொடுத்து வளர்ந்து நிற்கிற ஐடி நகரத்து பென்ஷனர் நண்பர் ஒருவர் ‘இந்தக் கோடைக்கு வேற எங்காவது ஓடிப் போயிரலாம்ன்னு இருக்கேன்’ என்றார் போன வாரம்.  எல்லோருமே கோடை நெருங்க நெருங்க நடுங்க ஆரம்பிச்சிடுறோம் எப்படி சமாளிக்கறதுன்னு.  கூடவே சேர்ந்துக்கிற மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடுன்னு நாடு முழுக்க இருக்கு பிரச்சனை. விடுமுறைன்னு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். ஆட்டம் பாட்டம்னு இருக்கிற அவங்கள அனல் வெயில் தாக்காமப் பாத்துக்கணும். வீட்டிலேயே பூட்ட முடியாம அங்கே இங்கேன்னு கூட்டிக்கிட்டும் போகணும். ஏராளமான திட்டங்களை இப்பவே போட ஆரம்பிச்சிருப்பீங்க. இந்த சமயத்துக்குச் சரியானத் தலைப்பா எனக்குத் தோணுறது என்னென்னு இப்பப் புரிஞ்சிருக்குமே உங்களுக்கு?

கோடை.

இதுதான் தலைப்பு. (போட்டி அறிவிப்பு இங்கே.)

வெப்பத்தின் தாக்கத்தை, வேண்டியிருக்கும் குளிர்ச்சியை, உல்லாச விடுமுறையை, இப்படி எந்தப் படமானாலும் அடிப்படையில் கோடை என்பதை உணர்த்துகிற விதமா இருக்கணும். உதாரணத்துக்கு கைவசமிருந்த சில படங்களை மாதிரிக்கு இங்கே தந்திருந்தாலும், நீங்க உங்க கற்பனைக் குதிரையை வேகாத வெயிலில் வேகமாய் ஓடவிட்டு அழகழகான  படங்களோடு வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு:)! எலுமிச்சஞ்சாறு, நீர்மோரு, பனையோலை விசிறி, தர்பூசணி, குளுகுளுக் கண்ணாடி, உச்சி வெயிலில் பசங்க ஆடும் கிரிக்கெட்  என எவ்வளவோ இருக்குதானே!

#1 தவிக்கிற வாய்களுக்கென..


#2 சூப்பர் ட்ரிங்க்


 #3 பெருந்தாகம்


# 4 உறிஞ்சும் போது உலகம் மறக்குது..


#5

#6 நிழலும் பதுங்கும் உச்சி வெயில்..

#7 எஸ்கேப்...........


படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 20 ஏப்ரல் 2013
போட்டி விதிமுறைகள் இங்கே.

*** 

9 கருத்துகள்:

 1. வெய்யில்.
  நினைத்தாலே நடுங்கும்;)
  உங்கள் படங்கள் அழகு ராமலக்ஷ்மி. கண்ணுக்கு இதமா இருக்கு.
  முயற்சிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. கோடைப் படங்கள் குளிர்சியாக :) இருக்கின்றது. வெப்பம் தீர நாமும் வாத்துக்களுடன் நீச்சல் அடிப்போம்.

  பதிலளிநீக்கு
 3. ஐஸ்கிரீம் சாப்பிடும் சிறுமியும், பெருந்தாகத்தில் யானையாரும்.. கண்ணைப் பறிச்சுக்கிட்டாங்க. மத்த எல்லாப் படங்களுமே ரசிக்க வெக்குது. கோடைங்கற அழகான தலைப்புல எத்தனை படங்கள் அணிவகுக்குதுன்னு பாக்கறேன்... ஹும்..! என்னால பாக்க மட்டுந்தானே முடியுது சொக்கா!

  பதிலளிநீக்கு
 4. சென்னை வெளியின் ஆரம்பம் பயங்கரமாக உள்ளது! அதை, மறக்கும் விதமாக படங்கள் கண்ணுக்கு இதமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 5. மின்வெட்டு பெங்களுருவிலும் இருக்கிறதா? தமிழ்நாட்டில் மழையே இல்லை என்பதால் கோடை கொளுத்தப் போகிறது. பெருமூச்சுதான்! படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 6. கோடைக்கு ஏற்ற பதிவு. படங்கள் எல்லாம் அழகு.
  முங்கி குளிக்கும் வாத்துக்கள் அழகு.
  குழந்தைகள் ஐஸ் சாப்பிடுவது கோடை வந்தால் ஜஸ் வண்டி வீட்டுக்கு அருகில் வந்துவிட்டால் அவ்வளவுதான் யாருக்கு எந்த ஜஸ் என்று போட்டி போட்டு தம்பி தங்கைளுடன் வாங்கி சாப்பிட்ட காலங்கள் கண்களில் மலர்கிறது.
  என் பிள்ளைகளுடனும், பேரன் பேத்திகளுடனும், ஐஸ், ஐஸ்கீர்ம் சாப்பிடுவேன்.


  பதிலளிநீக்கு
 7. மண்பானைத்தண்ணீர் ஜில்லுன்னு இருக்கு. பார்த்ததுமே ஒரு கப் குடிக்கணும் போலிருக்கு :-)

  பெங்களூர்லயே வெய்யில் கொளுத்துதா!!

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அருமையாக இருக்கு....

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin