Wednesday, February 6, 2013

நதியின் ஓட்டம்


1. அலையை எதிர்த்துச் சென்றாலும் நதியின் ஓட்டத்துக்குத் தடையாய் இருப்பதில்லை படகு. எதிர்கொள்வோம் நம் பிரச்சனைகளை எவர் வளர்ச்சிக்கும் தடையாய் இராது.2. திணற அடிக்கிற எதிர்ப்பலைகளைப் பொறுமையுடன் சகித்து, விடா முயற்சியுடன் சமாளித்து, வெற்றி கொள்ளும் சாமான்ய மனிதர்களே உண்மையான நாயகர்கள்.


3. ‘நாளை’ பற்றிய நம்பிக்கையைச் சுமந்தபடி உறங்கச் செல்கிறது நாளின் இறுதி.


4. சுமை எத்தனை சேர்ந்தாலும் சமநிலையில் செல்லத் தெரிந்தவனுக்குச் சாலை கம்பளமாக விரியும். பயணம் பிடித்த சவாலாக அமையும்.


5. முகத்தில் இருக்கும் புன்னகையை எல்லோரும் நம்புகிறபோது கண்ணில் இருக்கும் வலியை உணரும் உண்மை நட்பு.


6. இனிய தருணங்களைச் சிறப்பாகவும் சிரமமான கட்டங்களை எதிர்கொள்ள இலகுவாகவும் ஆக்கித் துணை நிற்கிறார்கள் நல்ல நண்பர்கள்.


7. அழகு ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஆளுமையே இதயத்தில் அமருகிறது.


8. இல்லை என்று சொல்லாமல் நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நேரத்தை.


9. எல்லோரையும் எடை போட்டுக் கொண்டே இருப்பவருக்கு எவரையும் நேசிக்க நேரமிருக்காது.


10. சுலபமாகும் முன் எல்லாமே கடினம்தான்.
***
[தொகுப்பது தொடருகிறது..
இம்முறை
எடுத்த படங்களுக்கு
இணைத்த வாசகங்களோடு:)!]


32 comments:

 1. நதியின் ஓட்டம் அருமை ராமலக்ஷ்மி.
  பொருத்தமான படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 2. படங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன வரிகள் என்று நினைத்தேன். 'தொகுப்புகள் தொடர்கின்றன-படத்தோடு' என்று பார்த்ததும் பொருத்தமாகக் கிடைத்த படங்களை நினைத்து வியக்கிறேன். அதுவும் எல்லாம் நீங்களே எடுத்த படங்கள். அற்புதம். பாராட்டுகள். ஆமாம்... இதற்கு அதுவா, அதற்கு இதுவா??!!

  ReplyDelete
 3. படங்களும் விளக்கமும் அருமை.வாழ்க்கை எனும் பந்தயத்தில் எத்தனையோ போராட்டங்கள் உண்டு என்பதை தெளிவுபடுத்தும் படங்கள். அருமை

  ReplyDelete
 4. சிறப்பான வாசகங்கள்... அதற்கேற்ற உங்களின் படங்கள்....

  பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 5. அத்தனையும் முத்துக்கள்தான், பிடித்தன என்றாலும் 8வது முத்து மிகமிகப் பிடித்தது. ஸ்ரீராமின் வியப்புதான் என்னுள்ளும்... படத்திற்காக முத்துக்களா, முத்துக்களுக்காகப் படங்களா? எக்ஸலண்ட்டான உழைப்பு உங்களுடையது. ரசித்துக் கைதட்டும் மனம் எங்களுடையது. மிக்க நன்றி!

  ReplyDelete
 6. @ஸ்ரீராம்.,

  அதற்குதான் இது:)! எடுத்த படங்களை Flickr மற்றும் FB-யில் பகிரும்போது இணைத்த வாசகங்கள் இவை. அப்படியாகவேக் குறிப்பிட்டுவிட்டேன் இப்போது. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 7. @பால கணேஷ்,

  படத்திற்காக எழுதியவற்றின் தொகுப்பு. ஸ்ரீராமைத் தொடர்ந்து நீங்களும் கேட்டிருப்பதால் குறிப்பிலும் திருத்தம் செய்துவிட்டேன். நன்றி கணேஷ்.

  ReplyDelete
 8. அத்தனையும் அருமை.. படங்களும் வாசகங்களும் அவ்வளவு அருமையாப் பொருந்திப்போகுது தொடருங்கள்..

  ReplyDelete
 9. சிறப்பான படங்கள்.சிறப்பான ரசிக்கதக்க வரிகள்.வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி.

  ReplyDelete
 10. படங்களும் அதற்கு விளக்கமும் மிக அருமை.

  ReplyDelete
 11. இரட்டை மகிழ்ச்சி. அருமையான வாசகங்கள் இணைப்பாக புகைப்படங்களும் அருமை... நானும் என் முக நூலில் பகிர்ந்துகொள்கிறேன் உங்கள் அனுமதியுடனும், உங்கள் வலைப்பதிவின் பெயருடனும் நன்றி

  ReplyDelete
 12. அசர வைக்கும் படங்கள்... அதை மேலும் மின்ன வைக்கிறது உங்கள் வரிகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. எல்லாமே ரொம்ப அழகாவும் அவ்ளோ பொருத்தமாவும் இருக்கு அக்கா.. பகிர்வுக்கு நன்றி :)

  ReplyDelete
 14. படங்களும், வாசகங்களும் ஒன்றுக்கொன்று போட்டிக் போட்டுக் கொண்டு....எல்லாமே தங்களின் கை வண்ணத்தால்... அருமையோ அருமை.

  படங்கள் எங்கு எடுத்தது என தெரிந்தால்.....

  ReplyDelete
 15. //இல்லை என்று சொல்லாமல் நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நேரத்தை.//

  சிந்திக்க வைத்துவிட்டீர்கள்! மேடம். நேர மேலாண்மை பற்றி அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. நானும் அது குறித்து சிந்திக்க, மேற்கண்ட வரிகள் தூண்டியது என்றால் அது மிகையல்ல.
  நன்றி மேடம்.

  ReplyDelete
 16. அருமையான படங்கள். அதற்கு ஒளி ஏற்றுகின்றன உங்கள் வாசகங்கள்.

  ReplyDelete
 17. படங்களும், ஏற்றாற்போல வாசகங்களும் அருமை!! படங்கள் எங்கே (குறிப்பாக படகுக்காரர்) எடுத்தவை என்றும் எழுதிருக்கலாம்.

  மயிலின் படம் - ஒய்யாரமாய் சேலைத் தலைப்பைத் தொங்கவிட்டு நிற்கும் மங்கைபோல இருக்கிறது.

  ReplyDelete
 18. @ezhil,

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 19. @சுசி,

  மகிழ்ச்சியும் நன்றியும் சுசி:).

  ReplyDelete
 20. @அமைதி அப்பா,

  நல்லது:). நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 21. @கோவை2தில்லி,
  1,2,3,10 - கபினி ஆற்றில்..
  4 - பெங்களூர் சாலை
  5 - நெல்லை பொருட்காட்சி 2012
  மயில் - நேச்சர் பார்க், மைசூர்
  பூக்களும், கடிகாரமும்.. - லால்பாக், பெங்களூர்.

  நன்றி ஆதி:)!

  ReplyDelete
 22. @ஹுஸைனம்மா,

  முந்தைய பதிலில் உள்ளன:)! கபினி, நெல்லை பொருட்காட்சி படங்களைத் தனிப்பதிவாக எப்போதேனும் தர எண்ணம். நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin