Tuesday, February 26, 2013

படங்கள் ஆயிரம் - FLICKR பயணம்


புகைப்படப் பகிர்வுக்காகவே இயங்கும் தளங்களில் முதன்மையாக விளங்கி வரும் Flickr-ல் இன்றோடு எனது Photostream ஆயிரம் படங்களை நிறைவு செய்து 1,33,700 + மொத்தப் பக்கப் பார்வைகளைப் பெற்று தொடருகிற பயணத்துக்குக் காரணாமாய், ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி:)!

# காலைப் பனியில் ரோஜா


# ஆயிரமாவது படம்!!


 # பக்கப் பார்வைகள் 133,700+

இங்கும் அங்கும்

முத்துச்சரம் ஆரம்பித்த மாதத்திலிருந்தே PiT போட்டிகளுக்கென தொகுப்பாகப் படங்களை பகிரும் பழக்கம் ஆரம்பித்தது. ஒன்றரை வருடங்கள் கழித்து 2009-ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் பக்கத்தில் இங்கிருக்கும் அத்தனை படங்களும் உள்ளன என சொல்ல முடியாது. அங்கே பகிர்ந்த அனைத்தும் இங்கு உள்ளன என்றும் சொல்ல முடியாது. எப்படியானாலும் புகைப்படங்களுக்கே ஆன பிரத்தியேகமான தளத்தில் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு என்ற விகிதத்தில் பகிர்ந்த படங்கள் ஆயிரத்தைத் தொட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

‘எண்ணிக்கை முக்கியமா?’

இல்லைதான் என்றாலும்
ஆர்வத்தைத் தக்க வைக்க இந்த எண்ணிக்கை உதவுமெனில் அதைப் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. எத்தனை பதிந்தோம் என்பதை விட எவ்வளவு நேர்த்தியானவற்றைப் பதிந்தோம் என்பதுதான் முக்கியம் என மனதுக்குப் புரியவே செய்கிறது. ஒருவகையில் எண்ணிக்கை திரும்பிப் பார்க்க உதவுகிறது. ஆரம்ப காலத்தில் எடுத்த படங்களோடு இப்போது எடுப்பவற்றை ஒப்பிடுகையில் தெரிகிற முன்னேற்றம் மனதுக்கு நிறைவைத் தருகிறது. அதேநேரம் போகவேண்டிய தூரம் “நிறைய” இருப்பதை அங்கே காணக் கிடைக்கிற படங்கள் உணர்த்துகின்றன. அதுவே உத்வேகத்துடன் மேலும் தொடர்ந்து செயல்பட வைக்கிறது.

ஏன் Flickr?

பல இலட்சம் பேர்கள் தினம் படங்களைப் பகிரும் Flickr தளம் குறித்து ஏற்கனவே பகிர்ந்த பதிவொன்று இங்கே. தற்போது படங்களை ஆல்பங்களாக சேமிக்கவும் பகிரவும் Picasa, FB போல பல தளங்கள் வந்து விட்டன. குறிப்பிட்ட கொள்ளளவுக்குப் பிறகு Flickr-ல் இலவசச் சேவை கிடையாது எனும் குறைப்பாட்டினாலும் சிலகாலம் இருந்து விட்டு வெளியேறி விடுகின்றனர் பலர். ஆனாலும் படங்களுக்கான பாதுகாப்பு, அப்லோட் செய்கிற வேகம், படங்களை வகைப்படுத்துகிற வசதி என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். படங்களை எடுத்த இடத்தை வரைபடத்தில் (location map) காட்ட முடிவது, விவரங்களை tag செய்ய முடிவது ஆகியவற்றால் கூகுள் போன்ற இணையத் தேடல்கள் மூலமான வருகையையும் படங்கள் பெறுகின்றன. படங்களுக்கு உள்ளே குறிப்புகள் சேர்க்க வழக்கப்பட்டுள்ள “add note" வசதி வேறெந்த புகைப்படத் தளங்களிலும் இதுவரையில் இல்லாத ஒன்று. தேவைப்படுகிற படங்களுக்காக உரியவரைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் வசதியும் உள்ளது. பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களின் பலவிதமான பகிர்வுகளிலிருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைப்பதால் பொது அறிவு வளர்வதுடன், புகைப்பட ஆர்வலர்களின் படங்களை தினசரி அவதானிப்பதே ஒரு நல்ல பயிற்சியாகவும் அமைந்து போகிறது.

எப்படி இயங்குகிறது?

பெரும்பாலானோர் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு படங்களைப் பகிர்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். எப்படி வலைப்பதிவை நாம் திரட்டிகளில் இணைக்கிறோமோ அதுபோல அங்கே நாம் விரும்பும் group-களில் இணைந்து படங்களைப் பகிரலாம். எப்படி நாம் ரீடரில் பதிவுகளைப் பின் தொடருகிறோமோ அதே போல நமது விருப்பத் தேர்வான நபர்களின் படங்களைத் தொடர இயலும். இந்த விவரங்கள் எதுவும் ஆரம்ப காலத்தில் தெரியாமல் இருந்தது:)! முதன் முதலாக PIT group pool-ல் இந்தவார சிறந்தபடத் தேர்வுக்காகப் படங்களை இணைக்க அழைப்பு விடுக்கப்பட்ட போதுதான் Groups குறித்தே அறிய வந்தேன். அதேபோல, என் PiT போட்டிக்கான படத்தொகுப்புகளைப் பார்த்து விட்டு Flickr தளத்தை அறிமுகம் செய்து வைத்தவர் PiT  ஆசிரியரான ஜீவ்ஸ். அவருக்கும் இங்கு என் நன்றி:)!

தகவல் பரிமாற்றம்

அவரவர் உபயோகிக்கும் கேமராக்களின் நிறைகுறைகள், மென்பொருட்களின் வசதிகள், படத்தை எடுத்த விதம் குறித்த கேள்விகளுக்கான விளக்கங்கள், எடுத்த படங்களின் நிறைகளைப் பாராட்டுவதோடு குறைகளைத் தவிர்த்திட ஆலோசனைகள் என ஆரோக்கியமான சூழலுடன் இயங்கி வருகின்றன Flickr Groups.

நட்பு வட்டம்

இதில் PiT Group மூலமாக இணைந்த தமிழ் நட்பு வட்டத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். பலநாடுகளில் வசிக்கிறவர்களின் காலைகள், நட்புகள் பகிரும் படங்களைக் காணும் ஆவலுடன் புலருகின்றன. பூக்களோ, பறவைகளோ பெயர் தெரியாமல் பதிய நேருகையில், அவர்களுக்கு வேண்டியத் தகவல்களை ஆர்வத்துடன் தேடித் தருவதிலிருந்து, ஒருவர் பகிர்ந்தது போலவே வரிசையாக அவரவரிடம் இருக்கும் படங்களை தொடர் சங்கிலியாகப் பகிருவது என உற்சாகத்துக்குக் குறைவில்லாமல் பதிவுலகம் போலவே இயங்கி வருகிறது ஃப்ளிக்கர் குழுவும்.


லால்பாக் ஃப்ளிக்கர் சந்திப்பு

சென்ற மாதம் பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூர் ஃப்ளிக்கர் நண்பர்களைச் சந்திக்கவென்றே வந்திருந்தனர் நித்தி ஆனந்த், சித்தார்த் ஆகியோர். நித்தி ஆனந்த் PiT போட்டிகள் பலவற்றில் பரிசு பெற்றிருப்பதுடன், PiT தளத்தில் Guest ஆகப் பல பதிவுகளும் தந்த வகையில் உங்களில் சிலருக்கு அறிமுகமாகி இருக்கக்கூடும். வனிலா சிறந்த புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல, சமூக ஆர்வலரும் கூட. பலசேவைகளைச் செய்து வருகிறார். குறிப்பாக சேரிவாழ் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவசமாகத் தன் இல்லத்தில் பாடங்கள் சொல்லிக் கொடுக்கிறார். குறும்பாகவும் கலகலப்பாகவும் படங்களுக்குக் கருத்துகள் இடும் வனிதா நேரில் மிக மிக அமைதியான பெண்ணாக இருந்தார். யோகேஷ் மாடலாக ஒத்துழைப்பதில் ஆர்வம் காட்டினார்.

நித்தி ஆனந்த், வனிதா, வனிலா,
சித்தார்த் ஆகியோருடன். படம்: யோகேஷ்.

பேச்சுகள் பெரும்பாலும் புகைப்படங்களைச் சுற்றியும், கேமராக்கள் லென்ஸ்கள் பற்றியும் இருந்தன. எப்போதோ நான் பதிந்த மாட்டுக்காரத் தாத்தா, கருங்குளம் பெரியவர் படங்களை மற்றவர் நன்றாக நினைவில் வைத்திருந்தது போல, அவர்களது படங்களில் கண்ட அஞ்சலைப்பாட்டி, காய்கறிக் கடைக்காரர் போன்றோர் எனக்கும் நினைவிலிருக்க, படம் எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். ஜோ, ஜேம்ஸ், PiT ஆனந்த், சத்தியா, சுபா, ஸ்ருதி, மல்லிகா, பிரபு, லஷ்மி என இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்திய நண்பர்கள் பலர்.


பயணம்

இரசிக்கிற, வியக்கிற, மனதைப் பாதிக்கிற, சுவாரஸ்யம் தருகிற காட்சிகளைப் படமாக்குவதிலும், மற்றவரோடு பகிர்வதிலும் கிடைக்கிற திருப்தியுடன் தொடருகிற இப்பயணத்தில் என்னோடு முத்துச்சரத்திலும், ஃப்ளிக்கரிலும், சமூக வலைதளங்களிலும் உடன் வரும் நட்புகள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி:)!

***


38 comments:

 1. வாழ்த்துக்கள்..பயணம் இன்னும் சிறப்பாகட்டும்...

  ReplyDelete
 2. வாவ்.. வாழ்த்துகள் :-)

  அங்கே இருக்கும் படங்களை ஊன்றிக்கவனிப்பதே ஒரு நல்ல பயிற்சிதான். என்னோடதும் 200-ஐத் தொடப்போகுது. புதுப்பிக்கலாம்ன்னு முயற்சி செஞ்சா ஒவ்வொரு முறையும் ஏதோவொரு எர்ரர் மெசேஜ் வருது. மறுபடியும் முயற்சிக்கணும் :-)

  ReplyDelete
 3. அருமையான பதிவு... மிக அழகாக தொகுத்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி .. எங்கள் அனைவருக்கும் நீங்கள் தரும் ஊக்கமும், ஆதரவும் மறக்கமுடியாது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஆயிரமும் முத்துக்கள் . அதுவும் நன்முத்துக்கள்.

  இனிய பாராட்டுகள். ஆயிரம் பல்கிப்பெருகட்டும் நூறாயிரமாக!!!!

  ReplyDelete
 5. 1000... அபாரம்... பாராட்டுக்கள்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அடேங்கப்பா... 1000 படமா.. , பக்கப் பார்வைகள் 1,33, 700...

  வாழ்த்துகள். 'எண்ணிக்கை முக்கியமா' பாராவில் உள்ள வரிகள் வரிக்கு வரி உண்மை. நான் இன்னும் உங்கள் ஆரம்ப காலப் படங்கள் உள்ள நேர்த்தியையே இன்னும் தொடவில்லை என்று தெரிகிறது!

  சமீபத்தில் அமைத்திச்சாரல் பக்கத்தில் ஓடும் பொருட்களை படம் எடுக்க (அல்லது நகரும் வாகனத்திலிருந்து நகரா ஒன்றைப் படமெடுக்க என்றும் கொள்ளலாமா) கேமிராவில் ஸ்போர்ட்ஸ் என்று செட் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

  முன்பு ஒருமுறை இப்படி அறிந்து கொள்பவற்றைப் பற்றிப் பேசும்போது இவையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ள ஒரு சுட்டி தந்திருந்தீர்கள். உண்மையில் மொத்தமாக அங்கு சென்று படிக்கத் தோன்றுவதில்லை.

  இரண்டு யோசனைகளை.

  1) நீங்கள் எடுத்த படத்தைப் பகிரும்போதே அதை எப்படி எடுத்தீர்கள் என்பதைக் காரணத்துடன் சொன்னால் மனதில் இருத்திக் கொள்வேன்.

  அல்லது,

  2) உங்கள் பதிவில் தனிப் பதிவாக அவ்வப்போது மனதில் நிற்கும்படி ( ! ) குறைந்த குறிப்புகளுடன் அவ்வப்போது டிப்ஸ் கொடுங்கள்.

  இவற்றைப் படித்துப் போட்டியில் கலந்து கொள்ள அல்ல, புகைப் படம் எடுக்கும்போது மனதில் வைத்துக் கொள்ள என் போன்றவர்களுக்கு உதவும்.

  ReplyDelete
 7. பகிர்ந்து கொண்ட ஆயிரம் படங்களும் மனதை கொள்ளை கொண்டவை தான்.
  ஆரம்பக்கால படங்கள், இப்போதைய படங்கள் வளர்ச்சி, நிறை, குறைகள் எல்லாம் உங்களுக்கு தான் தெரியும்.
  உங்கள் வளர்ச்சி உங்கள் முயறசியால் வந்தது.
  பகிர்ந்து கொள்வது நீங்கள் சொன்னது போல் மன மகிழ்ச்சி தான்.
  படத்தின் துல்லியம், தெளிவு, புகைபடநுனுக்கங்கள் கைவரப்பட்டஉங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
  புகைபடகலைஞ்சர்கள் கலந்துரையாடல் அருமை. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வாழ்த்துகள்.....

  படங்கள் எடுப்பதும் பகிர்வதும் தொடரட்டும்....

  ReplyDelete
 9. படங்கள் தொடரட்டும்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்.

  Flickr ஐப் பற்றிய தகவல் சிறப்பாக இருக்கு.

  1000 மேலும் பல ஆயிரமாக பெருக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ஆயிரமும் முத்துக்களே. அப்போது முத்துச்சரங்கள் என்று பெயர் வைக்கவேண்டும் ராமலக்ஷ்மி.
  மனம் நிறைந்த வாழ்த்துகள் அயராத உழைப்பு,குன்றாத ஊக்கம், நீங்கள் என்னைப் போன்றவர்களுக்கும் உத்சாகம் இவை அளவிட முடியாதவை.
  இன்னும் வளரவேண்டும் நன்று வளரவேண்டும் என்று இறைவனைப் பிரார்திக்கிறேன்.

  ReplyDelete
 12. பெருஞ்சாதனை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்...இனிய பாராட்டுகள். ஆயிரம் பல்கிப்பெருகட்டும் நூறாயிரமாக!!!!

  ReplyDelete
 14. அருமையான பகிர்வு...வாழ்த்துக்கள்...தங்களை சந்தித்ததில் நானும் பெருமகிழ்ச்சியடைகிறேன்...தொடரட்டும் உங்களின் புகைபட பயணம்...பின் தொடருகிறோம் நாங்களும்....PPT Flickr Gang சார்பாக என்றும் அன்புடன்,நித்தி

  ReplyDelete
 15. வாழ்த்துகள் சகலகலா வல்லவருக்கு! :)))

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் மேடம் :)
  // எத்தனை பகிர்ந்தோம் என்பதை விட எவ்வளவு நேர்த்தியானவற்றைப் பதிந்தோம் என்பதுதான் முக்கியம் என மனதுக்குப் புரியவே செய்கிறது// மிக அருமை.....
  உங்களது ஆயிரமாவது பகிர்வில் தான் முத்துச்சரம் முதன் முதலில் வாசிக்கிறேன்....பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....
  நண்பர்களை சந்திக்கமுடியவில்லை என்ற வருத்தம் மனதோரம் இருக்கிறது ...எனினும் உங்களது பகிர்வின் வழியாக சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் :)

  ReplyDelete
 17. வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் பணி.

  ReplyDelete
 18. வாவ்... ஆயிரம் படங்களா... சூப்பர் :-)
  மனமார்ந்த வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி :-)

  மிக அருமையான பதிவு... நிஜமாவே நாங்க பெங்களுர் சந்திப்பை மிஸ் பண்ணி இருக்கோம்... நிச்சயம் இந்த முறை இந்தியா வரும் போது கட்டாயம் மீட் பண்ணவேணும் :-)
  ஜேம்ஸ் அவங்க எழுதினது போல, நீங்க எங்களுக்கு கொடுக்கும் ஆதரவும் ஊக்கமும் மறக்க முடியாது... நீங்க தந்த நிறைய டிப்ஸ், படம் பிடிக்கும் போது ரொம்ப உதவியா இருந்திருக்கிறது :-)

  இன்னும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி :-)

  ReplyDelete
 19. @அமைதிச்சாரல்,

  நன்றி சாந்தி. விரைவில் pro account ஆக புதுப்பித்துக் கொண்டு, தினம் பதிய வரக் காத்திருக்கிறோம்:)!

  ReplyDelete
 20. @James Vasanth,

  மிக்க நன்றி ஜேம்ஸ்:)!

  ReplyDelete
 21. @துளசி கோபால்,

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி:)!

  ReplyDelete
 22. @திண்டுக்கல் தனபாலன்,

  தங்கள் வாழ்த்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நன்றி தனபாலன்.

  ReplyDelete
 23. @ஸ்ரீராம்.,

  மிக்க நன்றி. PiT தளத்தின் சுட்டிதான் தந்திருப்பேன் என எண்ணுகிறேன். இங்கும் அவ்வப்போது எடுத்த விதங்களைப் பகிர்ந்திருக்கிறேன், நிலவை அபெச்சர் மோடில் எடுப்பது, பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராவில் ப்ரோகிராம் மோட் பயன்படுத்துவது போன்றன. நிலவு குறித்த என் அனுபவப் பதிவைப் பார்த்த பின்னரே வரிசையாகத் தாங்களும் கோதாவில் குதித்ததாக ஃப்ளிக்கர் நண்பர்கள் சந்திப்பில் சொன்னதைக் குறிப்பிட விட்டுப் போயிற்று:)!

  ஸ்போர்ட்ஸ் மோடில் எடுப்பது நல்ல யோசனை. நான் பெரும்பாலும் ஷட்டர் வேகத்தை அதிகமாய் வைத்தே எடுத்திருக்கிறேன். அவசரமாய் பறவைகள், நகரும் வாகனங்களைப் பிடிக்க ஸ்போர்ட்ஸ் மோட் பயன்படுத்தியதுண்டு. சமீபத்தில் எங்கள் ப்ளாகில் பகிர்ந்த ‘ஓடும் வண்டியிருலிருந்து மலைகள்’, ஷட்டர் வேகத்தை அதிகமாய் வைத்து எடுத்ததே.

  உங்கள் ஆலோசனைப்படி தனிப்பதிவாகவே குறைந்த குறிப்புகளுடன் தர முயன்றிடுகிறேன்.

  போட்டியை அதே தலைப்புக்கு மற்றவர் எப்படியெல்லாம் எடுத்திருக்கிறார்கள் எனக் கவனிக்கிற வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்டு உங்கள் பங்களிப்பைத் தயக்கமின்றி தந்து வாருங்கள். தானாகவே எடுக்கிற படங்களில் முன்னேற்றம் வந்து விடும்.

  நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 24. @கோமதி அரசு,

  மிக்க நன்றி கோமதிம்மா. தங்கள் வாழ்த்துகளில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 25. @சகாதேவன்,

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி:)!

  ReplyDelete
 26. @வல்லிசிம்ஹன்,

  தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி வல்லிம்மா.

  படங்கள் எடுப்பதில் உங்களது குன்றாத ஆர்வமும் எனக்கு ஒரு முன் உதாரணமாகவே இருந்து வருகிறது.

  ReplyDelete
 27. @Nithi Clicks,

  மகிழ்ச்சி. நன்றி நித்தி:)!

  ReplyDelete
 28. @Lux Photography,

  விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும் என நம்புவோம். வாழ்த்துகளுக்கு நன்றி லக்ஷ்மி:)!

  ReplyDelete
 29. @Sruthis,

  மகிழ்ச்சி ஸ்ருதி. உங்கள் படங்களின் நேர்த்தியும் அழகும் என்றும் என் பாராட்டுக்குரியவையாக இருந்து வருகின்றன. வாழ்த்துகளுக்கு நன்றி:)!

  ReplyDelete
 30. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. கலக்குங்க.. நான் ஒரு Canon கேமரா வாங்கியதோடு சரி... கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன்.. இப்ப சும்மா தூங்கிட்டு இருக்கு :-)

  நீங்கள் அதிகம் பூக்களை எடுக்கறீர்களா.. இல்லை எனக்கு மன பிராந்தியா :-)

  மேலும் பல வித்யாசமான படங்களை எடுக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. @கிரி,

  நன்றி கிரி:).

  அதிகம் இரசிக்கப்படும் பூக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிருவதால் அப்படியான ஒரு எண்ணம் உங்களுக்கு வந்திருக்கலாம்:)! எப்போதேனும் நேரமிருந்தால் Flickr Photostream-ல் வகைப்படுத்தப்பட்ட ஆல்பங்களைப் பார்த்திடுங்கள். பூக்கள் 163 ஆக இருக்கலாம். மனிதர்கள், குழந்தைகள், வழிபாட்டுத்தலங்கள், பறவைகள், விலங்குகள், மீன்கள், பட்டாம்பூச்சிகள், ஓவியங்கள், மலைகள், சென்ற ஊர்கள் இவற்றோடு வானம், மரங்கள் கூட கணிசமான எண்ணிக்கையில்:)!

  /தூங்கிட்டு இருக்கு/

  நன்றாகப் படம் எடுக்கிறீர்கள்! நல்ல கேமராவும் வைத்திருக்கிறீர்கள். ஆர்வமின்மைதான் காரணமாய் இருக்க முடியும். வாரயிறுதிகளில் படம் எடுப்பதைக் கட்டாயமாக்கிப் பாருங்களேன். கொஞ்சநாளில் பிடித்துப் போகிறதா பார்க்கலாம்:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin