Tuesday, March 27, 2012

தூறல்: 3 - எங்கேயும் எப்போதும்

கேள்விக் குறியுடன் மாணவர்கள்:

கேள்வித் தாள் கசிவினால் எதிர்காலம் குறித்த கவலையும் கேள்விக்குறியுமாக நிற்கிறார்கள் கர்நாடகத்தின் பி.யூ இரண்டாம் வருட மாணவர்கள். சென்ற வியாழனும் இன்றும் நடக்கவிருந்த இயற்பியல் மற்றும் கணக்குப் பாடங்களின் கேள்வித்தாள்கள் வெளியேறிவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவலருக்குத் தெரியவர அந்தத் தேர்வுகளை ஏப்ரல் முதல் வாரத்துக்குத் தள்ளி வைத்து விட்டுள்ளது பியு கல்வித் துறை. அதே 'வாரத்தில்' அனைத்திந்திய மருத்துவ(AIPMT) மற்றும் IIT நுழைவுத் தேர்வுகளும் இருக்க மாணவர்களுடன் பெற்றோரும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள் என்றாலும் வேறு மாற்றுவழி அறிவிக்கப்படவில்லை. பொது நுழைவுத் தேர்வுக்கும் (CET) திட்டமிட்டபடித் தயாராக நேரமில்லை என ஆத்திரப் படுகிறார்கள், வருத்தம் தெரிவிக்கிறார்கள் மாணவர்கள்.

கணக்கு, இயற்பியல் போக, கைதான மூன்று பேரிடமிருந்தும் கைப்பற்றிய உயிரியல் கேள்வித்தாள்கள் கூட அப்படியே அச்சு அசலாகப் பதினாறாம் தேதி நடந்த முடிந்த தேர்வுக் கேள்விகளை ஒத்ததாகவே இருந்ததெனத் துணை கமிஷனர் சொல்வதைக் கல்வித் துறை மறுத்தாலும் கவனக் குறைவால் பெரிய குளறுபடி நேர்ந்து விட்டுள்ளதை மறுக்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறது.

எங்கேயும் எப்போதும்:

சென்ற மாத இறுதியில் பெங்களூர் ‘வொண்டர் லா’ பொழுது போக்குப் பூங்காவுக்கு 140 மாணவர்களில் ஒருவராகப் பள்ளிச்சுற்றலா சென்றிருந்த பனிரெண்டு வயது மாணவி ஷபரீன் தாஜ் விளையாட்டுக் குளத்தில் மூழ்கி இறந்து போனார். இருந்த 12 மிதவை வளையங்களுக்கு 40 குழந்தைகள் போட்டியிட்டதாகவும் நடுவில் நின்றிருந்த தாஜ் அந்த சமயத்தில் மூழ்கி விட்டதாகவும், அசைவற்று நீருக்குள் கிடைப்பதைக் கவனித்து சில குழந்தைகள் எழுப்பிய சத்தத்தில் 20 நிமிடம் கழித்தே மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது, கூட இருந்த நான்கு மாணவ மாணவியர் போலிசுக்குக் கொடுத்த நேரடி வாக்குமூலத்தின்படி. பூங்கா நிர்வாகம் விழுந்த(பார்த்த?) 15 விநாடிகளில் வெளியேற்றி முதலுதவி அளித்ததாகச் சொல்லுகிறது. மதிய உணவை முடிக்கச் சென்றிருந்த இரண்டு பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரை வழி மொழிகிறார்கள். சர்வதேசத் தரத்துடன் ஒவ்வொரு விளையாட்டுக் குளத்துக்கும் தாங்கள் பதினெட்டு உயிர்க்காப்பாளார்களையும், 2 காவலாளிகளையும் வைத்திருப்பதாக நிர்வாகம் காட்டும் கணக்குகள் ஏழை டெம்போ ஓட்டநரின் மகளைத் திருப்பித் தரப் போவதில்லை. இந்த இடத்தில் எத்தனை பேருக்கு எத்தனை பேர் எனும் விகிதத்தை விடவும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

அமீரகத் தமிழ்மன்ற ஆண்டு விழா மலர்:


1 மார்ச் 2012 நடைபெற்ற அமீரகத் தமிழ்மன்றத்தின் 12-ஆம் ஆண்டுவிழா நிகழ்வினைப் பற்றிய செய்தியை நீங்கள் இங்கே காணலாம். 126 பக்கங்களுடன் அன்று வெளியிடப்பட்ட ஆண்டு விழா மலரில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர்கள் அப்துல் ஜப்பார், என். சொக்கன், ஷைலஜா, ஆசிப் மீரான், காமராசன், ஜீவ்ஸ், அகமது சுபைர், செல்லமுத்து குப்புசாமி, ஷேக் சிந்தா மதார், சென்ஷி, புதுகை அப்துல்லா, நிர்மலா, ஜெஸிலா ரியாஸ் போன்ற பலரது படைப்புகளுடன் எனது சிறுகதை ‘ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’யும் ஒன்பது பக்கங்களுக்கு வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி அமீரகத் தமிழ் மன்றம்!

PiT குழும உறுப்பினர்களில் ஒருவரான MQ Naufal, அவர் எடுத்த படங்களுடன் மற்ற சிலரது படங்களையும் சேர்த்து அட்டைப் படத்தை அழகுற வடிவமைந்திருக்கிறார். அதன் jpg கோப்பினை மின்னஞ்சல் செய்திருந்தார். நன்றி MQN. படைப்பு அனுப்பும்படித் தகவல் தந்த ஜீவ்ஸுக்கும் நன்றி.

பெங்களூர் எழுத்தாளர்களுக்கு வரவேண்டிய 5 புத்தகங்களையும் துபாய் சென்ற நண்பர் ஒருவரின் மூலமாக, சிரமம் பாராமல் அபுதாபிக்குக் கொண்டு வரச் செய்து, இந்தியா வந்த மறுநாளே அக்கறையுடன் கொரியரில் அனுப்பி வைத்த ஹுஸைனம்மாவுக்கு என் அன்பு கலந்த நன்றி:)!
குங்குமம் தோழி:

குங்குமம் பத்திரிகையிலிருந்து வாசகர்களுடன் நட்பு பாராட்டப் புதிதாகப் புறப்பட்டிருக்கிறாள் தோழி. அதன் முதல் இதழைக் கருத்துக்காக எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். பெண்களுக்கு மட்டுமேயான இதழ் எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்காமல் அனைவரும் வாசிக்க விரும்பும் வகையில் பலதரப்பட்ட கட்டுரைகளைத் தந்திருப்பது சிறப்பு. டயட், ஹெல்த், அழகுக் குறிப்புகள், ஆலோசனைகள்; சர்க்கஸில் சாகசம் புரியும் பெண்களின் சிரமங்கள்; தன்னம்பிக்கைப் பெண்கள் குறித்த அறிமுகங்கள்; சமூகத்தால் அலைக்கழிக்கப்படும் பெண்களுக்கு ‘வழிகாட்டும் ஒளி’யாகத் திகழும் அமைப்பு போன்றவற்றுடன் வி ஐ பி-களின் நேர நிர்வாகம்; சினிமா ஈர்ப்பாக இருப்பினும் தன் மனைவியைப் பற்றிய விஜய்யின் பகிர்வு; நி்கழ்காலப் பிரச்சனைக்குத் தீர்வான இன்வெர்ட்டர் விவரங்கள்; பண்டிகைகள் மற்றும் விசேஷங்களைச் சொல்லும் இந்த மாதம் இனிய மாதம் என பல்சுவை இதழாகவே அமைந்துள்ளது.

நிகழ்காலத் தேவையை மனதில் கொண்டு வெளியாகியுள்ளது இணைப்பாகத் தரப்பட்டிருக்கும் சமையல் புத்தகம். பரீட்சைக்குப் படிக்கிற பிள்ளைகளுக்குப் புத்துணர்வைத் தரக்கூடிய உணவுகளைப் பற்றி ஊட்டச் சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன் ஆலோசனைகள் வழங்க அதற்கேற்ற வகையில் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் சூப், கஞ்சி, கூழ், குழம்பு, பீட்சா தோசை, நூடுல்ஸ், சுண்டல், புலாவ், பூரி, பரோட்டா போன்ற பல உணவுகளுக்கான எளிய செய்முறைகளை வழங்கியுள்ளார் மெனு ராணி செல்லம்.

எனது கருத்தாக, இலக்கியத்துக்கு 3 பக்கங்களேனும் ஒதுக்கலாம். கோரிக்கையாக, சமையல் வலைப்பூக்கள் வைத்திருக்கும் பதிவர்களின் உணவுக் குறிப்புகளைத் தொகுப்பாக இணைப்புப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் ‘முத்துச்சரம்’:இலங்கையில் பிரபலமான தமிழ் சேனலான வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி, 2011 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி விருதுக்கான முதலிடத்தைப் பெற்ற ஒன்றாகும். தூவனத்தின் ‘இலக்கிய சஞ்சிகை’ நிகழ்ச்சியில் ஒரு இலக்கிய நேர்காணல், ஒரு குறும்படம், ஒரு வலைப்பூ அறிமுகம் ஆகியன இடம் பெறும்.

சென்ற சனிக்கிழமை 24 மார்ச் அன்று காலை 10 - 11க்கும், நேற்று காலை 11-12க்குமாக ஒளிபரப்பான இலக்கிய சஞ்சிகையின் வலைப்பூக்கள் பகுதியில் ‘முத்துச்சரம்’ குறித்து ஒளிபரப்பியதாகவும்; நான் எடுத்த படங்களும் காட்டப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ரிஷான் ஷெரீஃப். மனமார்ந்த நன்றி ரிஷான்:)!

தேனம்மையுடன் ஒரு இனிய சந்திப்பு
:

வாரயிறுதில் மகனைச் சந்திக்க பெங்களூர் வந்திருந்த தேனம்மை நேற்று காலை என் இல்லம் வந்திருந்தார். அலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் பதிவுகளிலும் படைப்புகளிலுமாகவே அறிமுகமாகியிருந்தவரை நேரில் சந்திக்க முடிந்ததில் அளவற்ற மகிழ்ச்சி. இல்லம், இலக்கியம், உலகம் என அளவளாவிக் கொண்டிருந்ததில் மூன்று மணி நேரங்கள் மூன்று நிமிடங்களாகப் பறந்து விட்டன. ‘ங்கா’வை அவர் கையினாலே பெற்றுக் கொண்டதும் ஆனந்தம்:). சாதனை அரசிகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் மழலை இன்பம் இந்த இரண்டாவது புத்தகம். விரைவில் இப்புத்தகம் குறித்தும் பகிர்ந்து கொள்கிறேன்.
படத்துளி:

கோடை

***

52 comments:

 1. தூறல் அல்ல; மழை. குடை இல்லாமல் நனைந்து இரசித்தேன்.

  ReplyDelete
 2. கேள்விக் குறியுடன் மாணவர்கள் மற்றும்
  எங்கேயும் எப்போதும் இரண்டும் என் மனதில் ஒருவித சோகத்தை உண்டு பண்ணிய போதும், அடுத்து வந்த அமீரகத் தமிழ்மன்ற ஆண்டு விழா மலர்,
  இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் ‘முத்துச்சரம்’,
  தேனம்மையுடன் ஒரு இனிய சந்திப்பு, போன்ற தகவல்கள் மகிழ்ச்சியளிக்கத் தவறவில்லை.


  குங்கமம் தோழி குறித்த தங்களது 'சமையல் வலைப்பூக்கள் வைத்திருக்கும் பதிவர்களின் உணவுக் குறிப்புகளைத் தொகுப்பாக இணைப்புப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை சரியானதே மற்றும் பெண் வலைப்பதிவர்களின் சிறப்பான பதிவுகளையும் வெளியிடலாம்.

  ******************
  //kg gouthaman said...
  தூறல் அல்ல; மழை. குடை இல்லாமல் நனைந்து இரசித்தேன்.//

  மிகவும் சரி.

  ReplyDelete
 3. கேள்வித்தாள் கசிவு - சில பேருடைய ஆர்வத்தினாலும், சில பேருடைய குறுக்கு வழி ஆசையினாலும் நிறைய பேருக்குச் சிரமம்.

  டெம்போ ஓட்டுனர் பெண் மரண சம்பவத்தில் காட்டப் பட்டுள்ள அலட்சியம் மனதை நெருடுகிறது.

  ஆர். கோபி கூட துபாய் சென்று வந்தார். ஹுஸைனம்மா இந்தியா வந்து விட்டாரா...அமீரகத் தமிழ் மன்ற மலரில் உங்கள் கதை + படங்கள் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  இலங்கை வசந்தம் தொலைக் காட்சியில் முத்துச்சரம்.....அதே அதே....

  ங்கா என்றொரு புத்தகமா....அட....

  ReplyDelete
 4. டெம்போ ஓட்டுனர் பெண் மரணம்... - இன்னும் எத்தனை நாள் இந்த அலட்சியம்...... நீச்சல் குளம் என்றால் தேர்ந்த நீச்சல் வீரர்கள் இருக்க வேண்டும்....

  பெரும்பாலான சுற்றுலா தளங்கள் [படகுத் துறைகள்] ஆகியவற்றில் இன்னமும் ஒருவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பது எப்போது மாறும்...

  ReplyDelete
 5. சென்ற சனிக்கிழமை 24 மார்ச் அன்று காலை 10 - 11க்கும், நேற்று காலை 11-12க்குமாக ஒளிபரப்பான இலக்கிய சஞ்சிகையின் வலைப்பூக்கள் பகுதியில் ‘முத்துச்சரம்’ குறித்து ஒளிபரப்பியதாகவும்; நான் எடுத்த படங்களும் காட்டப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ரிஷான் ஷெரீஃப். மனமார்ந்த நன்றி ரிஷான்:)!  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...ஜல் ஜல்லுக்கும் புகைப்படங்களுக்கும்...
  வசந்தத்திற்கும்

  அந்த மாணவர்கள் பாவம்..பரீட்சைக் கவலைகளுடன் இந்தக் கவலை வேறு...

  அந்த விபத்தில் பலியான மாணவியும் பாவம்தான்...

  முகம் தெரியாத நட்புகளைச் சந்திப்பது ஒரு இனிய அனுபவம்தான்..

  ReplyDelete
 7. கடல் கடந்து பரவுகிறது உங்கள் புகழ். வாழ்த்துகள்.

  தோழியிலும் தொடருங்கள் உங்கள் பயணத்தை.

  எங்கேயும் எப்போதும் மனதை வருத்தமடைய செய்தது.

  ReplyDelete
 8. 'தோழி'க்கு விளம்பரம் கொடுப்பதும் குங்குமத்திற்கு விளம்பரம் கொடுக்கும் அதே 'அம்மா' தானா?எதற்கும் இந்த என் மிகப் பழைய 'முதல்' பதிவினைப் பாருங்களேன்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் அக்கா!! தூறலை மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
 10. ''தேனம்மையுடன் ஒரு இனிய சந்திப்பு''
  இரு பெரும் எழுத்தாளர்கள் சந்திப்பு இனிய மகிழ்ச்சி தந்தது.

  ReplyDelete
 11. // எழுத்தாளர்கள் அப்துல் ஜப்பார், என். சொக்கன், ஷைலஜா, ஆசிப் மீரான், காமராசன், ஜீவ்ஸ், அகமது சுபைர், செல்லமுத்து குப்புசாமி, ஷேக் சிந்தா மதார், சென்ஷி, புதுகை அப்துல்லா

  //

  அக்கா நான் எழுத்தாளரா?? அவ்வ்வ்வ் :)

  சரி எப்படி இருந்தது அந்தக் கவிதை?

  ReplyDelete
 12. ரசிக்கும்படியான விசயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.

  ReplyDelete
 13. தேனக்காவின் ‘ங்கா’ அருமையான கவிதைகள் அடங்கிய புத்தகம். மிக ரசிச்சுப் படிச்சேன் நான்! சீக்கிரம் படிச்சுட்டு நீங்க எழுதுங்க. படிக்க ஆவல்! குங்குமம் ‘தோழி’ இதுவரை என் கண்ணுல படலை. வாங்கிப் பாத்துடறேன். அப்புறம்... இலக்கிய சஞ்சிகையில் முத்துச்சரம் பற்றிய பகிர்வினைப் பற்றி அறிந்ததில் மிக்க மனமகிழ்ந்தேன்! என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. முதல் இரு செய்திகளும் வருத்தம் +சோகம் :((

  எழுத்தாளினிகள் சந்திப்பு இப்போது தான் நிகழ்கிறதா?

  புகைப்படம் அருமை

  அமீரக ஆண்டுவிழா மலரிலும், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியிலும் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 15. தூறம் அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. தூறல் அருமை ராமலெட்சுமி.. இலக்கிய சஞ்சிகையில் உங்கள் வலைப்பூ வந்தமைக்கு வாழ்த்துக்கள்பா..:)அமீரக மலரிலும் உங்கள் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.மற்றும் நம் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  இனிய சந்திப்பு.. இனிய உணவு.. இனிய நேரம்.. உங்க புத்தக அலமாரிகளைப் பார்க்கவே இன்னொருதரம் வரணும்..:)

  நன்றி அமைதி அப்பா, ஸ்ரீராம், பாசமலர், ஜனா, கணேஷ், மோகன் குமார்..:)

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம்....!

  ReplyDelete
 18. துறலில்தானே எப்போதும் நனைகிறோம்.இன்று இன்னும்கொஞ்சம் ஸ்பெஷல்.மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா எல்லாத்துக்குமாய் !

  ReplyDelete
 19. kg gouthaman said...
  //தூறல் அல்ல; மழை. குடை இல்லாமல் நனைந்து இரசித்தேன்.//

  நன்றி கெளதமன்:).

  ReplyDelete
 20. அமைதி அப்பா said...
  //கேள்விக் குறியுடன் மாணவர்கள் மற்றும்
  எங்கேயும் எப்போதும் இரண்டும் என் மனதில் ஒருவித சோகத்தை உண்டு பண்ணிய போதும், அடுத்து வந்த அமீரகத் தமிழ்மன்ற ஆண்டு விழா மலர்,இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் ‘முத்துச்சரம்’,தேனம்மையுடன் ஒரு இனிய சந்திப்பு, போன்ற தகவல்கள் மகிழ்ச்சியளிக்கத் தவறவில்லை.//

  விரிவான கருத்துக்கு நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 21. ஸ்ரீராம். said...
  //ஆர். கோபி கூட துபாய் சென்று வந்தார். ஹுஸைனம்மா இந்தியா வந்து விட்டாரா...அமீரகத் தமிழ் மன்ற மலரில் உங்கள் கதை + படங்கள் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

  தெரிந்திருந்தால் சொல்லியிருக்கலாம். ஹுஸைனம்மா விடுமுறைக்காக வந்துள்ளார். வாழ்த்துகளுக்கு நன்றி. கதை மட்டுமே. படங்கள் என்னுடையவை அல்ல:).

  விரிவான பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 22. வெங்கட் நாகராஜ் said...
  //பெரும்பாலான சுற்றுலா தளங்கள் [படகுத் துறைகள்] ஆகியவற்றில் இன்னமும் ஒருவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பது எப்போது மாறும்...//

  பெயரளவிலேயே ஏற்பாடுகள். வருத்தம் தருகிற செயல்பாடுகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
 23. Lakshmi said...
  //வாழ்த்துகள்//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 24. பாச மலர் / Paasa Malar said...
  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...ஜல் ஜல்லுக்கும் புகைப்படங்களுக்கும்...
  வசந்தத்திற்கும்....//

  கருத்துகளுக்கு மிக்க நன்றி மலர். படங்கள் MQN மற்றும் நண்பர்களுடையவை.

  ReplyDelete
 25. தமிழ் உதயம் said...
  //கடல் கடந்து பரவுகிறது உங்கள் புகழ். வாழ்த்துகள்.

  தோழியிலும் தொடருங்கள் உங்கள் பயணத்தை.

  எங்கேயும் எப்போதும் மனதை வருத்தமடைய செய்தது.//

  கருத்துகளுக்கு நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 26. தருமி said...
  //'தோழி'க்கு விளம்பரம் கொடுப்பதும் குங்குமத்திற்கு விளம்பரம் கொடுக்கும் அதே 'அம்மா' தானா?எதற்கும் இந்த என் மிகப் பழைய 'முதல்' பதிவினைப் பாருங்களேன்.//

  பார்த்தேன் சார். முதல் பதிவே அதிரடிக் கேள்விகளுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்.
  அந்த அளவுக்கு அந்தக் குரல் நினைவில் நிற்பதும் விளம்பரத்துக்கு ஒரு வகை வெற்றிதான்:)! வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 27. S.Menaga said...
  //வாழ்த்துக்கள் அக்கா!! தூறலை மிகவும் ரசித்தேன்...//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 28. கே. பி. ஜனா... said...
  //''தேனம்மையுடன் ஒரு இனிய சந்திப்பு''
  இரு பெரும் எழுத்தாளர்கள் சந்திப்பு இனிய மகிழ்ச்சி தந்தது.//

  வருகைக்கு மிக்க நன்றி:)!

  ReplyDelete
 29. புதுகை.அப்துல்லா said...
  //சரி எப்படி இருந்தது அந்தக் கவிதை?//

  ‘பரண்’ போல் பேசப்படும் முற்றமும். மிக அருமையான கவிதை!!

  ReplyDelete
 30. விச்சு said...
  //ரசிக்கும்படியான விசயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 31. கணேஷ் said...
  //தேனக்காவின் ‘ங்கா’ அருமையான கவிதைகள் அடங்கிய புத்தகம். மிக ரசிச்சுப் படிச்சேன் நான்! சீக்கிரம் படிச்சுட்டு நீங்க எழுதுங்க..... என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்!//

  மகிழ்ச்சி. ங்கா குறித்து பகிர்ந்திடுகிறேன்:)! நன்றி கணேஷ்.

  ReplyDelete
 32. துளசி கோபால் said...
  //பகிர்வு அருமை!//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 33. மோகன் குமார் said...
  //எழுத்தாளினிகள் சந்திப்பு இப்போது தான் நிகழ்கிறதா?

  புகைப்படம் அருமை

  அமீரக ஆண்டுவிழா மலரிலும், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியிலும் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு வாழ்த்துகள்//

  ஆம்:)! நன்றி மோகன் குமார், புகைப்படத்துக்கான கருத்துக்கும்.

  ReplyDelete
 34. ஸாதிகா said...
  //தூறல் அருமை.வாழ்த்துக்கள்.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 35. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //தூறல் அருமை ராமலெட்சுமி.. இலக்கிய சஞ்சிகையில் உங்கள் வலைப்பூ வந்தமைக்கு வாழ்த்துக்கள்பா..:)அமீரக மலரிலும் உங்கள் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.மற்றும் நம் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  இனிய சந்திப்பு.. இனிய உணவு.. இனிய நேரம்.. உங்க புத்தக அலமாரிகளைப் பார்க்கவே இன்னொருதரம் வரணும்..:)//

  மகிழ்ச்சியும் நன்றியும் தேனம்மை.

  ReplyDelete
 36. MANO நாஞ்சில் மனோ said...
  //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம்....!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 37. ஹேமா said...
  //தூறலில்தானே எப்போதும் நனைகிறோம்.இன்று இன்னும்கொஞ்சம் ஸ்பெஷல்.மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா எல்லாத்துக்குமாய் !//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஹேமா.

  ReplyDelete
 38. மழையில் நனைந்தேன்....
  முதல் இரண்டு செய்திகளும் வருத்தத்தை தந்தன.... யார் யார் மீது பழி சொன்னாலும் போன உயிர் திரும்பி வருமா.....

  எழுத்தாளர்கள் சந்திப்பு...மிக்க மகிழ்ச்சி.
  இலங்கை தொலைக்காட்சியிலும்,அமீரக தமிழ் மன்ற மலரிலும் தங்களின் படைப்புகள்....மிகவும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 39. @ கோவை2தில்லி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி.

  ReplyDelete
 40. // ‘பரண்’ போல் பேசப்படும் //


  அக்கா, அதையெல்லாம் இன்னும் நாவகம் வச்சு இருக்கீங்களா!!!!!!

  தன்யனானேன் :)

  ReplyDelete
 41. @ புதுகை.அப்துல்லா,

  மகிழ்ச்சி. நீங்களும் நாவகம் வச்சு அடிக்கடி எழுதக் கேட்டுக் கொள்கிறேன்:).

  ReplyDelete
 42. தூறல் அருமை...
  இலங்கை வசந்தத்தில் தங்கள் வலைப்பூ அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. @ அமுதா,

  நன்றி அமுதா.

  ReplyDelete
 44. வாழ்த்துகள் அக்கா :)

  ReplyDelete
 45. @ சுசி,

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 46. // இனிய உணவு.. உங்க புத்தக அலமாரிகளைப் பார்க்கவே இன்னொருதரம் வரணும்..:)

  அப்படியா சங்கதி, பெங்களூர் வரும்போது நாங்களும் வருவோமில்ல :))

  ReplyDelete
 47. வசந்தத்தில் வந்ததுக்கும், ஆண்டு மலருக்கும் முத்துச்சரத்துக்குப் பாராட்டுகள்..

  முதல்ல கேள்வித்தாள், அப்றம் வொண்டர் லாவில் ஏற்பட்ட அசம்பாவிதம்ன்னு ஒரு சிலரோட அலட்சியத்தால எத்தனை பேர் வருத்தம் சுமக்க வேண்டியிருக்குது,

  ReplyDelete
 48. மோகன் குமார் said...
  //அப்படியா சங்கதி, பெங்களூர் வரும்போது நாங்களும் வருவோமில்ல :))//

  நல்லது, புத்தக அலமாரியைப் பற்றி முன்னரே ஒரு பதிவில் சொல்லி வைத்துள்ளீர்கள்:)!

  ReplyDelete
 49. அமைதிச்சாரல் said...
  //வசந்தத்தில் வந்ததுக்கும், ஆண்டு மலருக்கும் முத்துச்சரத்துக்குப் பாராட்டுகள்..//

  கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி சாந்தி.

  ReplyDelete
 50. இலக்கிய சஞ்சிகையின் வலைப்பூக்கள் பகுதியில் ‘முத்துச்சரம்’ குறித்து ஒளிபரப்பியதாகவும்; நான் எடுத்த படங்களும் காட்டப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ரிஷான் ஷெரீஃப்.


  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
 51. congrats Ramalashmi. U are the G8மேலும் மேலும் முத்துசரம் மாலைபோல் நீண்ட சரமாகவே தொடுத்து கொடுக்கவேண்டும்.
  கடல் கடந்து வந்திட்டிங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin