Wednesday, March 7, 2012

மனிதனும் மிருகமும் - மார்ச் PiT போட்டி - மாதிரிப் படங்களும் சில குறிப்புகளும்

‘மனிதனும் மிருகமும்’ அதுவும் ‘கருப்பு வெள்ளையில்’ இருக்க வேண்டுமெனக் கட்டம் கட்டி சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார் நடுவர் ஜீவ்ஸ். முதலில், போட்டிப் படங்களை அனுப்பவேண்டிய பிகாஸா வெப் மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை கவனிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

Raw mode-ல் எடுக்கையில் எவ்வளவு நுண்ணியமான விவரங்கள் கிடைக்கும் என்பது உட்பட நல்ல பல குறிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார் நடுவர், போட்டி அறிவிப்புப் பதிவில்.

மேலும் சில குறிப்புகளை நான் எடுத்த சில படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வண்ணப்படங்களை விடவும் ஒரு காட்சியை வலிமையாக வெளிப்படுத்த கருப்பு வெள்ளையே சிறப்பானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாதென எண்ணுகிறேன். நீயா நானா என ஓடிப் பிடித்து விளையாடும் ஒளியும் நிழலும்(light and shade); திறமையான கம்போஸிஷனும், எடுக்கும் முன்னரே காட்சி அமைப்பை உள்வாங்கிடும் ஆற்றலுமே ஒரு நல்ல கருப்பு வெள்ளைப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இதில் நோக்கமானது சப்ஜெக்டை அழுத்தமாக வெளிக்கொணருவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காட்சிக்குள் வருகிற அழுத்தமான கோடுகள்(படம் 6-ல் மரங்கள்), தனித்துவமான சப்ஜெக்ட் அவுட்லைன் இவை எளிமையான காட்சியைக் கூட குறிப்பிடத்தக்க படமாக மாற்றிவிடும்.


உங்கள் கேமராவில் கருப்பு வெள்ளையில் எடுக்கிற வசதி இருந்தாலும் கூட வண்ணத்தில் எடுத்து மாற்றுவதால் நம் விருப்பத்திற்கேற்ப மேம்படுத்திடும் சுதந்திரம் கிடைத்திடும் என நடுவர் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் வைக்க வேண்டிய ஒன்று. தயவுசெய்து வண்ணப் படத்தை கருப்பு வெள்ளைக்கு மாற்றி அப்படியே போட்டிக்கு அனுப்புவதைத் தவிர்த்திடுங்கள். கான்ட்ராஸ்ட் சரியாக அமையுமாறு ஒளியோடும் நிழலோடும் நீங்களும் விளையாடுங்கள். காட்சி தத்ரூபமாகி நிழல் நிஜமாகும் அதிசயத்தைக் காண்பீர்கள்:)!

# 1.
கருப்பு வெள்ளையாக மாற்றும் நோக்கத்துடனே படம் எடுக்கும் போது அது சிறப்பாக வர வேண்டுமெனில் அப்படத்தில் பரவ இருக்கும் ‘கருமைக்கும் வெண்மைக்கும்’ இடையேயான சாம்பல் வண்ணம் (க்ரே) எப்படி அமையும் என்பதையும் கற்பனை செய்து பார்க்க வேண்டும். மேலுள்ள படம் 1-ல் பின்னணியிலிருக்கும் சாம்பல் நிறம் படத்துக்கு எப்படி அழகூட்டுகிறது எனக் கவனியுங்கள்.

# 2


# 3


# 4


# 5


# 6
மேலுள்ள படத்தில் ‘இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை” என அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கும் ஸ்டைலால் மனிதனும் மிருகமும் நம்மைக் கவருகிறார்கள் எளிமையான காட்சியானாலும் கூட. பசும்புல்லால் பரவி நிற்கும் சாம்பல் நிறம், மரங்கள் ஏற்படுத்தும் அழுத்தமான கோடுகள் (strong lines) இவை படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

அதே போல் கீழ்வரும் படங்கள் 7 மற்றும் 8-ல் சப்ஜெக்டின் அவுட்லைன் தனித்துவம் கொடுக்கிறது படங்களுக்கு:

# 7


# 8


எல்லா வண்ணப் புகைப்படங்களுமே கருப்பு வெள்ளையில் மாத்தும் போது அழகா இருக்கனுங்கற அவசியம் இல்லை....காலை மாலை வேளைகளில் படம் எடுப்பது நல்லது” என நடுவர் சொல்லியிருப்பதற்கு சரியான எடுத்துக் காட்டுதான் கீழ்வரும் படம்!!!

# 8
பழுப்புக் குதிரைகள் பளிச்சுன்னு தெரிந்தாற் போல வெள்ளைக் குதிரை தெரியணுமென்றால் பின்னணி சற்று அடர்ந்த மரத்தின் நிழலோடு அமைந்திருக்கலாம். போகவும் உச்சிச் சூரியனின் ஒளி குதிரையின் முகத்தில் ஓவர் எக்ஸ்போஸ் ஆகி அதன் நுண்ணிய விவரங்கள் (படம் ஒன்றிலிருப்பது போல இமைகள்), தோலின் தன்மை இதெல்லாம் தெரியுதா பாருங்க. இல்லை. ஊஹூம், இது போன்ற காட்சி கருப்பு வெள்ளைக்கு சரி வராது. இதுவே அதிகாலை பத்து மணிக்கு முன் , மாலை ஐந்து மணிக்குப் பின் சூரியன் சற்று சாய்வாக இருக்கையில் கிடைக்கும் மிதமான ஒளியில் எடுத்திருந்தால் படம் அருமையான (details) விவரங்களுடன் அமைந்திருக்கும். குதிரையின் நெற்றியில் ஸ்டைலாக சுருண்டு கிடக்கும் முடியை அழகாகக் காட்ட முடிந்திருக்கும்:)!

எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும், எத்தனை சவாலாக இருந்தாலும் உற்சாகமாகக் களம் இறங்கி விடும் நண்பர்களுக்கு ஒரு சபாஷ்! போட்டிக்கு வர ஆரம்பித்து விட்டப் படங்களின் அணிவகுப்பை இங்கே காணலாம். அவ்வப்போது சென்று பார்த்து கருத்துகளை வழங்கி ஊக்கம் தாருங்கள்:)! உங்கள் படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20 மார்ச் 2012.
***

30 comments:

 1. எல்லாப் படங்களையும் ரசிக்க முடிந்தது. அதிலும் முதல் படம் குதிரை மேல் அந்த இளவரசி... டாப்.

  ReplyDelete
 2. தொடர்ந்து உங்கள் பகிர்வை கருத்தில் கொண்டால் அருமையான படங்களை தரமுடியும் ராமலஷ்மி.

  ReplyDelete
 3. கலர் படங்களைவிட கருப்பு வெள்ளைப்படங்களில் உயிர் இருக்கு

  ReplyDelete
 4. கறுப்பு வெள்ளை படங்கள் எப்போதும் அழகு தான். அருமையான படங்கள்.

  ReplyDelete
 5. அக்கா...எனக்கும் முதலாவது படம்தான் ராஜ்கம்பீரமாய் இருக்கு !

  ReplyDelete
 6. கருப்பு வெள்ளைப்படங்களே இப்படி கணகளைப்பறிக்கின்றனவே!

  ReplyDelete
 7. எல்லா படங்களுமே உங்க கை வண்ணத்தால் அருமை.

  ReplyDelete
 8. எல்லா படங்களும் அழகு ராமலக்ஷமி.

  உங்கள் யோசனைகள் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு மிகவும் பயன்படும்.

  ReplyDelete
 9. எனக்கும் முதல்படம் பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 10. ஆஹா......

  மனிதனும் கோகியும், மனிதனும் கப்புவும் இப்படி ஏராளமான தலைப்புகளுக்கு நான் ரெடி:-))))))

  கருப்பு வெளுப்புலேதான் உயிர் அதிகம்!!!!!

  ReplyDelete
 11. நுண்ணிய விவரங்கள். நடுப்பகலில் எடுக்கும் படம் அவ்வளவு சிறப்பாக வருவதில்லை என்று தெரிந்து கொண்டேன். ஆறாம் படம் அருமை. வாசகர்களின் கற்பனையைத் தூண்டி விடும், படைப்பாற்றலை மேம்படுத்தும் இந்தப் போட்டி பாராட்டுக்குரியது.

  ReplyDelete
 12. விப்கியர் என்னும் ஏழு வகை வண்ணங்களோ !
  ஊதா நீல பச்சை மஞ்சள் சிவப்பெனச் சொல்லப்படுவையோ !!
  எல்லா வற்றிற்குமே ஆதாரம் நமது
  ஒரு பார்வை தான்.
  உன்னித்துப் பார்த்தால்
  ஒரு தத்துவம் தான்
  ஒன்று முழு வெளிச்சம் வெள்ளை
  ஒன்று முழு இருட்டு கருப்பு
  ஒன்று இருப்பது, மற்றும்
  ஒன்று இல்லாதது.
  இரண்டுக்குமிடையே சதிராடுவதே
  ஏனைய நிறங்கள்.


  நிழற்படங்கள் என்ன !! அந்தக்காலத்து
  நீண்டு முடிவில்லா ஓடிய திரை ஓவியங்களும்
  கருப்பு வெள்ளை தானே ! அந்தக்
  கருப்பு வெள்ளை கண்ணை உறுத்தாது. இன்று
  காணவும் கிடைக்காது ...

  கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு !!
  ஏன்னா, எங்க ஊட்டு
  மீனாட்சி யும் கருப்பு கலருதான் !!
  கருந் துளசி போல ...
  இருந்தா என்ன !!
  அந்த லட்சணம் வருமோ
  அப்படின்னு அம்பது வருசம் முன்னாடி
  அம்மா சொல்லுவாக !!

  //கலர் படங்களைவிட கருப்பு வெள்ளைப்படங்களில் உயிர் இருக்கு//

  உண்மையும் இருக்கு

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 13. கணேஷ் said...
  //எல்லாப் படங்களையும் ரசிக்க முடிந்தது. அதிலும் முதல் படம் குதிரை மேல் அந்த இளவரசி... டாப்.//

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 14. Asiya Omar said...
  //தொடர்ந்து உங்கள் பகிர்வை கருத்தில் கொண்டால் அருமையான படங்களை தரமுடியும் ராமலஷ்மி.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 15. Lakshmi said...
  //கலர் படங்களைவிட கருப்பு வெள்ளைப்படங்களில் உயிர் இருக்கு//

  ஆம் லக்ஷ்மிம்மா:). நன்றி.

  ReplyDelete
 16. தமிழ் உதயம் said...
  //கறுப்பு வெள்ளை படங்கள் எப்போதும் அழகு தான். அருமையான படங்கள்.//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 17. ஹேமா said...
  //அக்கா...எனக்கும் முதலாவது படம்தான் ராஜ்கம்பீரமாய் இருக்கு !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 18. ஸாதிகா said...
  //கருப்பு வெள்ளைப்படங்களே இப்படி கணகளைப்பறிக்கின்றனவே!//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 19. கோவை2தில்லி said...
  //எல்லா படங்களுமே உங்க கை வண்ணத்தால் அருமை.//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 20. கோமதி அரசு said...
  //எல்லா படங்களும் அழகு ராமலக்ஷமி.

  உங்கள் யோசனைகள் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு மிகவும் பயன்படும்.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 21. விச்சு said...
  //எனக்கும் முதல்படம் பிடிச்சிருக்கு.//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 22. அப்பாதுரை said...
  //beautiful and creative.//

  மகிழ்ச்சி. நன்றி:)!

  ReplyDelete
 23. துளசி கோபால் said...
  //ஆஹா......

  மனிதனும் கோகியும், மனிதனும் கப்புவும் இப்படி ஏராளமான தலைப்புகளுக்கு நான் ரெடி:-))))))

  கருப்பு வெளுப்புலேதான் உயிர் அதிகம்!!!!!//

  நன்றி மேடம். காத்திருக்கிறோம் கப்புவையும் கோகியையும் மீண்டும் துளசி தளத்தில் பார்க்க:)!

  ReplyDelete
 24. ஸ்ரீராம். said...
  //நுண்ணிய விவரங்கள். நடுப்பகலில் எடுக்கும் படம் அவ்வளவு சிறப்பாக வருவதில்லை என்று தெரிந்து கொண்டேன். ஆறாம் படம் அருமை. வாசகர்களின் கற்பனையைத் தூண்டி விடும், படைப்பாற்றலை மேம்படுத்தும் இந்தப் போட்டி பாராட்டுக்குரியது.//

  கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 25. sury said...
  //நிழற்படங்கள் என்ன !! அந்தக்காலத்து
  நீண்டு முடிவில்லா ஓடிய திரை ஓவியங்களும்
  கருப்பு வெள்ளை தானே ! அந்தக்
  கருப்பு வெள்ளை கண்ணை உறுத்தாது. இன்று
  காணவும் கிடைக்காது ...//

  ஆம், அவை போல் வராது.

  //அந்த லட்சணம் வருமோ
  அப்படின்னு அம்பது வருசம் முன்னாடி
  அம்மா சொல்லுவாக !!//

  சரியாகதான் சொல்லியிருக்காங்க:)! கவித்துவமாகக் பகிர்ந்து கொண்ட விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 26. எல்லா படங்களும் அழகு.

  ReplyDelete
 27. Kanchana Radhakrishnan said...
  //எல்லா படங்களும் அழகு.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 28. அருமையான பதிவு....அழகான டிப்ஸ்...கண்கவர் படங்கள்...கலக்கல்ஸ் இராமலக்ஷ்மி

  ReplyDelete
 29. @ Nithi Clicks,

  நன்றி நித்தி:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin