Tuesday, March 20, 2012

கூடு இங்கே குருவி எங்கே..

ல்லாசமாக உற்சாகமாகக் குரலெழுப்பி, உலகம் பிறந்தது தமக்காக என்பது போல் அங்கும் இங்குமாக விர் விர் எனப் பறந்து திரிந்த சிட்டுக்குருவிகள் இன்று எங்கே போயின? நம்புங்கள் அவற்றை நான் கண்ணால் கண்டு ஆயிற்று ஆண்டுகள் பல.

sparrow nest
இந்தக் கூடு நான் பார்த்து வளர்ந்த சிட்டுக் குருவிகள் கட்டியதில்லை. தங்கை வீட்டு மாடித்தோட்டத்தில் புள்ளிச் சில்லைகள் கட்டிய ஒன்று. 

சின்ன வயதில் எங்கள் வீட்டின் உள் முற்றத்துத் தூண்கள் இரண்டுக்கு நடுவே சின்னப் பரண் அமைத்திருந்தார்கள் குருவிகளுக்காக. வைக்கோல்களைக் கொண்டு வந்து அழகாகப் பரத்தி அப்பரணைத் தங்கள் கூடாகக் கொண்டு வாழ்ந்து வந்தன. தாய்க்குருவியும் குஞ்சுகளும் குதூகலமாக எழுப்பும் சத்தம் முற்றத்தையும் மனதையும் நிறைக்கும். அம்மாக் குருவி இரைதேடச் சென்றிருக்கும் சமயம் தூணுக்கு அருகே எங்கள் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் நாற்காலியின் கைப்பிடியில் ஏறி,  தூணின் மேல்பகுதியை வளைத்துப் பிடித்துக் கொண்டு குஞ்சுகளை எட்டிப் பார்த்து ‘ஹலோ ஹாய்’ சொல்வது பிள்ளைகள் எங்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை சிறகு முளைக்காத சின்னஞ்சிறு குஞ்சொன்று பரணிலிருந்து விழுந்து விட அந்தப் பட்டுக் குஞ்சினை செய்தித்தாளில் எடுத்து மீண்டும் தாத்தா கூட்டில் விட்டது நினைவில் நிற்கிறது. 

கதை கேட்டுச் சும்மா சும்மா நச்சரிக்கும் சின்னக் குழந்தைகளைக் கலாட்டா செய்ய, வயதில் பெரிய குழந்தைகள் வழிவழியாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு: பாயாசம் பருக ஆசைப்பட்ட குருவிகள் ஒரு பாட்டியிடம் போய் உதவி கேட்டனவாம். “சரி நீங்கள் எனக்கு நெல்மணிகளைக் கொண்டு வந்து தாருங்கள். அவற்றைத் திருத்தி அரிசி எடுத்து வெல்லப் பாயாசம் செய்து தருகிறேன்” என்றாராம் பாட்டி. அருகே ஒரு வீட்டு முற்றத்திலேயே நெல் அவித்துக் காய வைத்திருந்தார்களாம். அந்த வீட்டுக்கு முதலில் ஒரு குருவி வந்துச்சாம். ஒரு நெல்லைத் தூக்குச்சாம். ஒருவரும் விரட்டவில்லை என்றதும் தைரியமா ரெண்டு குருவி வந்துச்சாம் ரெண்டு நெல்லைத் தூக்குச்சாம். அப்புறம் மூணு குருவி வந்துச்சாம் மூணு நெல்லை...! நாலு குருவி... நாலு நெல்லை...!! கண் அகலக் கேட்டபடி இருக்கிற குழந்தைகள் அஞ்சு நெல்லைத் தூக்க அஞ்சு குருவி வருகிற போது முழுசா முழிச்சுக்கிட்டு முகம் சிவக்க அடிக்க வருவார்கள்:)! 

இன்று நமக்கு உணவு வேண்டுமே என விட்டு வைத்திருக்கிற கொஞ்ச நஞ்ச வயல்களால் நெல் இருக்கு. உலகம் எனும் கூடு இருக்கு. குருவிதான் இல்லை:(! மானுடருக்கான கூடு மட்டும் இல்லை உலகம். புல் பூண்டு புழுக்கள் உட்பட கோடானு கோடி ஜீவராசிகளுக்காகப் படைக்கப்பட்ட ஒன்று. அத்தனையும் காக்கப்பட்டால்தான் பூமி பூமியாக இருக்க முடியும். வனங்களை அழித்தபடி வாழும் நகரிலிருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்தபடி உருவாக்கிக் கொண்டிருக்கும் கான்க்ரீட் காடுகளைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்வதாக முடிவே கட்டி விட்டோமா? 

என் அம்மா வீட்டுக்கு அடுத்த வீட்டு மொட்டை மாடியில் அலைபேசிக் கோபுரம் அமைக்க அந்த வீட்டினர் அனுமதி அளித்து அதற்காக ஒரு தொகையை வாடகையாகப் பெற்று வந்தனர். அப்போது வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் ஒரு பறவையைக் கூட காண முடியாது. இது மனிதரின் உடல் நலனுக்கும் தீங்குதான். குடியிருப்புப் பகுதியில் இருக்கக் கூடாதென யாரும் புகார் செய்தார்களா அல்லது வேறு காரணமா தெரியவில்லை, இரண்டு வருடங்கள் முன் அந்தக் கோபுரம் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அம்மா வீடு சோலை வனமாக உள்ளது. அதிகாலையில் ஆரம்பிக்கும் பறவைகளின் சங்கீதம் நாள் முழுக்கக் கேட்டபடி இருக்கிறது. அழகழகான வண்ண வண்ணச் சிட்டுகள்; மரங்கொத்திகள்; பச்சைக் கிளிகள் என அத்தனை ரம்மியமாக உள்ளது. கோபுரத்திலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளே அவற்றை அதுகாலமும் நெருங்க விடாமல் செய்திருக்கின்றன.

**
 
இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.

அழிந்து கொண்டிருக்கும் இவ்வினத்தைக் காத்து ஆரோக்கிய உலகினை அடுத்த தலைமுறைக்கு வழங்க 2010-லிருந்து மார்ச் 20ஆம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பதிவுலக நண்பர்கள் பலரும் இதுகுறித்து இன்று இட்டிருக்கும் பதிவுகள்: 1. குருவிகளின் தாகம் தணிக்கக் கோருகிறார் எங்கள் ப்ளாக், ஷோபனா. 2. அப்பாவிக் குருவிகளை அரவணைக்க அழைக்கிறார் எல்லாம் புகழும் இறைவனுக்கே, ஸாதிகா. சென்னையில் எங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன எனும் விபரங்களைச் சேகரித்து அவ்வினங்கள் அழியாமல் பாதுக்காத்திட முயன்றிடும் இயற்கை ஆர்வலர் சங்கத்தைப் பற்றியத் தகவல்களும் தந்துள்ளார். 3. ‘பறவைகளுக்கான சுதந்திரத்தை நாம் எப்போதும் மதிப்பதில்லை’ என வருந்துகிற எண்ணிய முடிதல் வேண்டும், ஷைலஜா சிட்டுக்குருவி குறித்து அழகான கவிதை ஒன்றையும் படைத்துள்ளார். 4. ‘மண்ணில் உயர்ந்த புள்ளின் இனமது!’ என அக்கக்கூக் குருவியைக் கொண்டாடுகிறார் நித்திலம், பவள சங்கரி 5. காணாமல் போன சிட்டுக்குருவிகளைத் திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஆறுதலான செய்தியைத் தந்திருக்கிறார் மண், மரம், மழை, மனிதன் திரு. வின்சென்ட். 6. அழகுக் குருவிகளைக் காணவில்லையே என ஆதங்கத்துடன் காரணங்களை அலசுகிறார் மனதோடு மட்டும், கெளசல்யா. 7. நினைவுகளில் மூழ்கிச் சிட்டுக்குருவிகளைத் தேடுகிற திருமதி பக்கங்கள் கோமதி அரசு அவர்கள் ‘உன்னை மீண்டும் கண்டால் குழந்தையை போலக் குதூகலிப்பேன். அந்த நாள் மீண்டும் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என்கிறார். 8. ‘பிழைத்துக் கிடக்கிறோம்’ எனத் தம் வருத்தத்தை அமைதிச்சாரலின் கவிதை நேரத்தில் வந்து தெரிவிக்கின்றன குருவிகள். 9. தங்கள் வீடே குருவிகளின் கூடு என்பதை மகிழ்வுடன் பகிரும் வேர்களைத் தேடி.. முனைவர். இரா. குணசீலன் . ‘குருவிகளும் வாழட்டுமே.. உயிர்களில் என்ன ஏற்றத்தாழ்வு..’ என்று கேட்கிறார். 10. அழகழகான குருவிகளின் படங்களுடன் அவை குறித்தத் தகவல்களையும் அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் மணிராஜ் இராஜராஜேஸ்வரி.
***

67 comments:

 1. உண்மைதான் அக்கா சிட்டுக்குருவியை பார்த்தே பலவருடம் ஆகுது...இன்னிக்கு சிட்டுக்குருவிகள் தினமா,ஏதொதோக்கு ஒருதினம் கொண்டாடுகிறும்.இப்பறவைக்கும் கொண்டாடுவதில் சந்தோஷமே,இனிமேலாவது அவைகளை அழிக்காமல் வளர்ப்போமாக.

  ReplyDelete
 2. அன்பின் ராமலஷ்மி

  அருமை.தங்கள் நினைவலைகள் படிக்கும் போதே சுகமான அனுபவம்... காலை நேரம் பறவைகளின் இனிய கீதமும், கணகளுக்கு குளிர்ச்சியான தரிசனமும் கிடைத்தால் அன்றைய பொழுது சுகமாக கழியும் அல்லவா.. நன்றி .

  அன்புடன்

  பவள சங்கரி.

  ReplyDelete
 3. குவிகள் தினத்தை நினவில் மட்டுமே வைத்திருக்கும் காலம் வரப்போகிறது.அழகான பட்மும் நினைவலைகளும் !

  ReplyDelete
 4. இன்று அலுவலகத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தேன். மாலைதான் எனக்கு சிட்டுக் குருவிகள் தினமென்று நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு.அந்த நாள் நினைவலைகளை நினைவுகூர்ந்தது ரம்யமாக இருந்தது.

  சிட்டுக்குருவி பற்றி ஏனைய பதிவர்கள் இட்ட இட்கையை லின்குடன் அறிமுகப்படுத்தியமையும் மிக நன்று.

  http://www.kousalyaraj.com/2012/03/blog-post_20.html கெளசல்யாவின் இந்த இடுகையும் பாருங்கள்.

  ReplyDelete
 6. எவ்வளவு அருமையான தலைப்பு. "கூடு இங்கே... குருவி எங்கே..." பேராசை கொண்ட மனிதர்கள் மத்தியில் சிட்டுக்குருவிகளுக்கு இடமும் இல்லை, சூழலும் இல்லை. இத்தனை பெரிய உலகில் இத்துணுண்டு குருவிகளுக்கு இடமில்லாமல் செய்து விட்டார்களே மனிதர்கள்.

  ReplyDelete
 7. குருவிகளின் சத்தங்களுடன் விடிகின்ற அந்தக் காலைப்பொழுதுகள்..சுகம் ராமலக்ஷ்மி...

  ReplyDelete
 8. குருவி நெல்லுக்கதை சொல்லி நான் அடிவாங்குவேன் எங்க வீட்டுக்குட்டீஸ்கிட்ட..:)

  ReplyDelete
 9. தலைப்பே என்னையும் இழுத்து வந்தது. பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயங்களில் சிட்டுக் குருவியும் ஒன்று. இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் எத்தனை அழகு. மனிதன் விழித்துக் கொள்ள இந்த மாதிரி தினங்கள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. அருமையான மற்ற பதிவுகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 10. சிந்திக்க வேண்டிய இடுகை.. மனம் பதறுகிறது இந்தமாதிரி பறவை இனமெல்லாம் அழிந்துகொண்டுவருவதில்...நல்ல முயற்சி யாரும் எடுத்தால் கண்டிப்பாய் நாமும் நம்மாலான பணி செய்து ஒத்துழைப்போம். நன்றி ராமலஷ்மி எனது பதிவையும் இங்கே குறிப்பிட்டதற்கு

  ReplyDelete
 11. இப்போது அம்மா வீடு சோலை வனமாக உள்ளது. அதிகாலையில் ஆரம்பிக்கும் பறவைகளின் சங்கீதம் நாள் முழுக்கக் கேட்டபடி இருக்கிறது. அழகழகான வண்ண வண்ணச் சிட்டுகள்; மரங்கொத்திகள்; பச்சைக் கிளிகள் என அத்தனை ரம்மியமாக உள்ளது.//


  எத்தனை இன்பங்களை அலைபேசி கோபுரங்கள் அழித்து இருக்கிறது!
  பதிவு மிக அருமையாக இருக்கிறது ராமலக்ஷ்மி.

  நான் பதிவு தாமதமாய் போட்டு விட்டேன் , அதனால் ராமலக்ஷ்மியின் பதிவில் என் பதிவு இடம் பெற முடியவில்லை.

  ReplyDelete
 12. எங்கள் ப்ளாக் சுட்டி கொடுத்ததற்கு எங்கள் நன்றி.

  ReplyDelete
 13. தலைப்பும் பதிவும் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. சிறுவயதில் நெல்லுக் கதை கேட்ட நினைவு இருக்கிறது! மீட்டெடுப்போமா சிட்டுக்குருவி இனத்தை?

  ReplyDelete
 15. சுத்திலும் மலை வாசஸ்தலங்கள் இருக்கறதுனாலயோ என்னவோ இங்கே குருவிகள் காணக்கிடைக்குது. ஆளு இல்லைன்னா எங்கூட்டு அடுக்களை ஜன்னல் சுவர்ல வந்து உக்காந்துக்கிட்டு வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்கற அழகே தனி.

  சுட்டி கொடுத்ததுக்கு நன்னிங்கோ..:-)

  ReplyDelete
 16. குருவிகள் இனம் அழிந்து வருவதில் எனக்கும் மிகமிக வருத்தம்தான். இத‌ை மனதில் பதியும் வண்ணம் எழுதியதோடு, மற்றவர்கள் எழுதியவற்றின் சுட்டிகளையும் கொடுத்திருந்தது வெகு சிறப்பு.

  ReplyDelete
 17. உங்கள் போட்டோ சூப்பர். நீங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளைப் படித்துவிட்டேன். சிட்டுக் குருவியைப் பாதுகாப்போம்.

  ReplyDelete
 18. அருமை..
  தேவையான இடுகை..

  இதோ எனது இடுகை..

  குருவிகளும் வாழட்டுமே..

  http://gunathamizh.blogspot.in/2012/03/blog-post_20.html

  ReplyDelete
 19. நல்ல பகிர்வு. Photo super.

  ReplyDelete
 20. இவ்விடுகைக்கு என் வலையில் நன்றியோடு இணைப்பளித்துள்ளேன்..

  ReplyDelete
 21. very nice and heart touching post.

  All the`sparrows are here in our`garden `

  ReplyDelete
 22. நல்ல பகிர்வு....

  காலையில் குருவிகள், விதவிதமான பறவைகளின் சத்தம் கேட்டு எழுந்த நாட்கள் நினைவில் மட்டும்...

  இப்போதோ அலாரம் அடித்து அலற வைக்கிறது.... :(

  ReplyDelete
 23. மிக நல்ல பகிர்வு.தொகுத்து கொடுத்தமை நன்று.

  இங்கு அல் ஐனில் எங்கள் வீட்டு பின்புற பாலகனிக்கு சிட்டுக் குருவிகள் வருவதுண்டு.நான் படம் எடுப்பதற்குள் சிட்டாக பற்ந்து விடுகின்றன.பேரீச்சை தோப்பிற்குள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.எப்பவும் எங்கள் வீட்டில் இருந்து கேட்டாலே காலையும் மாலையும் கீச் கீச் என்ற குரலைக் கேட்கலாம்.

  ReplyDelete
 24. http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html

  சிங்காரச்சிட்டுக் குருவிகள்..

  முத்துச்சரம் சூட அழைக்கிறார்கள்..

  ReplyDelete
 25. அலை பேசிக்கோபுரம் மனிதர்களுக்கும் ஆபத்துத்தானே...

  புற்று நோய் , இதய நோய் போன்ற கொடிய நோய்களுக்கு வித்திடுமே !

  ReplyDelete
 26. //All the`sparrows are here in our`garden `//

  துளசி கோபால் அவர்கள் சொன்னது போல எல்லாக்குருவிகளும் இருக்கு, ஊரில் உள்ள எங்க வீட்டில் நடுஹாலில் இப்பவும் குருவிக்கூடு கட்டியுள்ளது.

  மேலும் சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளப்பறவ்வையினமும் அல்ல, உலகில் மிக அதிகம் உள்ளப்பறவை கோழிகளே ,அதற்கு அடுத்த இடத்தில் சுமார் 2/3 உலக பரப்பில் எங்கும் காணப்படுவது சிட்டுக்குருவிகளே. மேலும் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகள், நியுசியிலும் கூட அதிக எண்ணிக்கையில் இருப்பதால் பயிர்களை அழிப்பதாலும் பெஸ்ட் என வரையறுக்கப்பட்டுள்ளது.

  சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையம் கவலைப்பட தேவையில்லாத உயிரினம் என்றே வகைப்படுத்தியுள்ளது. நகர விரிவாக்கத்தின் காரணமாக கொஞ்சம் குறைந்திருக்கலாம் அவ்வளவே.இதெல்லாம் மயன் காலண்டர் படி உலகம் அழியும் என்று சொல்லி கிளப்பும் புரளியைப்போன்றது அல்லது சிலர் சுய விளம்பரத்திற்காக பரப்புவது.

  மேலும் விரிவாக ஒருப்பதிவும் போட்டுள்ளேன்,
  சிட்டுக்குருவி கட்டுக்கதைகள்

  ---
  //Asiya Omar said...
  மிக நல்ல பகிர்வு.தொகுத்து கொடுத்தமை நன்று.

  இங்கு அல் ஐனில் எங்கள் வீட்டு பின்புற பாலகனிக்கு சிட்டுக் குருவிகள் வருவதுண்டு.நான் படம் எடுப்பதற்குள் சிட்டாக பற்ந்து விடுகின்றன.பேரீச்சை தோப்பிற்குள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.//
  அரேபியா பகுதியில் நிறைய இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் ,காரணம் அங்கே தான் சிட்டுக்குருவிகள் முதலில் தோன்றின,அரேபியா ,ஆப்பிரிக்காவில் குருவிகள் அதிகமாக இருக்கின்றனவாம்.

  ReplyDelete
 27. கட்டுரையும் தொகுப்பும் அருமை. வாழ்த்துகள்.எனது பதிவையும் தொகுப்பில் இணைத்ததிற்கு நன்றி.

  ReplyDelete
 28. சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - என்றொரு பாட்டு வரும். ஆனால் இன்று சிட்டு குருவிக்குத் தட்டுப்பாடு என்றாகி விட்ட வருத்தமான நிலை!

  ReplyDelete
 29. அருமையான பகிர்வு. சிட்டுக்குருவிகள் அழிந்து வருவது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

  நானும் குருவி பாயசம் குடித்த கதையை சொல்வதுண்டு. இப்போ ரோஷ்ணி எனக்கு இந்தக் கதையை சொல்கிறாள்...

  ReplyDelete
 30. S.Menaga said...
  //உண்மைதான் அக்கா சிட்டுக்குருவியை பார்த்தே பலவருடம் ஆகுது.......இனிமேலாவது அவைகளை அழிக்காமல் வளர்ப்போமாக.//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 31. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //அருமை.தங்கள் நினைவலைகள் படிக்கும் போதே சுகமான அனுபவம்... காலை நேரம் பறவைகளின் இனிய கீதமும், கணகளுக்கு குளிர்ச்சியான தரிசனமும் கிடைத்தால் அன்றைய பொழுது சுகமாக கழியும் அல்லவா.. நன்றி .//

  நன்றி பவளா.

  ReplyDelete
 32. ஹேமா said...
  //குருவிகள் தினத்தை நினவில் மட்டுமே வைத்திருக்கும் காலம் வரப்போகிறது. அழகான படமும் நினைவலைகளும் !//

  கருத்துக்கு நன்றி ஹேமா.

  ReplyDelete
 33. குமரி எஸ். நீலகண்டன் said...
  //இன்று அலுவலகத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தேன். மாலைதான் எனக்கு சிட்டுக் குருவிகள் தினமென்று நினைவிற்கு வந்தது.//

  கருத்துக்கு நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 34. ஸாதிகா said...
  //நல்ல பகிர்வு.அந்த நாள் நினைவலைகளை நினைவுகூர்ந்தது ரம்யமாக இருந்தது.//

  நன்றி ஸாதிகா. கெளசல்யாவின் இடுகையையும் இணைத்துக் கொண்டேன்.

  ReplyDelete
 35. தமிழ் உதயம் said...
  //எவ்வளவு அருமையான தலைப்பு. "கூடு இங்கே... குருவி எங்கே..." பேராசை கொண்ட மனிதர்கள் மத்தியில் சிட்டுக்குருவிகளுக்கு இடமும் இல்லை, சூழலும் இல்லை. இத்தனை பெரிய உலகில் இத்துணுண்டு குருவிகளுக்கு இடமில்லாமல் செய்து விட்டார்களே மனிதர்கள்.//

  உலகம் தமக்கானது எனும் மனிதனின் எண்ணமே காரணம். நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 36. பாச மலர் / Paasa Malar said...
  //குருவிகளின் சத்தங்களுடன் விடிகின்ற அந்தக் காலைப்பொழுதுகள்..சுகம் ராமலக்ஷ்மி...//

  அழகான காலைகள் அவை. நன்றி மலர்.

  ReplyDelete
 37. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //குருவி நெல்லுக்கதை சொல்லி நான் அடிவாங்குவேன் எங்க வீட்டுக்குட்டீஸ்கிட்ட..:)//

  குட்டீஸாக நாமும் அடிக்கப் பாய்ந்திருக்கிறோமே:). நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 38. கவிநயா said...
  //தலைப்பே என்னையும் இழுத்து வந்தது. பார்க்கப் பார்க்க அலுக்காத விஷயங்களில் சிட்டுக் குருவியும் ஒன்று. இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் எத்தனை அழகு. மனிதன் விழித்துக் கொள்ள இந்த மாதிரி தினங்கள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது.//

  நன்றி கவிநயா.

  ReplyDelete
 39. ஷைலஜா said...
  //சிந்திக்க வேண்டிய இடுகை.. மனம் பதறுகிறது இந்தமாதிரி பறவை இனமெல்லாம் அழிந்துகொண்டுவருவதில்...நல்ல முயற்சி யாரும் எடுத்தால் கண்டிப்பாய் நாமும் நம்மாலான பணி செய்து ஒத்துழைப்போம். //

  நன்றி ஷைலஜா.

  ReplyDelete
 40. கோமதி அரசு said...
  //எத்தனை இன்பங்களை அலைபேசி கோபுரங்கள் அழித்து இருக்கிறது!
  பதிவு மிக அருமையாக இருக்கிறது ராமலக்ஷ்மி.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 41. Kasu Sobhana said...
  //எங்கள் ப்ளாக் சுட்டி கொடுத்ததற்கு எங்கள் நன்றி.//

  வருகைக்கு நன்றி ஷோபனா.

  ReplyDelete
 42. Ramani said...
  //தலைப்பும் பதிவும் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 43. ஸ்ரீராம். said...
  //சிறுவயதில் நெல்லுக் கதை கேட்ட நினைவு இருக்கிறது! மீட்டெடுப்போமா சிட்டுக்குருவி இனத்தை?//

  செய்ய வேண்டும். நெல்லுக் கதை எல்லா ஊர்களிலும் வழக்கில் இருந்த ஒன்று போலிருக்கே:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 44. அமைதிச்சாரல் said...
  //சுத்திலும் மலை வாசஸ்தலங்கள் இருக்கறதுனாலயோ என்னவோ இங்கே குருவிகள் காணக்கிடைக்குது. ஆளு இல்லைன்னா எங்கூட்டு அடுக்களை ஜன்னல் சுவர்ல வந்து உக்காந்துக்கிட்டு வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்கற அழகே தனி.//

  கொடுத்து வைத்தவர்கள் உங்கள் பகுதி மக்கள்:)! வாழட்டும் குருவிகள் நலமுடன் அங்கே. நன்றி சாந்தி.

  ReplyDelete
 45. கணேஷ் said...
  //குருவிகள் இனம் அழிந்து வருவதில் எனக்கும் மிகமிக வருத்தம்தான். இத‌ை மனதில் பதியும் வண்ணம் எழுதியதோடு, மற்றவர்கள் எழுதியவற்றின் சுட்டிகளையும் கொடுத்திருந்தது வெகு சிறப்பு.//

  நன்றி கணேஷ்.

  ReplyDelete
 46. விச்சு said...
  //உங்கள் போட்டோ சூப்பர். நீங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளைப் படித்துவிட்டேன். சிட்டுக் குருவியைப் பாதுகாப்போம்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 47. guna thamizh said...
  /அருமை..
  தேவையான இடுகை..

  இதோ எனது இடுகை..

  குருவிகளும் வாழட்டுமே..//

  பகிர்வுக்கு மிக்க நன்றி. இணைத்து விட்டேன் தொகுப்பில்.

  ReplyDelete
 48. Kanchana Radhakrishnan said...
  //நல்ல பகிர்வு. Photo super.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 49. துளசி கோபால் said...
  //very nice and heart touching post.

  All the`sparrows are here in our`garden `//

  கேட்கவே சந்தோஷமாக உள்ளது. நன்றி மேடம்.

  ReplyDelete
 50. வெங்கட் நாகராஜ் said...
  //நல்ல பகிர்வு....

  காலையில் குருவிகள், விதவிதமான பறவைகளின் சத்தம் கேட்டு எழுந்த நாட்கள் நினைவில் மட்டும்...

  இப்போதோ அலாரம் அடித்து அலற வைக்கிறது.... :(//

  இங்கே கோடையில் மட்டும் மைனாக்கள் தேன் சிட்டுக்கள் பாடக் கேட்கலாம். நன்றி வெங்கட்.

  ReplyDelete
 51. Asiya Omar said...
  //மிக நல்ல பகிர்வு.தொகுத்து கொடுத்தமை நன்று.

  இங்கு அல் ஐனில் எங்கள் வீட்டு பின்புற பாலகனிக்கு சிட்டுக் குருவிகள் வருவதுண்டு.நான் படம் எடுப்பதற்குள் சிட்டாக பற்ந்து விடுகின்றன.பேரீச்சை தோப்பிற்குள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.எப்பவும் எங்கள் வீட்டில் இருந்து கேட்டாலே காலையும் மாலையும் கீச் கீச் என்ற குரலைக் கேட்கலாம்.//

  மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஆசியா.

  ReplyDelete
 52. @ இராஜராஜேஸ்வரி,
  கருத்துக்கும் தங்கள் சுட்டியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 53. @ வவ்வால்,

  உங்கள் பதிவு கண்டேன். பாதுகாப்பான பறவையினம் எனும் செய்தி ஆறுதல் தருகிறது. ஆனால் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த இடங்களில் வசித்தும் கடந்த இருபது வருடங்களாக ஒரு சிட்டுக்குருவியைக் கூட நான் பெங்களூரில் பார்த்ததில்லை என்பதும் உண்மை. அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது இன்றைய TOI செய்தி.

  நீங்கள் சொன்னாற்போல் நகர விரிவாக்கம், செல்ஃபோன் டவர்கள் போன்றன அவை வாழ்வதற்கு உகந்த சூழலைத் தரவில்லை என்பதும் காரணம். இயற்கையின் ஆசி இன்னமும் இருக்கிற இடங்களில் அவை எப்போதும் போல் இருப்பதை துளசி மேடம் போலவே அமைதிச்சாரல், ஆசியா மற்றும் முனைவர். குணசீலன் ஆகியோரும் தெரிவித்திருக்கிறார்கள். காண இயலாதவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

  அழிந்து வரும் பிற உயிரனங்களின் நிலைமையும் வருத்தம் தருபவைதான். இயற்கை ஆர்வலர்களின் செயல்பாடுகள் மக்களிடையே பொதுவாகவே இயற்கையின் மீதான அக்கறையை, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதையும் மறுக்க இயலாது.

  ReplyDelete
 54. வின்சென்ட். said...
  //கட்டுரையும் தொகுப்பும் அருமை. வாழ்த்துகள்.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 55. தருமி said...
  //சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - என்றொரு பாட்டு வரும். ஆனால் இன்று சிட்டு குருவிக்குத் தட்டுப்பாடு என்றாகி விட்ட வருத்தமான நிலை!//

  அப்படிதான் ஆகி விட்டது. கருத்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 56. கோவை2தில்லி said...
  //அருமையான பகிர்வு.... நானும் குருவி பாயசம் குடித்த கதையை சொல்வதுண்டு. இப்போ ரோஷ்ணி எனக்கு இந்தக் கதையை சொல்கிறாள்...//

  நன்றி ஆதி. நாம் சொன்ன கதையே நமக்குத் திரும்பி வருகையில் பொறுமையாகதான் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்:)!

  ReplyDelete
 57. //கூடு இங்கே குருவி எங்கே.. //

  பதிவு மற்றும் பின்னூட்டம் படித்தப் பிறகு, பலரது உள்ளத்தில் இருப்பது புரிகிறது.

  நல்ல பதிவு.

  ReplyDelete
 58. @ அமைதி அப்பா,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 59. //மானுடருக்கான கூடு மட்டும் இல்லை உலகம். புல் பூண்டு புழுக்கள் உட்பட கோடானு கோடி ஜீவராசிகளுக்காகப் படைக்கப்பட்ட ஒன்று. அத்தனையும் காக்கப்பட்டால்தான் பூமி பூமியாக இருக்க முடியும்.//

  மனதில் பதிய வேண்டிய வரிகள்.

  நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 60. ராமலக்ஷ்மி படம் அருமை.

  சிட்டுக்குருவிகள் சத்தம் அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்மை எதோ காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும். நீங்கள் கூறியது போல காந்த அலைகள் காரணமாக குருவிகள் அங்கே வராமல் இருந்து இருக்கலாம். எங்கள் வீட்டு அருகேயும் இது போல ஒரு கோபுரம் உள்ளது ஆனால் அங்கே உள்ள ஆலமரத்தில் மாலை வேளைகளில் குருவிகள் சத்தம் இருக்கும். காந்த அலைகள் இவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்.

  சில வீடுகளில் குருவி சத்தமே இல்லாததால் செயற்கையாக குருவி சத்தம் வருவது போல தங்கள் வீட்டில் கருவியை வைத்து இருக்கிறார்கள்... அது குருவி போல இடைவெளிவிட்டு சத்தம் எழுப்பும். என்ன தான் இருந்தாலும் உண்மையான குருவிகள் கத்துவதைப் போல ஒரு திருப்தி வராது. ஒன்றும் இல்லாததற்கு இதை பயன்படுத்தலாம் :-)

  எப்போது இது போல் ஒரு விசயத்துக்கு தினம் வருகிறதோ அதனுடைய முக்கியத்துவம் குறைந்து வருகிறது அதனால் அதை கூட்ட இப்படி ஒரு தினம் அமைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

  சிட்டுக்குருவிகள் சத்தம் சிலருக்கு நாரசம் சிலருக்கு இனிமை :-)

  ReplyDelete
 61. @ கிரி,

  செயற்கை சத்தத்தை எந்த அளவுக்கு ரசிக்க முடியுமெனத் தெரியவில்லை. ஆம், முக்கியத்துவத்தை அதிகரிக்கவே இத்தகு தினங்கள். ஓரளவேனும் விழிப்புணர்வு ஏற்படும்.

  குருவிகளின் சத்தம் பிடிக்காதவர்களும் இருப்பாங்களா:)?

  கருத்துக்கு நன்றி கிரி.

  ReplyDelete
 62. சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து....

  அவசியமான பகிர்வு.காப்போம்.

  ReplyDelete
 63. raji said...
  //நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.பகிர்விற்கு நன்றி//

  நன்றி ராஜி.

  ReplyDelete
 64. மாதேவி said...
  //அவசியமான பகிர்வு.காப்போம்.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 65. மீண்டும் படித்தேன் என் பதிவை , உங்கள் பதிவையும் மீண்டும் படித்தேன் நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin