Thursday, December 9, 2010

இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

எண்ணற்ற முறைகள் சென்றிருப்பினும் கடந்த முறையே படங்கள் எடுக்க வாய்த்தது. கோவில் அலுவலகத்தில் பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். நெல்லையப்பர், காந்திமதி மூலஸ்தானங்கள் தவிர்த்து மற்ற இடங்களை எடுக்கலாம் என அனுமதி வழங்குகிறார்கள். பிரமாண்டமான திருக்கோவிலை நிதானமாகச் சுற்றி வந்து படமெடுக்க ஒரு முழு நாள் கிடைத்தாலும் போதாது. சில மணி நேரத்தில் தங்கைகளின் குழந்தைகள் களைப்படைய ஆரம்பிக்க விரைந்து தரிசனத்தை முடித்தோம்.

இறை எண்ணமும் கலை வண்ணமும் ஒருங்கிணைந்து ஒளிரும் அற்புதக் காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு..


1.காந்திமதி அம்மன் திருக்கோபுரம்


2. நெல்லையப்பர் திருக்கோபுரம்
அதிக உயரமில்லாது அகன்ற வடிவில் அமைந்த கோபுரம்.

14 ஏக்கர் பரப்பளவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட இக்கோவிலில் காந்திமதிக்கு இடப்பக்கம் நெல்லையப்பர் சந்நிதி. இரண்டு கோயில்களையும் ஏழாம் நூற்றாண்டில் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் தனித்தனியாகக் கட்டியதாக அறியப் படுகிறது. பின்னர் வடமலையப்பர் என்பவர்,இரண்டையும் இணைக்கும் விஸ்தாரமான சங்கிலி மண்டபத்தைக் கட்டியதாகத் தெரிய வருகிறது. கி.பி 950 -ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இங்கே உள்ளது.தரிசன நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 வரை. மாலை 4 முதல் 9 வரை.

3.அண்ணாந்து பார்க்க வைக்கும் அழகான கூரை


இருபக்கமும் கடைகள் கொண்ட நுழைவாயிலின், உயரமான மேற்கூரை அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.4. கம்பீரத் தேவன்
செந்நாவைச் சுழற்றும் மாக்காளையாய் நெல்லையப்பர் திருக்கோவில் நந்தி தேவன் தெறிக்கும் திமிலுடன் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். கடல் சிப்பி, சுண்ணாம்பு இவற்றால் செய்யப்பட்டு உயரமான மேடையிலிருந்து மேலும் ஒரு பத்தடிக்கு உயர்ந்து நிற்கிறார்.


5. பொலிவாய்..
முத்துப் பல்வரிசை காட்டி, அகன்ற கண்களும் சின்னக் கருங்கொம்புகளுமாய் வண்ண அணிகலன்களுடன் மிகப் பொலிவாய் தோற்றமளிக்கும் நந்தி நம்மை நின்று சிலநாழி ரசிக்க வைக்கிறது.
6. தயாராய்..
கருவறையில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் எக்கணத்தில் வெளிவந்தாலும் சுமந்து செல்லத் தயாராக, சட்டென எழுந்து நிற்க எத்தனிக்கும் கோலத்தில் அமைந்துள்ளது இந்நந்தியின் தனிச் சிறப்பாகும்.

7.இசைத்தூண்
நெல்லையப்பர் கருவறை இருக்குமிடத்தினுள் நுழையும் முன் நம்மை வரவேற்கும் ஒலிநாத மணிமண்டபத்தின் இருபக்கமும் நெடிந்துயர்ந்து நிற்கும் இசைத் தூண்கள் மிகப் பிரசித்தம். அபூர்வமானவையும். ஒரே கல்லில் நுட்பமாக உருவாக்கப்பட்ட 48 சிறுதூண்கள் இரண்டு பக்கமும் எழும்பி நிற்கின்றன. நாணயத்தால் ஒருபக்க ஏழு தூண்களைத் தட்டுகையில் ச ரி க ம ப த நி ச’ ஒலியெழும்பி அதிசயக்க வைக்கிறது. மறுபக்கத் தூண்களைத் தட்டினால் மிருதங்க ஒலி வெளிப்பட்டு வியக்க வைக்கிறது.


மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னதிகள் அமைந்திருக்கும். கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் போற்றப்படுகிறது.

8.தாமிர சபை பிரகாரம்

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. அங்கு இட்டுச் செல்லும் மேல்காணும் பிரகாரத்திலே 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.


9. தாமிரசபை


நெல்லையப்பர் திருக்கோவில் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளில் தாமிர சபையாகத் திகழ்கிறது. நடராஜர் இங்கே ஆனந்தக்கூத்தனாக அருள்புரிகிறார்.

10. இரண்டாம் சுற்றுப் பிரகாரம்


11. அகன்ற பிரகாரத்தில் ஆனை காந்திமதி
மூன்றாவது சுற்றுப் பிரகாரம் மிகப் பெரியது. இன்னும் அதிக உயரமும் அகலமும் கொண்டது. மூன்று யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும் என்பார்கள். அது உண்மைதான் என்பது இப்படத்தைப் பார்த்தால் புரியும். பிரகாரத்தின் முடிவில் பக்தர்களைச் சந்திக்கக் காத்திருக்கிறாள் ஆனை காந்திமதி.

12.அழகிய திருமகளாய்..13. வழங்குகிறாள் ஆசிகளை..
அருகில் செல்ல பயந்த என்னைப் பார்த்துச் சுற்றிலுமிருந்த பொதுமக்களில் சிலர் தைரியமாகப் பக்கதில் செல்லுமாறும், இவளைப் போன்ற சாதுவான யானையை உலகத்தில வேறெங்கில பார்க்க முடியாது என்றும் உற்சாகமாகக் குறிப்பிட்டார்கள். நல்லவிதமான பரமாரிப்பைக் காரணம் காட்டுகிறார்கள். இயல்புக்கு மாறான சூழலில் ‘வன’விலங்குகள் வளர்க்கப்படுவது முற்றிலுமாகத் தடை செய்யப்படாத நம் நாட்டில் அவை பரிவுடனும் அன்புடனும் கவனிக்கப்பட வேண்டிய விழிப்புணர்வு அவசியமாகிறது. இங்கே கேட்ட செய்தி ஆறுதலாக இருந்தது.14.தெப்பக் குள மணிமண்டபம்


மிகப் பெரிய உள் தெப்பத்தில் சிவனே இங்கு நீர் வடிவம் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பிரம்மன் பொன் மலரோடு தோன்றிய தடாகம் என்கிறார்கள். வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.15.தூணில் யாழி


16. யாழி மண்டபம்

காந்திமதி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே கோபுர வாசலையொட்டி அமைந்த அழகு மண்டபம். இருபக்கமும் பூட்டப்பட்டிருந்தபடியால் கம்பிகள் வழியே காமிராவை நுழைத்து எடுத்தபடம்.17. பாவை விளக்கு

சுமார் மூன்றரை அடி உயரத்தில்..பிரகாரங்களின் பல தூண்களில் சிற்பங்களை நுண்ணிய அழகுடன் செதுக்கியிருக்கிறார்கள்.
18. ஆஞ்சநேயர்

பிரிய தெய்வத்தை பக்தர்கள் வெண்ணை சாத்தி வணங்கியிருப்பதைக் காணலாம்.

19. சிவபக்தர்
தலை, கழுத்து, கைகளில் ருத்ராட்ச மாலைகளுடன் அக்கால சிவனடியார்களின் தோற்றம் அப்படியே தத்ரூபமாக.


நெல்லையிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரம் சென்றிருக்கிறீர்களா? ஆளுயர உருவச் சிலைகளாய் நகக்கணுக்களும் துல்லியமாகச் செதுக்கப்பட்ட சிறப்பான சிற்பங்களுக்காக உலகப் பிரசித்திப் பெற்றவை. இப்போது கோவில் மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்சித் துறையின் பாதுக்காப்புக்குள் வந்துவிட்ட படியால், படமெடுக்க அனுமதியில்லை.

அங்கு காணப்பட்ட சிலைகளில் பல அதே அளவு நேர்த்தியுடன் நெல்லையப்பர் கோவிலின் பிரகாரத்திலும் இருப்பதைக் கவனிக்க முடிந்தது.
20.அர்ஜுனர்_________________ 21. யுதிஷ்ட்ரர்.. பீமர்

என்ன ஒரு வித்தியாசம் எனில் கிருஷ்ணாபுரத்து சிற்பங்கள் எண்ணெய் பூச்சுடன் கருங்கல்லில் செதுக்கப்பட்டு பளபளப்புடன் மின்ன, இவை வேறு விதமான கற்களால் செய்யப் பட்டதாலோ என்னவோ பளபளப்பு குறைவாகக் காணப்படுகிறது.

கல்லிலே கலை வண்ணம் கண்டார்
நந்தி தேவனுக்கு முன் அமைந்த நுழைவாயிலின் இருபக்கமும் நின்றிருந்த உயரமான தூண்களில், சிற்பங்கள் கருங்கல்லால் சுமார் ஆறேழு அடிகளுக்கு மேற்கூரையைத் தொட்டபடி வரவேற்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

22.காவல் தெய்வம் வீரபத்திரர்


***
23. நாகாஸ்திரத்துடன் கர்ணன்


***
24. கிராத மூர்த்தி

அர்ஜுனனோடு சண்டை போட்ட வேடுவக் கோலத்தில் ஈசன்.
***25. சன்னதி
உச்சிகாலத்தில் நடை சாத்தப்பட்டிருந்த சுப்பிரமணிய சுவாமி சன்னதி.

26. சுற்றிக் களைத்த குழந்தைகள் பசி தாகம் தணித்திடும் காட்சி:)!


களைக்காமல் சளைக்காமல் படங்களுடன் கூடவே பயணித்தவருக்கு நன்றிகள் பலப் பல :)!
*** *** ***[இந்தப் படங்களை ரசித்தவருக்கு எனது இந்தப் பதிவிலுள்ள படங்களும் பிடிக்கக் கூடும்:

வழிபாட்டுத் தலங்கள்

முன்னர் பார்த்திராதவருக்காகத் தந்திருக்கிறேன் சுட்டி:)!]

110 comments:

 1. thanks for sharing.. you should have caught the rathi manmadhan too

  ReplyDelete
 2. அக்கா, நம்ம ஊரு... நல்ல ஊரு..... படங்கள் எல்லாம் சூப்பரு!

  ReplyDelete
 3. படங்கள் எப்போதும் போல துல்லியம். நந்திதேவர் செயற்கைப் பூச்சுடன் பளபளப்பாக இருப்பது போலத் தோற்றம். எனெக்கென்னவோ பழைய ஆலயங்களில் புதிய நிறம் அடித்தால் கண்களை அடிப்பது போலத் தோன்றும். இயற்கையாக இருக்க வேண்டும் என்று தோன்றும். தெப்பக் குலம், கோபுரம் படங்கள் அழகு, இசைத் தூண்களும். பிரகாரப் படங்கள் நேர்த்தி, மிக அழகு. அழகிய யானை காந்திமதி. விவரங்களும் அருமை.

  ReplyDelete
 4. நல்ல புகைப்படங்கள்.

  ReplyDelete
 5. அருமையான புகைப்படங்கள். :)

  ReplyDelete
 6. படங்களெல்லாம் இன்னிக்கு முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கு..

  குறைகுடம் கூத்தாடியது இங்கேயிருக்கு :-))
  http://picasaweb.google.com/amaithicchaaral/RDkGnK#

  ReplyDelete
 7. ஆஹா கோயிலை சுற்றிக் காண்பித்தது போல் இருந்தது .. பெங்களூரு வரும் போது படம் எடுக்க கத்துக் கொள்ளணும்பா உங்ககிட்ட..

  ReplyDelete
 8. 1985ல் இந்தக்கோவிலுக்குச் சென்ற நினைவு இருக்கிறது. இருப்பினும் இந்த ஒலி நாத தூணை பார்த்ததாக‌
  நினைவுக்க்கொண்டுவர இயலவில்லை. இது போன்ற ஒரு ஒலித்தூணை நான் திருவனந்தபுரம் அனந்த‌
  சயன பெருமாள் கோவிலிலும் பார்த்து வியந்திருக்கிறேன்.

  புகைப்படங்கள் மிக அருமை. குறிப்பாக, அந்த தாக பசி தீர்க்கும் காட்சி. மனதை விட்டு நீங்காது.

  உங்கள் அனுமதியுடன் அந்த ஒலித்தூணை நான் எனது பதிவில் பொருத்திக்கொள்கிறேன். அப்பதிவின் கருத்தோடு
  இது பொருந்தியிருப்பதால். நீங்கள் எனது அந்த பதிவுக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  http://movieraghas.blogspot.com

  மறந்துவிட்டேன்.
  அனுமார் படமும் அருமை.
  ஆபத்பாந்தவர், அனாத ரக்ஷகர்,
  ராம உபாசகர், ராமனுக்கு லக்ஷ்மியைக் கண்டு பிடித்துக் கொடுத்தவர்.

  சுப்பு ரத்தினம்.
  http://movieraghas.blogspot.com
  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete
 9. கேமரா எழுதிய ,அழகான அருமையான கட்டுரை

  ReplyDelete
 10. அங்கு இருந்த வரை தினம் பார்த்த கோயில், கோயில் பக்கத்தில் தான் எங்க வீடு இருந்தது. அழகான ஆனால், அதிகம் கூட்டம் இல்லாத ஒரு கோயில். மதுரை மாதிரி அதிகம் டூரிஸ்ட் வருவதில்லை என்பது எனக்கு வருத்தம்.

  ReplyDelete
 11. கொள்ளை அழகு..கொள்ளைகொள்ளுதே..:)
  அதும் அந்த ப்ரகாரம் அருமை..

  ReplyDelete
 12. படங்கள் அருமை.. வாட்டர் மார்க் செய்யவில்லையா ?? அது செய்யாவிடில் படங்கள் களவாடப்படும் ஆபத்து அதிகம்

  ReplyDelete
 13. ராமுமேடம் அருமையான கிளிக்..

  ReplyDelete
 14. புகைப்படங்கள் கொள்ளை அழகு மேடம்..

  ReplyDelete
 15. ஆஹா.. படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.

  ReplyDelete
 16. ரொம்பவே அழகான படங்கள்... கடைசி தாக நிவர்த்தியும்.

  ReplyDelete
 17. படங்களின் அழகில் மயங்கினேன்.

  ReplyDelete
 18. வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள். அப்படி தான் இருக்கணும்

  கடைசியில் உள்ளது உங்கள் குழந்தைகளா?

  ReplyDelete
 19. ராமலக்ஷ்மி,

  என்ன சொல்றது போங்க! அற்புதமா? அருமையா? கலக்கலா? அல்லது எல்லாமா?
  விறுவிறுவென்று கோயிலுக்குள் சென்று சந்நதி சந்நதியாய் சேவித்து, சாஸ்திரத்துக்கு உக்காந்து எந்திரிச்சு வரவே எனக்கு நேரமிருக்கும். இப்படி படமெடுக்கவே போனது ரொம்ப நல்லது. நிறுத்தி நிதானமாய் படமெடுத்துள்ளீர்கள். நந்தியின் நாக்கு சுழற்சியும், அதன் கழுத்தில் வரிவரியாய் மாலைகளும் அழகு.
  சிவனடியார், ஆஞ்ச்நேயர், சங்கீத தூண்கள், எல்லாமே அழகோ அழகு.

  களைத்திருக்கும் கண்மணிகளில் மூன்றைக் காணோமே?

  ReplyDelete
 20. //you should have caught the rathi manmadhan too//
  டாக்டர் ருத்ரன் கேட்ட ரதி மன்மதன் சிலைகள், கிருஷ்ணாபுரத்தில் இருக்கின்றன. கைகளில் கிளியோடு ரதியின் அழகு மேலும் கூடும்.

  ReplyDelete
 21. ராமலக்ஷ்மி,
  // வாட்டர் மார்க் செய்யவில்லையா ?? அது செய்யாவிடில் படங்கள் களவாடப்படும் ஆபத்து அதிகம்//

  எல்கே சொன்னது மிகச் சரி. முதலில் அதைச்செய்யுங்கள். காரணம் படங்கள் அவ்வளவு ப்ரொபஷனலாக இருக்கிறது. குயிக்...குயிக்!!

  ReplyDelete
 22. பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 23. புகைப் படங்கள் எல்லாம் அழகு.

  உங்கள் கை வண்ணத்தில் நெல்லையப்பர் கோவில் சிற்பங்கள் கதை பேசுகின்றன.

  குழந்தைகள் இருவரும் அழகு.

  உங்கள் புகைபடத் திறமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 24. போகிறபோக்கில் தென்படும் காட்சிகளையே காமிராக் கண்ணால் அற்புதமாகக் காட்டுவீர்கள். கலைப் படைப்புகளைக் கேட்க வேண்டுமா? படங்கள் அருமை.

  கோவில் உள்புறக் கட்டிடக் கலைகள் வியக்க வைக்கின்றன. திருநெல்வேலிக்காரி என்றாலும் உள்ளே போய்ப் பார்த்ததில்லை. இசைத்தூண் வியக்க வைக்கிறது. ஒருமுறை பதிவர்கள் யாரோடாவது போய் தட்டிப் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 25. அற்புதமான படங்கள். தெய்வீகம் குறையாமல் கலையழகோடு மிளிர்கின்றன. அருமையான பகிர்வு ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 26. அக்கா, திரும்பத்திருப்பப் பார்க்கவைக்கிற படங்கள். ஒவ்வொண்ணும் அழகு.

  கிருஷ்ணாபுரத்துக்கு இதுவரை போனதில்லை. போகவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்.

  ReplyDelete
 27. பிரமிப்பாய் இருக்கிறது. நன்றி.

  ReplyDelete
 28. நல்ல தொகுப்பு... நிறைய விடயங்கள் அறிந்துகொண்டேன்..

  அதுவும் புகைப்படங்கள் அப்படியே கண்ணில் இருக்கு...

  தொடரட்டும் தங்களின் இந்த அறிய பணி...

  ReplyDelete
 29. அருமை ராமலஷ்மி......பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 30. ஒவ்வொரு படமும் ஓராயிரம் சொற்களுக்குச் சமம் என்பதைச் சொல்லாமல் உணர்த்திவிட்டீர்கள்.

  ReplyDelete
 31. அழகான தரிசனம் அக்கா..

  ReplyDelete
 32. படங்கள் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை...அத்தனை அழகு... கட்டுரையும் அழகு...

  ReplyDelete
 33. அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - அத்தனையும் அருமை - படங்கள் எடுப்பதில் திறமை பளிச்சிடுகிறது. கண்னில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது. பொறுமை - திறமை - புகைப்படக்கருவி - இத்தனையும் ஒருங்கே மிளிர்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 34. உண்மையிலே உங்க ஊர் கோயிலுக்குப் போய் வந்திருந்தாலும், உங்க படங்களில் பார்க்கிற அளவுக்கு இந்த சிலைகளின் அழகைப் பார்த்து இருப்பேனானு சந்தேகம்தான்.

  நல்லாயிருக்குங்க, ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 35. நேர்த்தியான படங்கள்..

  அழகான குறிப்புரையோடு மிக அழகாய்

  ReplyDelete
 36. படங்களோடு அதன் பின்னனியைப் பற்றியும் சொன்ன விதம் அழகு.

  ReplyDelete
 37. Dr.Rudhran said...
  //thanks for sharing.. you should have caught the rathi manmadhan too//

  நன்றி டாக்டர். இங்கே அந்தச் சிலைகள் இல்லையென்றே எண்ணுகிறேன். கிருஷ்ணாபுரத்தில் உள்ளன. ஆனால் படம் எடுக்க அனுமதி இல்லை:)!

  ReplyDelete
 38. Chitra said...
  //அக்கா, நம்ம ஊரு... நல்ல ஊரு..... படங்கள் எல்லாம் சூப்பரு!//

  ஆமாம் சித்ரா:), இந்தப் பதிவு நம்ம ஊருக்கு மரியாதை! சாமிக்குக் காணிக்கை! பாராட்டுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 39. ஸ்ரீராம். said...
  //படங்கள் எப்போதும் போல துல்லியம். நந்திதேவர் செயற்கைப் பூச்சுடன் பளபளப்பாக இருப்பது போலத் தோற்றம். எனெக்கென்னவோ பழைய ஆலயங்களில் புதிய நிறம் அடித்தால் கண்களை அடிப்பது போலத் தோன்றும். இயற்கையாக இருக்க வேண்டும் என்று தோன்றும். தெப்பக் குலம், கோபுரம் படங்கள் அழகு, இசைத் தூண்களும். பிரகாரப் படங்கள் நேர்த்தி, மிக அழகு. அழகிய யானை காந்திமதி. விவரங்களும் அருமை.//

  அத்தனையையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்:)! நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பராமரிப்புக்காகவும் பூச்சுகள் அவசியப்படுகின்றன போல் தெரிகிறது.

  ReplyDelete
 40. அன்பரசன் said...
  //நல்ல புகைப்படங்கள்.//

  நன்றிகள் அன்பரசன்.

  ReplyDelete
 41. Balaji saravana said...
  //அருமையான புகைப்படங்கள். :)//

  நன்றி பாலாஜி சரவணா:)!

  ReplyDelete
 42. அமைதிச்சாரல் said...
  //படங்களெல்லாம் இன்னிக்கு முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கு..//

  நன்றிகள் சாரல்:)!

  //குறைகுடம் கூத்தாடியது இங்கேயிருக்கு :-))
  http://picasaweb.google.com/amaithicchaaral/RDkGnK#//

  நல்லாச் சொன்னீங்க போங்க. PiT முதல் சுற்றில் மிளிர்ந்த உங்க காந்திமதி அம்மன் கோபுரப் படம் கண்களுக்குள். இந்த ஆல்பத்திலே அது விட்டுப் போயிருக்கிறது. அவசியம் சேர்ந்திடுங்கள்:)!

  ReplyDelete
 43. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //ஆஹா கோயிலை சுற்றிக் காண்பித்தது போல் இருந்தது .. பெங்களூரு வரும் போது படம் எடுக்க கத்துக் கொள்ளணும்பா உங்ககிட்ட..//

  நல்லது தேனம்மை. நிச்சயமாய்:)!

  ReplyDelete
 44. sury said...
  //1985ல் இந்தக்கோவிலுக்குச் சென்ற நினைவு இருக்கிறது. இருப்பினும் இந்த ஒலி நாத தூணை பார்த்ததாக‌
  நினைவுக்க்கொண்டுவர இயலவில்லை. //
  வருடங்கள் பல கடந்து விட்டனவே. சன்னதிக்குள் நுழைய நாம் ஏறுகின்ற மண்டபத்தின் இரண்டு பக்கமும் உள்ளன தூண்கள்.

  //புகைப்படங்கள் மிக அருமை. குறிப்பாக, அந்த தாக பசி தீர்க்கும் காட்சி. மனதை விட்டு நீங்காது.//

  பொறுமையாக வந்தாலும் சுழன்று விட்டார்கள் 3 மணி நேரத்தில்! பாருங்க அக்கம் பக்கம் பார்க்காமல் அக்கடா என தாகம் தணித்து பசி ஆறுவதை!

  //உங்கள் அனுமதியுடன் அந்த ஒலித்தூணை நான் எனது பதிவில் பொருத்திக்கொள்கிறேன். அப்பதிவின் கருத்தோடு
  இது பொருந்தியிருப்பதால். நீங்கள் எனது அந்த பதிவுக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
  http://movieraghas.blogspot.com//

  வந்திருக்கிறேன். தாராளமாக உபயோகித்திடுங்கள். அதில் எனக்கு மகிழ்ச்சியே:)!

  //ராமனுக்கு லக்ஷ்மியைக் கண்டு பிடித்துக் கொடுத்தவர்.//

  ரசித்தேன்:)! வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சூரி சார்.

  ReplyDelete
 45. புகைப்படங்கள் அனைத்தும் அருமை...

  நெல்லை காந்திமதியம்மன் கோவிலுக்கு சென்று வந்த திருப்தி...

  ReplyDelete
 46. goma said...
  //கேமரா எழுதிய ,அழகான அருமையான கட்டுரை//

  நன்றிகள் கோமா.

  ReplyDelete
 47. அமுதா கிருஷ்ணா said...
  //அங்கு இருந்த வரை தினம் பார்த்த கோயில், கோயில் பக்கத்தில் தான் எங்க வீடு இருந்தது. அழகான ஆனால், அதிகம் கூட்டம் இல்லாத ஒரு கோயில். மதுரை மாதிரி அதிகம் டூரிஸ்ட் வருவதில்லை என்பது எனக்கு வருத்தம்.//

  உண்மைதாங்க. வியக்க வைக்கும் பெருமைகள் பலவற்றைக் கொண்ட கோவில். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா.

  ReplyDelete
 48. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //கொள்ளை அழகு..கொள்ளைகொள்ளுதே..:)
  அதும் அந்த ப்ரகாரம் அருமை..//

  ரொம்ப நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 49. ராமலக்ஷ்மி said...
  LK said...
  //படங்கள் அருமை.. வாட்டர் மார்க் செய்யவில்லையா ?? அது செய்யாவிடில் படங்கள் களவாடப்படும் ஆபத்து அதிகம்//

  நன்றி எல் கே. ஒவ்வொன்றாக என் ஃப்ளிக்கர் தளத்தில் முன்னரே வலையேற்றம் செய்தவையே. இப்போது பெயரை மட்டுமே சேர்த்துள்ளேன். நீங்கள் சொல்வது நிறையவே நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்:(! விரைவில் செய்கிறேன்.

  ReplyDelete
 50. அன்புடன் மலிக்கா said...
  //ராமுமேடம் அருமையான கிளிக்..//

  மகிழ்ச்சியும் நன்றியும் மலிக்கா:)!

  ReplyDelete
 51. வித்யா said...
  //புகைப்படங்கள் கொள்ளை அழகு மேடம்..//

  வாங்க வித்யா. என் புகைப்படப் பதிவுகளை வலைச்சரத்தில் பாராட்டியவர் நீங்கள்:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 52. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //ஆஹா.. படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு.//

  மிக்க நன்றி புவனேஸ்வரி:)! வீரபத்திரரையும் கர்ணனையும் அடையாளம் கண்டிட தனி மடலில் உதவியமைக்கும் நன்றிகள். கிராத மூர்த்தியை அறியத் தந்தவர் கீதா மேடம்:)!

  ReplyDelete
 53. க.பாலாசி said...
  //ரொம்பவே அழகான படங்கள்... கடைசி தாக நிவர்த்தியும்.//

  மிக்க நன்றி பாலாசி:)!

  ReplyDelete
 54. தமிழ் உதயம் said...
  //படங்களின் அழகில் மயங்கினேன்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் தமிழ் உதயம்.

  ReplyDelete
 55. மோகன் குமார் said...
  //வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள். அப்படி தான் இருக்கணும்

  கடைசியில் உள்ளது உங்கள் குழந்தைகளா?//

  நன்றி மோகன் குமார். தங்கைகளின் குழந்தைகள். என் மகன் வளர்ந்தாச்சு. பொறியியல் இரண்டாம் ஆண்டில்:)!

  ReplyDelete
 56. நானானி said...
  //ராமலக்ஷ்மி,

  என்ன சொல்றது போங்க! அற்புதமா? அருமையா? கலக்கலா? அல்லது எல்லாமா?
  விறுவிறுவென்று கோயிலுக்குள் சென்று சந்நதி சந்நதியாய் சேவித்து, சாஸ்திரத்துக்கு உக்காந்து எந்திரிச்சு வரவே எனக்கு நேரமிருக்கும். இப்படி படமெடுக்கவே போனது ரொம்ப நல்லது. நிறுத்தி நிதானமாய் படமெடுத்துள்ளீர்கள். நந்தியின் நாக்கு சுழற்சியும், அதன் கழுத்தில் வரிவரியாய் மாலைகளும் அழகு.
  சிவனடியார், ஆஞ்ச்நேயர், சங்கீத தூண்கள், எல்லாமே அழகோ அழகு.//

  ரொம்ப நன்றி நானானி. படமெடுக்கப் போகாமல், போகும் போது படமெடுத்திருக்கிறேன்:)! வேகவேகமாய் கடந்து போகையில் ‘கிளிக்’கியவையே. சிவனடியார் படத்தினை ஃபோட்டோஷாப்பில் மேம்படுத்தினேன் நிறுத்தி நிதானமாய் பொறுமையாய். மொத்தத்தில் மேம்படுத்தும் வேலையே நிறைய நேரம் பிடித்தது.

  //களைத்திருக்கும் கண்மணிகளில் மூன்றைக் காணோமே?//

  கடைக்குட்டி கண்மணி அன்றைய தினம் ஊரில் இருக்கவில்லை. முதலிரண்டு கண்மணிகளுக்குக் களைப்பு இல்லை:))!

  ReplyDelete
 57. நானானி said...
  ***//you should have caught the rathi manmadhan too//
  டாக்டர் ருத்ரன் கேட்ட ரதி மன்மதன் சிலைகள், கிருஷ்ணாபுரத்தில் இருக்கின்றன. கைகளில் கிளியோடு ரதியின் அழகு மேலும் கூடும்.//***

  ஆமாம், கிருஷ்ணாபுரத்துச் சிலைகள் யாவுமே சொக்க வைக்கும் அழகுடன். படம் எடுக்க அனுமதி கிடைக்காததில் வருத்தமே. அப்புறம் எப்படி ஊர் பெருமையை உலகுக்குக் காட்டுவதாம்:)?

  ReplyDelete
 58. நானானி said...
  ***ராமலக்ஷ்மி,
  // வாட்டர் மார்க் செய்யவில்லையா ?? அது செய்யாவிடில் படங்கள் களவாடப்படும் ஆபத்து அதிகம்//

  எல்கே சொன்னது மிகச் சரி. முதலில் அதைச்செய்யுங்கள். காரணம் படங்கள் அவ்வளவு ப்ரொபஷனலாக இருக்கிறது. குயிக்...குயிக்!!***

  நன்றி நானானி. இப்போது பெயர் மட்டுமே சேர்த்துள்ளேன். வாட்டர் மார்க் பற்றிய சிந்தனை இதுவரைக்கும் இல்லை. இனிமேல் யோசிக்கிறேன்.

  ReplyDelete
 59. ராம்ஜி_யாஹூ said...
  //பகிர்ந்தமைக்கு நன்றிகள்//

  நன்றிகள் ராம்ஜி.

  ReplyDelete
 60. அதிஷ்ட ரத்தினங்கள் said...
  //படங்கள் அருமை...!//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 61. கோமதி அரசு said...
  //புகைப் படங்கள் எல்லாம் அழகு.

  உங்கள் கை வண்ணத்தில் நெல்லையப்பர் கோவில் சிற்பங்கள் கதை பேசுகின்றன.

  குழந்தைகள் இருவரும் அழகு.

  உங்கள் புகைபடத் திறமைக்கு பாராட்டுக்கள்!//

  அன்பான கருத்துக்கு நன்றிகள் கோமதிம்மா.

  ReplyDelete
 62. ஹுஸைனம்மா said...
  //போகிறபோக்கில் தென்படும் காட்சிகளையே காமிராக் கண்ணால் அற்புதமாகக் காட்டுவீர்கள். கலைப் படைப்புகளைக் கேட்க வேண்டுமா? படங்கள் அருமை.//

  அதுவும் நம்ம ஊர் கோவில் கோபுரங்கள், சிற்பங்கள் படங்களில் இன்னும் பிரமிக்க வைக்கின்றன. என் மொத்தப் பதிவுகளிலும் அதிகம் பேர் பார்வையிட்ட பெருமையைப் பெற்று முன்னணியில் இருப்பது ‘வழிபாட்டுத் தலங்கள்’ எனும் பிட் போட்டிப் பதிவே:)!

  //கோவில் உள்புறக் கட்டிடக் கலைகள் வியக்க வைக்கின்றன. திருநெல்வேலிக்காரி என்றாலும் உள்ளே போய்ப் பார்த்ததில்லை. இசைத்தூண் வியக்க வைக்கிறது. ஒருமுறை பதிவர்கள் யாரோடாவது போய் தட்டிப் பார்க்க வேண்டும்.//

  அவசியம் பாருங்க. ஊருக்கு வரும் போது சொல்லுங்க. ஒருவேளை நானும் அந்த சமயத்தில் அங்கிருந்தால் அழைத்துப் போகிறேன். நன்றி ஹுஸைனம்மா:)!

  ReplyDelete
 63. அம்பிகா said...
  //அற்புதமான படங்கள். தெய்வீகம் குறையாமல் கலையழகோடு மிளிர்கின்றன. அருமையான பகிர்வு ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி அம்பிகா. நீங்கள் போயிருக்கிறீர்கள்தானே?

  ReplyDelete
 64. சுந்தரா said...
  //அக்கா, திரும்பத்திருப்பப் பார்க்கவைக்கிற படங்கள். ஒவ்வொண்ணும் அழகு.

  கிருஷ்ணாபுரத்துக்கு இதுவரை போனதில்லை. போகவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்.//

  நான் பலமுறை சென்றிருக்கிறேன் சுந்தரா. கண்டிப்பா அடுத்த முறை போகணும் நீங்க:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 65. நர்சிம் said...
  //பிரமிப்பாய் இருக்கிறது. நன்றி.//

  நன்றிகள் நர்சிம்:)!

  ReplyDelete
 66. அரசன் said...
  //நல்ல தொகுப்பு... நிறைய விடயங்கள் அறிந்துகொண்டேன்..

  அதுவும் புகைப்படங்கள் அப்படியே கண்ணில் இருக்கு...

  தொடரட்டும் தங்களின் இந்த அறிய பணி...//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரசன்.

  ReplyDelete
 67. அன்புடன் அருணா said...
  //அழகான கோணங்கள்!//

  பூங்கொத்தாய் உங்கள் கருத்து:)! நன்றி அருணா.

  ReplyDelete
 68. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //அருமை ராமலஷ்மி......பகிர்விற்கு நன்றி.//

  நன்றிகள் நித்திலம்:)!

  ReplyDelete
 69. பாலராஜன்கீதா said...
  //ஒவ்வொரு படமும் ஓராயிரம் சொற்களுக்குச் சமம் என்பதைச் சொல்லாமல் உணர்த்திவிட்டீர்கள்.//

  உங்கள் கருத்துக்கு என் வணக்கங்கள்.

  ReplyDelete
 70. சுசி said...
  //அழகான தரிசனம் அக்கா..//

  நன்றிகள் சுசி:)!

  ReplyDelete
 71. அப்பாவி தங்கமணி said...
  //படங்கள் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை...அத்தனை அழகு... கட்டுரையும் அழகு...//

  மகிழ்ச்சியும் நன்றியும் புவனா.

  ReplyDelete
 72. cheena (சீனா) said...
  //அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - அத்தனையும் அருமை - படங்கள் எடுப்பதில் திறமை பளிச்சிடுகிறது. கண்னில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது. பொறுமை - திறமை - புகைப்படக்கருவி - இத்தனையும் ஒருங்கே மிளிர்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  வருகைக்கும் ரசித்து அளித்த கருத்துக்கும் என் நன்றிகள் சீனா சார்!

  ReplyDelete
 73. வருண் said...
  //உண்மையிலே உங்க ஊர் கோயிலுக்குப் போய் வந்திருந்தாலும், உங்க படங்களில் பார்க்கிற அளவுக்கு இந்த சிலைகளின் அழகைப் பார்த்து இருப்பேனானு சந்தேகம்தான்.

  நல்லாயிருக்குங்க, ராமலக்ஷ்மி!//

  நன்றிகள் வருண்:)!

  ReplyDelete
 74. ஈரோடு கதிர் said...
  //நேர்த்தியான படங்கள்..

  அழகான குறிப்புரையோடு மிக அழகாய்//

  நன்றிகள் கதிர்:)!

  ReplyDelete
 75. "உழவன்" "Uzhavan" said...
  //படங்களோடு அதன் பின்னணியைப் பற்றியும் சொன்ன விதம் அழகு.//

  மிக்க நன்றி உழவன். நீங்கள் இங்கு சென்றிருப்பீர்கள் என நம்புகிறேன்:)!

  ReplyDelete
 76. Ammu said...
  //புகைப்படங்கள் அனைத்தும் அருமை...

  நெல்லை காந்திமதியம்மன் கோவிலுக்கு சென்று வந்த திருப்தி...//

  அதுதான் வேண்டும் எனக்கும்:)! நன்றி அம்மு:)!

  ReplyDelete
 77. //மிக்க நன்றி உழவன். நீங்கள் இங்கு சென்றிருப்பீர்கள் என நம்புகிறேன்:)!//

  உங்க நம்பிக்கை சரியே. ஆனால் கோவிலுக்குள் போனதை விட இருட்டுக்கடை வாசலில் நின்றவைதான் அதிகம் :-)

  ReplyDelete
 78. அருமையான புகைப்படங்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்தாகி விட்டது.

  ReplyDelete
 79. படங்கள் அனைத்தும் உங்களின் கைவண்ணத்தில் அருமை...

  சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  ReplyDelete
 80. என்ன கமென்ட் எழுத என்று ரெண்டு நாளா யோசிச்சு எழுதுகிறேன். நானும் நெல்லையிலிருப்பவன். திருசெந்தூருக்கு சென்ற அளவு கூட நெல்லையப்பரை பார்க்கவில்லை. வெளியூர் விருந்தினர்களுடன் போனேன். ஏழு வருஷம் மதுரையில் இருந்தப்போ மாதம் மூன்று முறையாவது மீனாக்ஷியம்மன் கோவில் போவேன். கும்பாபிஷேக மலருக்காக மீனாக்ஷி கோவிலை படம் எடுக்க என் பெரிய அண்ணனுடன் போன நினைவுகள். அவர் எடுத்த படங்கள் போல -- அதே காம்போசிஷன், எக்ஸ்போஷர், ஆங்கிள், லைட்டிங் --- அழகு.
  வேகவேகமாய் கடந்து போகையில் ‘கிளிக்’கியவையே இத்தனை அழகென்றால்....?
  களைக்காமல் சளைக்காமல் உங்கள் படங்களுடன் கோவிலை வலம் வந்தேன்.

  சகாதேவன்

  ReplyDelete
 81. நான் சிறிய வயதில் திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், பழனி, மதுரை
  இவ்விடங்களில் அடிக்கடி புகழ் பெற்ற , பழமை வாய்ந்த கோவிலுக்குச் சென்று
  வந்ததால் இக்கோயில்களின் மகிமை நெஞ்சில் ஆழப் பதிந்து உள்ளது. பிறகு காலப்
  போக்கில் அவசர உலகில், கோவிலுக்குச் சென்று வந்த பொழுது கூட்டம்
  காரணத்தாலோ என்னவோ கோவிலின் ஒவ்வொரு அம்சங்களையும் அவ்வளவாக
  ரசிக்கவில்லை. இன்று உங்களுடைய வலைப்பதிவின் அற்புதமான படங்களாலும்
  எளிமையான வர்ணிப்பாலும் கோவிலின் மகிமையை மீண்டும் உணர்கிறேன்.
  கூட்டம் இல்லாதவாறு தனிமையாக மனதையே தற்காலிக கால்களாக மாற்றிக் கொண்டு
  கோவிலை சுற்றி வந்த அனுபவத்தை எனக்கு அள்ளித் தந்த பெருமை உங்கள் வலைப்பதிவைச் சாரும்.
  அதற்காக என் நன்றியை தெரிவிக்கிறேன்.

  ReplyDelete
 82. வணக்கம் ராமலக்ஷ்மி. நீண்ட இடைவெளிக்கு பின் வருகிறேன். உங்களின் அறிய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியல. அருமையான இறைப்பணி செய்றீங்க. ஆசிகள். எப்ப நீங்க இந்த ஊருக்கெல்லாம் போறீங்க. ஆச்சரியமா இருக்கு. தத்ரூபமா எழுதுறீங்க. வாழ்த்துக்கள். கர்ணன் நாகாஸ்த்திரம், வேடுவ சிவன் அருமைங்க.

  ReplyDelete
 83. ஆஹா கோயிலை சுற்றிக் காண்பித்தது போல் இருந்தது.

  படங்கள் எப்போதும் போல துல்லியம்.

  ReplyDelete
 84. "உழவன்" "Uzhavan" said...

  //உங்க நம்பிக்கை சரியே. ஆனால் கோவிலுக்குள் போனதை விட இருட்டுக்கடை வாசலில் நின்றவைதான் அதிகம் :-)//

  சரிதான்:)))!

  ReplyDelete
 85. மாதேவி said...
  //அருமையான புகைப்படங்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்தாகி விட்டது.//

  மகிழ்ச்சியும் நன்றியும் மாதேவி:)!

  ReplyDelete
 86. மாணவன் said...
  //படங்கள் அனைத்தும் உங்களின் கைவண்ணத்தில் அருமை...

  சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி//

  முதல் வருகையென எண்ணுகிறேன். மிக்க நன்றி மாணவன்!

  ReplyDelete
 87. சகாதேவன் said...
  //என்ன கமென்ட் எழுத என்று ரெண்டு நாளா யோசிச்சு எழுதுகிறேன். நானும் நெல்லையிலிருப்பவன். திருசெந்தூருக்கு சென்ற அளவு கூட நெல்லையப்பரை பார்க்கவில்லை. வெளியூர் விருந்தினர்களுடன் போனேன். ஏழு வருஷம் மதுரையில் இருந்தப்போ மாதம் மூன்று முறையாவது மீனாக்ஷியம்மன் கோவில் போவேன். கும்பாபிஷேக மலருக்காக மீனாக்ஷி கோவிலை படம் எடுக்க என் பெரிய அண்ணனுடன் போன நினைவுகள். அவர் எடுத்த படங்கள் போல -- அதே காம்போசிஷன், எக்ஸ்போஷர், ஆங்கிள், லைட்டிங் --- அழகு.
  வேகவேகமாய் கடந்து போகையில் ‘கிளிக்’கியவையே இத்தனை அழகென்றால்....?
  களைக்காமல் சளைக்காமல் உங்கள் படங்களுடன் கோவிலை வலம் வந்தேன்.//
  -----------------------------------


  என்ன பதில் சொல்ல என நானும் யோசித்து சொல்லுகிறேன்.

  //அவர் எடுத்த படங்கள் போல -- அதே காம்போசிஷன், எக்ஸ்போஷர், ஆங்கிள், லைட்டிங் --- அழகு.//

  கேட்க சந்தோஷமாக உள்ளது. எனக்கும் சிறிது திறமை உள்ளது என்றால் அது நிச்சயம் குடும்ப வழி வந்ததே:)! குடும்பத்தில் பலருக்கும் உள்ளது கேமிராக் கலையில் பெரிய ஈடுபாடு.

  //மாதம் மூன்று முறையாவது மீனாக்ஷியம்மன் கோவில் போவேன். //

  மீனாக்ஷியம்மன், திருச்செந்தூர் படங்கள் எனது இந்தப் பதிவில்.:)! நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

  //திருசெந்தூருக்கு சென்ற அளவு கூட நெல்லையப்பரை பார்க்கவில்லை.//

  ஒவ்வொரு முறை நெல்லை வரும் போதும் முடிந்த வரை நெல்லையப்பரையும் காந்திமதி அம்மனையும் பார்க்காமல் திரும்புவதில்லை. மாதம் ஒருமுறையாவது சென்று வாருங்கள்:)!

  //களைக்காமல் சளைக்காமல் உங்கள் படங்களுடன் கோவிலை வலம் வந்தேன்.//

  வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகள் சகாதேவன்:)!

  ReplyDelete
 88. சே.குமார் said...
  //ஆஹா கோயிலை சுற்றிக் காண்பித்தது போல் இருந்தது.

  படங்கள் எப்போதும் போல துல்லியம்.//

  வாங்க குமார். மிக்க நன்றி.

  ReplyDelete
 89. கோவில் படங்களை தரிசித்த, ரசித்த அனைவருக்கும் இந்தப் பதிவும் [ வழிபாட்டுத் தலங்கள் ] பிடிக்கக் கூடும்!

  முன்னர் பார்த்திராத நண்பர்களுக்காக
  இப்பதிவின் இறுதியிலும் சுட்டியை இணைத்து விட்டேன் இப்போது:)!

  நன்றி.

  ReplyDelete
 90. ரொம்பச் சீக்கிரமாச் சுட்டி கொடுத்திருக்கீங்க! :)))) நாம வேறே உலகத்திலே மும்முரமா இருக்கிறதாலே கொஞ்ச நாட்களா கவனிக்க முடியலை. சொன்னால் தான் உண்டு! :(

  போகட்டும், எனக்குப் பிடிச்சது 10,11,12, தான். :)))))))))))

  ReplyDelete
 91. @ கீதா மேடம்,

  //ரொம்பச் சீக்கிரமாச் சுட்டி கொடுத்திருக்கீங்க! :)))) நாம வேறே உலகத்திலே மும்முரமா இருக்கிறதாலே கொஞ்ச நாட்களா கவனிக்க முடியலை. சொன்னால் தான் உண்டு! :(//

  தாமதமாகவேனும் தந்தேனே:))! நன்றி மேடம். வேடுவக் கோலத்திலிருக்கும் சிவனை கிராதமூர்த்தியாக தனிமடலில் எனக்கு அடையாளம் காட்டி உதவிய நீங்கள் மற்ற படங்களையும் பார்க்க வேண்டாமா?

  //போகட்டும், எனக்குப் பிடிச்சது 10,11,12, தான். :)))))))))))//

  ஆமா, உங்க பிரியமான தோழி:))!

  ReplyDelete
 92. தெய்வ தரிசனங்களை பதிவில் காட்டிய உங்களுக்கு மிகுந்த நன்றிகள்!

  ReplyDelete
 93. @ S பாரதி வைதேகி said...

  கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி.

  இருதினம் முன்னர் முத்துச்சரத்தைத் தொடரும்[follower] முன்னூறாவது நபராக இணைந்தமைக்கும் என் நன்றிகள் பாரதி வைதேகி:)!

  ReplyDelete
 94. அசத்தல் படங்கள்! பகிர்ந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 95. @ கவிநயா,

  நன்றிகள் கவிநயா:)!

  ReplyDelete
 96. படங்கள் நன்றாக உள்ளது குறிப்பாக மண்டபம்.

  உங்களுடைய படங்களில் உங்கள் பெயரை குறிப்பிடும் போது இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷாக கொடுக்கலாம்..இது ரொம்ப சாதாரணமாக உள்ளது. அப்போது தான் உங்கள் படத்திற்கும் கூடுதல் கெத்து இருக்கும்.

  ReplyDelete
 97. @ கிரி,

  நன்றிகள் பாராட்டுக்கும் ஆலோசனைக்கும்:)! சமீபத்தில்தான் என் ஃப்ளிக்கர் படங்களில் பெயரை ஸ்டைலிஷாக கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன் அழகாய் இருக்கட்டுமென. ஆனால் நன்றாக எடுத்தால்தான் படத்துக்கு வரும் ‘கெத்து’ என்பதும் புரியாமல் இல்லை:))!

  ReplyDelete
 98. சிவ பக்த்தர்
  படம் சூப்பாரா வந்திருக்குங்க
  எல்லாப்படங்களும் அருமை :-))

  ReplyDelete
 99. @ கார்த்திக்,

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 100. அற்புதமாய் உள்ளது படங்கள் . அன்னை காந்திமதி அருள்வெள்ளம் பொங்கட்டும்

  ReplyDelete
 101. @ கண்ணன் ஜே நாயர்,

  மிக்க நன்றி கண்ணன்.

  ReplyDelete
 102. நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலை சுற்றி வந்த ஒரு உணர்வு. நன்றி. சொந்த ஊரில் - நெல்லையப்பர் கோவில் கோபுரம் + மேம்பாலம் + கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் + ஜன்ஷன் ரயில் நிலையம் - இவற்றின் படங்களை பார்த்தாலே ஒரு பூரிப்பு ஏற்ப்படுவது உண்மை. என்னைப்போல எதாவது விசேஷம் வந்தால் தான் நெல்லை என்று இருப்பவர்களுக்கு உங்களை போன்றவர்கள் அனுப்பும் படங்கள் தான் ஆறுதல். படங்கள் மிகவும் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள். தேரை விட்டு விட்டீர்கள். ஆனி மாத தேரோட்டம் - அதுவும் சந்தி பிள்ளையார் கோவில் தாண்டும் போது எடுத்த படங்கள் இருக்கிறதா ? கண்ணில் நிற்கும் காட்சிகள் அவை. மீண்டும் நன்றி. நெல்லையை கண்ணில் காட்டியதற்கு -

  ReplyDelete
 103. நம்ம ஊரு... நல்ல ஊரு..... படங்கள் எல்லாம் சூப்பரு!

  ReplyDelete
 104. எப்படி இக்கலையைக் கற்றுக் கொண்டீர்கள்? எல்லோரும் சொல்வது போல் முதல் ரோலிலேயே நல்ல படங்கள் கிடைத்தனவா?

  மிக நேர்த்தியான, முழுமையான படங்கள்.

  ReplyDelete
 105. Muthumani said...

  //ஆனி மாத தேரோட்டம் - அதுவும் சந்தி பிள்ளையார் கோவில் தாண்டும் போது எடுத்த படங்கள் இருக்கிறதா? கண்ணில் நிற்கும் காட்சிகள் அவை.//

  அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் விரும்பிக் கேட்டிருக்கும் இக்காட்சி சுகா அவர்களின் “தாயார் சன்னதி” தொகுப்பில் ஓவியர் பொன்.வள்ளிநாயகத்தின் கைவண்ணத்தில் மிகத் தத்ரூபமாகப் படைக்கப்பட்டிருந்தது. வாய்ப்புக் கிடைத்தால் அப்புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 106. @ நெல்லை ராம்,

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 107. @ தருமி,

  சொல்லப் போனால் முதல் ரோலில்(ஷாட்டில்) கிட்டியவைதான் அத்தனையும்:)! படமெடுக்கத் திட்டமிட்டும் செல்லவில்லை. அப்போது DSLR வாங்கியிருக்கவில்லை. Sony W80 P&S உபயோகித்து எடுத்தவை. குழந்தைகளையெல்லாம் அழைத்துக் கொண்டு சென்றிருந்ததால் வேகமாக ஒவ்வொரு இடங்களையும் கடந்து போகையில் படம் பிடித்தவையே அத்தனையும். ஒருநாள் நிதானமாக நேரம் செலவிட்டு அனைத்து சிற்பங்களையும் சிறப்புகளையும் பதிய வேண்டும் எனும் ஆவல் உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 108. Very good.Narration also usefull.I convey my wishes for showcasing wealth of Nellai.My Tirunelveli images were film and digital mixed and were not photoshop work.Only raw photos.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin