திங்கள், 31 டிசம்பர், 2012
பெண்மை வாழ்கவென..
நாற்பது வருடங்களாகக் கோமாவில் இருக்கிறார் அருணா ஷான்பாக். தற்போது 64 வயதாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் பத்திரிகையாளரும் அவரது தோழியுமான பிங்கி விரானியால் இவருக்காகக் கோரப்பட்ட கருணைக் கொலைக்கான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து தள்ளுபடி செய்யப்பட்ட போதுதான் இவருக்கு நேர்ந்த கொடுமை பலகாலம் கழித்து மீண்டும் உலகின் கவனத்திற்கு வந்தது. சோஹன்லால் பர்தா வால்மிகி எங்கோ உத்திரபிரதேசத்தில் கல்யாணம் காட்சி பார்த்து புள்ளையும் குட்டியுமாக நன்றாக இருக்கிறான் எனக் கேள்வி. தன் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் அருணா சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்றில் இந்த சமூகத்தின் அலட்சியமும், இன்றைய நொடி வரைத் தன்னை மாற்றிக் கொள்ளாத ஆணவமும் கலந்திருக்கிறது.
ஞாயிறு, 30 டிசம்பர், 2012
கொட்டு மேளங்கள் - மைசூர் தசரா (Mysore Dasara) படங்கள் : நிறைவுப் பாகம்
பாகம்: 1 [படங்கள் 23 ]
பாகம்: 2 [படங்கள் 18 ]
நூற்றுக்கும் மேலான கலைக்குழுவினர் உற்சாகமாக ஆடிப்பாடிச் சென்ற ஊர்வலத்தில் கொட்டு மேளங்கள் மட்டுமே எத்தனை வகை?
நடுநடுவே இடம் பெற்றிருந்தன புராணங்களை, கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் சிலைகளுடனான வாகனங்கள்.
இவற்றோடு ஊர்வலத்தில் கலந்து கொண்ட யானைகள் ஆறும், இரு தினங்கள் கழித்து மைசூரிலிருந்து லாரிகளில் கிளம்பியக் காட்சியுடன் தசரா தொடரை நிறைவு செய்கிறேன், 27 படங்களுடன்.
#1
லேபிள்கள்:
அனுபவம்,
கட்டுரை/அனுபவம்,
பேசும் படங்கள்,
மைசூர்
வியாழன், 27 டிசம்பர், 2012
மைசூர் தசரா (Mysore Dasara) 2012 - ஊர்வலத்தில் கலைஞர்கள் : பாகம் 2
யானைகள் வழிநடத்திய, “ 402_வது மைசூர் தசரா ஊர்வலக் காட்சிகள் - (பாகம் 1)” இங்கே.
“பலமுறை மைசூர் சென்றிருந்தாலும் இந்த விஜயதசமி நாளில் சென்றதும் 402_வது தசராவின் ஊர்வலத்தைக் காண வாய்த்ததும் யானைகளையும் கலைஞர்களையும் படமாக்கியதும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்து போனது.” -'போவோமா ஊர்கோலம்!' குங்குமம் தோழி, என் ஜன்னலில்.. இங்கே.
படங்கள் பதினெட்டுடன் ஒரு பகிர்வு:
# 1.
தசரா ஊர்வலம் அரண்மனையில் தொடங்கி ஏன் பன்னி(Banni) மண்டபம் சென்று முடிவடைகிறது என்பதற்கும் ஒரு வரலாற்றைச் சொல்லுகிறார்கள் இதிகாசத்திலிருந்து.
லேபிள்கள்:
அனுபவம்,
கட்டுரை/அனுபவம்,
சமூகம்,
பேசும் படங்கள்,
மைசூர்
புதன், 26 டிசம்பர், 2012
பெங்களூர் சாகித்யோத்சவா - 'ஆகஸ்ட் 15' ஒரு அறிமுகம்
செவ்வாய், 25 டிசம்பர், 2012
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
தினகரன் வசந்தத்தில்.. 'புகைப்படப் பிரியன்' மெர்வின் ஆன்டோ பேட்டி
மொபைல் போன் இருந்தால் ஹீரோ ஆகலாம்! :
மூன்றாவது
கண்ணாகவேக் கேமராவைப் பாவித்து, தான் ரசித்த விஷயங்களை உலகோடு பகிரும்
புகைப்படப் பிரியன் - மெர்வின் ஆன்டோ. நாகர்கோவில் தொழில் நுட்பக்
கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன் எலெக்ட்ரானிக்ஸ் படித்த கையோடு
மனதுக்குப் பிடித்தப் புகைப்படத் தொழிலில் இறங்கியவர்.
அட்டைப்படக் கட்டுரையாக..
நன்றி தினகரன் வசந்தம்:)!
***
“உனக்கு
அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என்று கேட்பதை போல் என்னிடம் சிலர்
கேட்பதுண்டு... ‘நிக்கான் கேமரா சிறந்ததா? கானன் காமெரா சிறந்ததா?’ என்று.
நம் பார்வையில் இரண்டும் ஒன்றே. ஆனால், நாம் பழகும் விதத்தில்தான்
இருக்கிறது வித்தை. நமக்குள்ளே புதைந்து கிடக்கும் க்ரியேடிவிட்டிக்கு
எந்தக் கேமரா என்பது முக்கியமே இல்லை.”
_ மேலும் வாசியுங்கள், மெர்வின் எனக்கு அளித்த பேட்டியை..
அவர் எடுத்த அற்புதமான படங்களை ரசித்தபடி:)!
அவர் எடுத்த அற்புதமான படங்களை ரசித்தபடி:)!
லேபிள்கள்:
* தினகரன் வசந்தம்,
அனுபவம்,
நேர்காணல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)