'கனவுடன் விரியக் காத்திருக்கும் ஒரு சிறிய ரோஜாவால், உலகை நம்பிக்கையின் நிறங்களால் வண்ணமயமாக்கிட முடியும்.'
ஞாயிறு, 15 ஜூன், 2025
நம்பிக்கையின் நிறங்கள்
வெள்ளி, 13 ஜூன், 2025
காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - ஹைதராபாத் (4)
கோல்கொண்டா கோட்டை:
#1
கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்திற்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோட்டை. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா என்பது கவனத்திற்குரியது.
#3
பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராக இருந்தது கோல்கொண்டா. இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்டமான கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.
ஞாயிறு, 8 ஜூன், 2025
இன்றைய தெய்வீக விருந்தினர் - பிரம்மக் கமலங்கள்
அபூர்வமாக பூக்கும் பிரம்மக் கமல மலர்களைப் பற்றித் தகவல்களுடன் முன்னரும் பலமுறை பகிர்ந்திருக்கிறேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில்..
இந்த முறை முழுதாக மூன்றாண்டு காலக் காத்திருப்பிற்குப் பிறகு தோட்டத்தின் ஒருபக்கச் செடியில் இரண்டும் மறுபக்கத்தில் நாலுமாக ஆறு மொட்டுகளைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி :).
#2
#3 இரட்டையர்:
திங்கள், 2 ஜூன், 2025
அருகி வரும் மிருகம் - சிறுத்தை
பூனைப் பேரினத்தைச் சேர்ந்த, புலி குடும்ப வகைகளில் சிறிய வகை விலங்காக உள்ளது சிறுத்தை. புலி, வேங்கை (சீட்டா), தென் அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இவற்றின் உடல் மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். ஆகையாலேயே இவற்றால் வேகமாக மணிக்கு சுமார் 58 கி.மீ வேகத்தில் ஓட முடியும். ஒரு சிறுத்தை ஒரே தாவலில் 6 மீட்டர் தொலைவை அடைய முடியும்.
#2
ஞாயிறு, 25 மே, 2025
நகரின் பெருமை.. சார்மினார்.. - ஹைதராபாத் (3)
சார்மினார்:
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாதின் முக்கிய இடங்களில் முதலிடமாக, நகரின் பெருமையாகவும் அடையாளச் சின்னமாகவும் விளங்குவது சார்மினார். இந்தியாவின் பிரசித்தி பெற்ற கலை நயம் மிக்கக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று.
#1
[பிரபல லாட் பஜாரை நோக்கி அமைந்த கிழக்குப் புற நுழைவாயில்.]
1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் நோக்கத்துடன் முகம்மது குலி குட்ப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கின்ற சாலையில் அமைந்துள்ளது. சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு என்றும் கூறப்படுகிறது.
#3
புதன், 21 மே, 2025
அலெக்ஸாண்ட்ரியா கிளி ( Alexandrine Parakeet )
பெரிய பச்சைக்கிளி:
#2
'பெரிய பச்சைக்கிளி' எனக் குறிப்பிடப்படும் 'அலெக்ஸாண்ட்ரியா கிளி' (Psittacula eupatria) இனம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
#3
மாவீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவில் பஞ்சாபிலிருந்து ஐரோப்பா வரைக்கும்
புதன், 14 மே, 2025
காட்டுக் கோழி ( Junglefowl )
ஆசியாவைச் சேர்ந்த, காடுகளில் வாழும் கோழி இனப் பறவை. இந்த இனத்தில் சிகப்புக் காட்டுக்கோழி, சாம்பல் காட்டுக் கோழிகள், இலங்கை காட்டுக்கோழி, பச்சைக் காட்டுக்கோழி என பல வகைகள் உள்ளன.
பெரும்பாலும் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சாதாரண வீட்டுக் கோழிகளை விட அளவில் சற்று பெரிய பறவைகளாகவும் இருக்கும்.
#2
இந்தியாவில் காணப்படும் இந்த சிகப்புக் காட்டுக்கோழி இனமே தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என சிலரும்,










.jpg)
.jpg)


.jpg)