புதன், 8 மார்ச், 2017
ஞாயிறு, 5 மார்ச், 2017
புதன், 1 மார்ச், 2017
"சுதந்திரம்" சிறு குறிப்பு வரைக - குறும்படம் - ஒரு பார்வை
‘காலம் எவ்வளவோ மாறி விட்டது. வெளியிடங்களிலும் சரி, வீட்டிலும் சரி, பெண்கள் இன்று எல்லா வகையிலும் சுதந்திரமாக வாழ்கிறார்கள், இயங்குகிறார்கள்’ என்பது ஒரு மாயத் தோற்றம்தான். ‘என்றைக்குப் பெண்கள் நடுநிசியில் நம் நாட்டின் வீதிகளில் நடந்து செல்லுகையில் பாதுகாப்பாக உணருகிறார்களோ அப்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையும்’ என்றார் காந்தி. நடுநிசி என்ன, நந்தினி, ஹாஸினி எனக் குழந்தைகளைக் கூட விட்டுக் வைக்காத கொடுமைகள் நடக்கும் கலியுகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உண்மைதான், இருபது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை விடவும் அதிக அளவில் இன்று பெண்கள் கல்வியில், பணியிடங்களில் பிரகாசிக்கிறார்கள். பல்வேறு துறைகளில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு உயர்ந்த நிலையை அடைய எத்தனையோ இடர்களையும் போராட்டங்களையும் அவர்கள் சந்திக்க நேர்ந்திருப்பினும், பெற்ற வெற்றி அவற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டுப் பெருமையைக் கொடுக்கிறது. ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம் நாட்டின் இன்னொரு பக்கம், போராடுவதற்கான வாய்ப்புகள் கூட அளிக்கப் படாமல், பிறப்புரிமையான கல்வி கூட ஆசைப்பட்டபடிக் கிடைக்காமல், திறமைகளை வெளிக்காட்ட வழியில்லாத சிறகொடிந்த கூண்டுப் பறவைகளாக பல இலட்சம் பெண்கள். குழந்தைத் தொழிலாளர்களாக மாறிக் கொண்டிருக்கும் சிறுமியரோடு, சிறார்களும் இதில் சேர்த்தி. இவர்கள் எல்லோரும் பழமையான எண்ணங்களிலிருந்து விடுபடாத நவ நாகரீக மனிதர்கள் நிறைந்த சமூகத்திடம் அல்லது அந்த சமூகத்திடம் கைதிகளாகிப் போன பெற்றோர்களிடம் தோற்று, தங்கள் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை உரத்துப் பேசுகிறது, M பிக்ஸர்ஸின் மூன்றாவது குறும்படமான "சுதந்திரம்" சிறு குறிப்பு வரைக
லேபிள்கள்:
குறும்பட விமர்சனம்,
குறும்படம்,
திரைப் பார்வை
திங்கள், 27 பிப்ரவரி, 2017
சின்னஞ்சிறு தேன் சிட்டு
#1
கண்மூடித் திறக்கும் முன் மலருக்கு மலர் தாவி தேனை உறிஞ்சி விட்டு மின்னல் வேகத்தில் பறந்து விடும் சின்னஞ்சிறு பறவை தேன் சிட்டு. 10 செ.மீட்டருக்கும் குறைவான அளவிலானது. கூரான வளைந்த அலகைக் கொண்டது. முருங்கைப் பூக்களிலும் தேன் உண்ணுமாயினும் செம்பருத்தியே இதற்கு மிக இஷ்டம். தோட்டத்தில் அடுத்தடுத்து நான்கு வகை செம்பருத்தி மரங்கள் உள்ளன. சிகப்பு, இளஞ்சிகப்பு, அடுக்குச் செம்பருத்தி மற்றும் வெள்ளை. வெள்ளை செம்பருத்தி மரத்தில் ஒரே நேரத்தில் பத்து முதல் பதினைந்து வரை பூக்கள் பூக்கும். காற்றில்லாத வேளையிலும் மலர்கள் மேலும் கீழுமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால், ‘இவன் வந்து விட்டான்’ என்று பொருள் :)!
#2
‘கொஞ்சம் இருப்பா.. மின்னல்..’ எனக் கெஞ்சிய படியே கேமராவில் இவனை சிறை பிடிக்கப் பலமுறை முயன்று, பலனளிக்காமலே போயிருக்கிறது. ‘சிட்டாகப் பறந்தான்.. பறந்தாள்..’ எனும் உவமைகள் எத்தனை சரியானது எனப் புரிந்தது.
#2
![]() |
| https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/32950185392/ |
சென்ற வாரம் ஓசைப் படாமல் கதவருகே காத்திருந்து காட்சிப் படுத்திய, ஓரளவுக்கு வெற்றி கிட்டிய படங்கள்.. இங்கே..
திங்கள், 20 பிப்ரவரி, 2017
4 & 5 மார்ச், 2017 - நாகர்கோயிலில்.. புகைப்படப் போட்டி.. மற்றும் புகைப்படக் கண்காட்சி
தமிழ் நாடு வீடியோ ஃபோட்டோகிராஃபர்ஸ் அசோசியேசன்
மற்றும்
புகைப்படப்பிரியன் (www.facebook.com/pugaipadapirian)
ஆதரவுடன்..
கன்னியாகுமரி மாவட்ட போட்டோ வீடியோ அசோசியேசன்
நடத்தும்..
மாபெரும் புகைப்படப்போட்டி மற்றும் புகைப்பட கண்காட்சி..
நாள்:
மார்ச் 4 & 5 - 2017
இடம்:
வளனார் மண்டபம் , அசிசி வளாகம், வெப்பமூடு ஜங்ஷன், நாகர்கோயில்
தீம்:
வியாழன், 9 பிப்ரவரி, 2017
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











