ஆறு மாதங்களுக்கு முன் என் தூறல் பகிர்வொன்றில் பல்பொருள் அங்காடியில் என் தங்கை மகள் கேட்ட கேள்வியைப் பற்றிப் பகிர்ந்திருந்தேன். வாங்கிய சாமான்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகளை மூன்று ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் மக்கள் குற்ற உணர்வோ வருத்தமோ இன்றி வாங்கிக் கொள்வதைப் பார்த்து கல்லாவில் இருந்தவரிடம் விலையை ஐம்பது நூறு என ஆக்கிப் பாருங்கள் என்றாள் அன்று. இப்போது கடைகளில் பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தால் அரசாங்கமே கடைக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்து விட்டதில் ‘பை கொண்டு வந்தா சாமான். இல்லேன்னா கையிலே அள்ளிக்கிட்டுப் போவது மக்களே உங்கள் சமர்த்து’ என சொல்ல ஆரம்பித்து விட்டன கடைகள்.
அதே போல பெங்களூர் சர்ஜாப்பூர் சாலையிலிருக்கும் குடியிருப்பொன்றின் அசோஷியேஷனைச் சேர்ந்த மீரா நாயர், தன்னார்வமுள்ள குடியிருப்புவாசிகளை இணைத்துக் கொண்டு Greenbugs எனும் அமைப்பை ஏற்படுத்தி, சுற்றுச் சூழல் காக்க மாநகராட்சி பரிந்துரைத்த திட்டங்களை மிகத் திறமையாகச் செயல்படுத்திக் காட்டியதற்காக ‘பெங்களூர் ரிசைக்கிளிங் ஹபா 2011’ நிகழ்வில் கர்நாடகா ஹைகோர்ட் நீதிபதி திரு N.K. பாட்டீல் கையால் சிறப்பு விருது பெற்றது குறித்தும் அப்பதிவில் பகிர்ந்திருந்தேன்.
தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியும், வசிப்பவரின் ஒத்துழைப்புமே இதற்குக் காரணம் என்றவரை பெங்களூர் மாநகராட்சியும் வெகுவாகு பாராட்டியதோடு இவர்களை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து குடியிருப்புகளும் இம்முறையைப் பின்பற்றக் கேட்டு வந்தது. வாய் வார்த்தையாகக் கேட்டுக் கொண்டது எதிர்பார்த்த பலனைத் தராததால் இப்போது வேண்டுகோள் எனும் பெயரில் ஆணையே பிறப்பித்து விட்டது மாநகராட்சி.