செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

சூரியனின் கையெழுத்து - பண்புடன் மின்னிதழில்...

1.
கிழக்கின் ஒளி
திறக்கும் தாமரை
நாளின் முதல் சொல்.

2.
காய்ந்த இலை
சலசலக்கும் காற்றில்
வழியும் வெப்பம்.

3.
சாளர ஒளி
மிதக்கும் துகள்கள் 
சூரியனின் கையெழுத்து.

4.
இலைகளில் இடைவெளி
சிதறும் கதிரொளி 
தைக்கும் பட்டாம்பூச்சி.

5. 
நிலவொளித் திடல்
ஆடும் வெற்றூஞ்சல்
தூங்காத காற்று.
*

6 கருத்துகள்:

  1. கவிதை நன்றாக இருக்கிறது.
    கதிரவனின் வரவு கண்டு கமல முகம் மலர்ந்து
    படமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி கோமதிம்மா. ஸ்ரீராமுக்கு வேறொரு பாடல் நினைவுக்கு வந்துள்ளது :).

      நீக்கு
  2. ஐந்துமே நன்று. முதல் கவிதை மற்றும் படம் எனக்கு இந்த வரிகளை நினைவூட்டின :

    "தேன் துளியை சேர்த்து வைக்கும்
    தாமரையில் இதயமம்மா
    தாமரையை மலர வைக்கும்
    ஆதவனின் உதயமம்மா.....​"

    பதிலளிநீக்கு
  3. தத்தித் தாவுது கண்கள்
    மனதில் மலர்ச்சி
    ஐந்து கவிதைகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin