ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

பஞ்சானனன்; கண்டோபா மற்றும் மஹாலசா - பழமைகளின் எதிரொலி

 கைவினை மற்றும் கலைப் பொருட்கள்:

#1

‘துணிவை அமைதியாகச் சேமித்து வையுங்கள். 
தேவைப்படும் போது அதைப் பயன்படுத்துங்கள்.’

#2  

க்ளொய்சொன்னே கலை (Cloisonné Art):

க்ளொய்சொன்னே என்பது உலோகப் பொருட்களை வண்ணமயமான பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கும் ஒரு தொன்மையான கலைநுட்பம். இதில் பொதுவாக தங்கத்தால் செய்யப்பட்ட உலோகத் தகடுகள் அல்லது கம்பிகள் மூலம் சிறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்குள் வண்ணப் பொருட்கள் நிரப்பப்படுகின்றன.

சமீபத்திய நூற்றாண்டுகளில் கண்ணாடிப் பளிங்கு எனாமல் (vitreous enamel) பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் வெட்டப்பட்ட ரத்தினக் கற்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவை பதிப்பாகப் பயன்படுத்தப்பட்டன.

விலைமதிப்புள்ள கற்களைப் பதித்து உருவாக்குவதற்கு ஒரு மாற்றாகவே எனாமல் கலை இதில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

[தகவல்: விக்கிப்பீடியாவிலிருந்து தமிழாக்கம்]


#3 & #4

சோடச உபசார விளக்கு:

இது 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கைவினைப்பொருள். விளக்கு ஏந்தி நிற்கும் அமைப்பிலான இது,  16 படிநிலைகளைக் கொண்ட இந்து வழிபாட்டு முறையான சோடச உபசார பூஜையில் பயன்படுத்தப்பட்டது. இறைவனுக்கான 16 வகையான உபசாரங்களில் தீபம் காட்டுதல் மிக முக்கியமான ஒரு அங்கம். 

விளக்கின் உச்சியில் அமைந்துள்ள நந்தி சிவ வழிபாட்டில் அளப்பரிய பக்தியின் குறியீடாக விளங்குகிறது. இவ்வகை விளக்குகளில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் எண்ணெயில் தோய்க்கப்பட்ட பருத்தித் திரிகள், சிறிய துளைகள் அல்லது கிண்ண வடிவக் குழிகளில் வைக்கப்படுகின்றன. 

#5
‘தங்கள் சிறகுகளை நம்புபவர்களுக்கே 
வானம் சொந்தமாகிறது.’

#6 & #7

பஞ்சானனன்

பஞ்சமுக லிங்கம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களைக் கொண்ட, உயர்ந்த பிரபஞ்ச வடிவத்தைக் குறிக்கிறது. அவரது உணர்வுநிலையின் ஐந்து பரிமாணங்களையும், அவரது தெய்வீகச் செயல்பாடுகளான படைத்தல், காத்தல், அழித்தல், முக்தி அளித்தல் மற்றும் அருள்புரிதல் ஆகியவற்றையும் குறிக்கிறது.


அவரது ஐந்து முகங்களான சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம் மற்றும் ஈசானம் ஆகியவை பஞ்ச பூதங்களுடனும், திசைகளுடனும் தொடர்புடையவை. இவை அண்டத்தின் அனைத்து அம்சங்களின் மீதான அவரது முழுமையான கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.



   கண்டோபா மற்றும் ம்ஹால்சா
#8 & #9

கண்டோபா மற்றும் ம்ஹால்சா ஆகியோர் இந்தியாவின் தக்காணப் பகுதிகளான மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் மிகத் தீவிரமாக வழிபடப்படும் புராண தெய்வங்கள்.

இந்து சமயப் புராணங்களில் குறிப்பாக இந்தியாவின் தக்காணப் பகுதிகளான மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில், பெரிதும் போற்றப்படும் தெய்வீகப் பெருமக்களாகக் கருதப்படுகின்றனர்.

கண்டோபா என்பது போர்வீர வடிவில் தோன்றிய சிவபெருமானின் உக்கிரமான அவதாரம். ம்ஹால்சா அவரது முதன்மைத் துணைவியார்.  இவர் பார்வதி தேவியின் அவதாரம் என்றும், மோகினி வடிவில் தோன்றிய விஷ்ணுவின் பெண் அவதாரமான மஹாலசா நாராயணி என்றும் இருவிதமாக, பரவலாகக் கருதப்படுகிறார்.

[தகவல்: விக்கிப்பீடியாவிலிருந்து தமிழாக்கம்]

#10
பக்தியால் செதுக்கப்பட்ட ஓவியம்; 
மரத்தில் வடிக்கப்பட்ட பிரார்த்தனை.

#11
விண்ணுலகப் பசு.. தெய்வீகக் குழந்தை..

**
[கடைசி இருபடங்கள் தவிர்த்து மற்ற படங்களில் உள்ளவை எனது தங்கையின் சேகரிப்பு. அவற்றில் படங்கள் 2,3,8_ல் உள்ளவை சில நூற்றாண்டுகளுக்கு முந்தையவை.]
***

5 கருத்துகள்:

  1. சிச்ச்ச்சின்ன கலைப்பொருட்கள். செய்நேர்த்தி. இதை சேகரித்து அழகு பார்ப்போர் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான கலைபொக்கிஷங்கள். படங்கள் எல்லாம் அருமை.
    சாய் சரிதம் கதையில் கண்டோபா, மஹால்சா வழிபாடு வரும்.

    பதிலளிநீக்கு
  3. படங்களுக்கு கீழ் அவைகளுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin