எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் ‘மண்வாசம்’ இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 64_வது நூல் ‘சமூகத்தின் முகம்’. இந்நூல் சமூகத்தின் சக்தி வாய்ந்த குரலாகவும், அதன் ஆழமான பிரதிபலிப்பாகவும் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், கவனிக்கப்படாத போன உண்மைகளை நேர்மையுடனும் கருணையுடனும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. வாசகர்களை இடை நிறுத்தி சிந்திக்க வைக்கின்றன.
சுயவிமர்சனம் செய்து கொள்ளவும், சுற்றியுள்ள உலகை கேள்விக்குள் கொண்டு வரவும் ஊக்குவிக்கின்றன. சிந்தனையைத் தூண்டி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
கல்வி, சமத்துவம், ஆரோக்கியம், மனிதம் மற்றும் சமூகப் பிரச்சனைகளின் சிக்கலான வலையைப் புரிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் இது அவசியமான வாசிப்பாக அமையும்.
கீழ்வரும் நூலின் பொருளடக்கம் அதை மேலும் உங்களுக்கு உறுதிப் படுத்தும்:
#
#
*
இந்த நூல் சென்ற வாரம் மதுரையில் நடந்த தைப்பொங்கல் விழாவில் வெளியிடப் பட்டுள்ளது.
"சமூகத்தின் முகம்"
பக்கங்கள்: 192; விலை: ரூ. 200;
வெளியீடு: மண், மக்கள், மனிதம் வெளியீடு
தபாலில் வாங்கிட, அலைபேசி எண்: 98656 28989
வெளியீடு: மண், மக்கள், மனிதம் வெளியீடு
தபாலில் வாங்கிட, அலைபேசி எண்: 98656 28989
**
#
பதினோராவது முறை:
பத்திரிகைகள் மற்றும் நூல்களின் அட்டைப் முகப்புகளுக்காக, நான் எடுத்த ஒளிப்படம் பயன்படுவது இத்துடன் பதினோராவது முறையாகும்.
ஆசிரியர் ப. திருமலை அவர்களின் நூலுக்குப் பயன்படுவது மூன்றாவது முறையாகும்:
அவரது முந்தைய நூல்கள் குறித்த பதிவுகள்:
***





பளிச்...வாழ்த்துகள்
பதிலளிநீக்கு