ஆங்கிலப் பெயர்கள்: Crested honey buzzard; Oriental Honey Buzzard
உயிரியல் பெயர்: Pernis ptilorhynchus
அக்சிபிட்ரிடே (Accipitridae) குடும்பத்தைச் சேர்ந்த, நடுத்தர அளவு முதல் பெரிய அளவு வரையிலான வேட்டைப் பறவை. இவ்வகையான (Hawk) கொன்றுண்ணிப் பறவைகளின் பொதுப் பெயர் தமிழில் ‘பாறு’ என அறியப்படுகிறது. அதாவது 'பாறுக் குடும்பம்' அல்லது 'கழுகு, பருந்து குடும்பம்' என்று குறிப்பிடப்படுகிறது.
#2
தேன் பருந்து ஆசியாவிற்கே உரிய தனிப்பட்ட இனமாகும். கோடைகாலத்தில் இனப் பெருக்கத்திற்காக சைபீரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன. பின்னர் குளிர்காலத்தை தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் செலவிடுகின்றன. இந்தப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் வசிக்கும் பறவைகளும் உள்ளன.

