#1
செம்பருந்து ஒரு நடுத்தர அளவிலான வேட்டைப் பறவை. இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ‘சிவப்பு முதுகுடைய கடல் கழுகு’ என்றும் அழைக்கப்படுகிறது. சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.
#2
இப் பறவையின் உடல் செம்மண் நிறத்திலும் தலையும் மார்புப் பகுதியும் வெண் நிறத்திலும் இருக்கும். சிறகுகளின் நுனி கருப்பு நிறத்தில் இருக்கும். மற்ற கழுகுகளைப் போல் முட்கரண்டி வடிவில் அன்றி இதன் வால் பகுதி வட்டமாக இருக்கும்.
#3
நிறம் தவிர்த்து, தோற்றம் மற்றும் குணாதிசயங்களில் கரும்பருந்துக்கு நெருங்கிய உறவுப் பறவை எனலாம்.

.jpg)
.jpg)
.jpg)





