வெள்ளி, 27 ஜூன், 2025

பிளைத் நாணல் கதிர்க்குருவி ( Blyth's Reed Warbler )

 

ஆங்கிலப் பெயர்:  Blyth's Reed Warbler
உயிரியல் பெயர்: Acrocephalus dumetorum 
வேறு பெயர்: பிளைத்தின் நாணல் வார்ப்ளர்

#2
பிளைத் நாணல் கதிர்குருவி ஒரு சிறிய பழுப்பு நிற பறவை ஆகும். முதன்முதலில் இப்பறவை 1849 ஆம் ஆண்டு ஆங்கில விலங்கியல் நிபுணர் எட்வர்ட் ப்ளைத்தால் முறையாக விவரிக்கப்பட்டது. அதனாலேயே  எட்வர்ட் பிளைத்தின் நினைவாக பெயரிடப்பட்டது. 

#3
க் கதிர்குருவி வடமேற்கு இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி குளிர்காலத்தில் இடம்பெயர்கிறது. இந்தப் பறவை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கிட்டத்தட்ட சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி வரை இனப்பெருக்கம் செய்கிறது. மேலும், வங்காளதேசம், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் குளிர்காலத்தைச் செலவழிக்கிறது. மேலும் இந்த இனம் ஐரோப்பாவில் மேற்கு நோக்கி அதன் வரம்பை விரிவுபடுத்தியும் வருகிறது.

#4
ப்பறவை அக்ரோசெஃபாலிடே குடும்பத்தைச் சேர்ந்த நாணல் கதிர்க்குருவி ஆகும். இந்த வகைக்குள் மர கதிர்க்குருவிகளும் அடங்கும்.  உயிரியல் பெயர் Acrocephalus dumetorum. இதில் அக்ரோசெபாலஸ் என்ற பேரினப் பெயர் பண்டைய கிரேக்க அக்ரோஸ் என்பதிலிருந்து "உயர்ந்த" எனும் பொருள்படும்படி அமைந்துள்ளது. பெயரின் அடுத்த பாகமான டுமெட்டோரம் லத்தீன் மொழியில் டுமெட்டம் என்பதிலிருந்து "தடிமனான” எனும் பொருள்படும்படி அமைந்துள்ளது.

#5

பிளைத் நாணல் கதிர்க்குருவி 12 முதல் 14 செ.மீ (சுமார் நாலரை முதல் ஐந்தரை அங்குலம்) வரையிலான நீளம் கொண்டது. 8 முதல் 16 கிராம் வரையிலான எடை கொண்டது.  பிற கதிர்க்குருவிகளோடு ஒப்பிடுகையில், குறுகிய இறக்கைகளையும் மற்றும் நீண்ட அலகையும் கொண்ட ஒரு மெல்லிய பறவை ஆகும். இதன் இறகுகள் சில தனித்துவமான அம்சங்களுடன், வெப்பமான தொனிகள் இல்லாததாக விவரிக்கப்பட்டுள்ளது. மேல் பாகங்கள் ஆழ்ந்த ஆலிவ் பழுப்பு நிறத்திலும், குறுகிய, வட்டமான இறக்கைகள் குறைந்த ஆலிவ் நிறத்திலும் இருக்கும். கீழ் பாகங்கள் வெள்ளை நிறத்தில் இருக்க்கும். 

#6

இப்பறவை எழுப்பும் ஒலி மாறுபட்டதாக டிக், சக்ஸ், சர்ர் என கடுமையான ஒலிகள், மற்றும் மெல்லிசை போன்ற விசில்கள் கலந்ததாக இருக்கும்.

#7

பிளைத் நாணல் கதிர்க்குருவிகள் மே மாத இறுதிக்கும் ஜூலை மாதத்திற்கும் இடையில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவை பொதுவாக ஒருதார மணம் கொண்டவை என்றாலும் பலதார மணமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#8

இந்தப் பறவைகள் தாவரப் பொருட்கள் மற்றும் சிலந்தி வலைகளால் ஆன ஒரு சிறிய கோப்பை போன்ற ஒரு கூட்டை உருவாக்கி, தரையில் இருந்து  எட்டு அங்குலம் முதல் இரண்டடி வரையிலான உயரத்தில் வைக்கின்றன. 3 முதல் 6 முட்டைகள் இடுகின்றன. ஆண் மற்றும் பெண் இரு பறவைகளுமே அடைகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன என்றாலும் பெரும்பாலும் பெண் பறவைகளே இப்பணியை மேற்கொள்கின்றன. 

இளம் பறவை:

#9

#10

முட்டைகள் 12 முதல் 13 நாட்கள் வரை அடைகாக்கப்படும். குஞ்சுகளுக்கு பெற்றோர் இருவருமே உணவளிக்கிறார்கள். குஞ்சுகள் 10 முதல் 22 நாட்கள் வரை பெற்றோரைச் சார்ந்திருந்து விட்டு, பின் வெளியேறிச் செல்கின்றன.

#11

*

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (213)
பறவை பார்ப்போம் - பாகம்: (125)
*




5 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் அழகு. உங்கள் தோட்டத்திற்கு வந்த கதிர் குருவிகள் அழகு அவை கொடுக்கும் சத்தம் நன்றாக இருக்கும்.

    இந்த கதிர் குருவி எங்கள் வீட்டில் முன்பு இரண்டு தடவை கூடு கட்டி இருந்தது.

    கதிர் , இளம் பசும் புற்கள் வைத்து கூடு கட்டும்.
    இப்போது அவை வருவது குறைந்து விட்டது. எல்லா பக்கமும் வீடு கட்டி விட்டார்கள். அதனால் அதற்கு கூடு கட்ட புற்கள் கிடைப்பது இல்லை.
    நான் முன்பு எடுத்த இந்த பறவைகளின் படங்களை பார்த்து கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடுகள் அதிகமாகி பசுமை குறையும் போது பறவைகள் பலவித சிரமங்களைச் சந்திக்கின்றன.

      இங்கே அனைவர் வீட்டிலும் மரங்களுடன் தோட்டங்கள், மற்றும் சுற்றுச்சுவருக்கு பின் பக்கம் வயல்வெளி இருப்பதால் தினமும் 10 வகைப் பறவைகளையாவது பார்த்து விடுகிறேன். சென்ற வருடம் புயலில் முருங்கை மரம் விழுந்து விட்டதில் இளைப்பாற வசதி இல்லாததால் அதிக நேரம் நிற்பதில்லை. இப்போதுதான் ஒரு கிளை பக்கவாட்டில் விரிந்து வருகிறது. மறுபடியும் பறவைகள் அதிக நேரம் அமர்ந்து செல்கின்றன:).

      ஆம், கதிர்க்குருவிகளின் சத்தம் இனிமையானது.

      கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. படங்களில் அந்தப் பறவை அழகாகக் காட்சி அளிக்கிறது.  நம்மூரில் அவ்வப்போது தென்படும் சாம்பல் குருவி போல இருக்கிறது.  

    நிறைய சுவாரஸ்யமான விவரங்கள்.  கூடு இவ்வளவு குறுகிய உயரத்தில் கட்டினால் அதற்கு ஆபத்தில்லையோ?

    பதிலளிநீக்கு

  3. பொதுவாகவே கதிர்க்குருவிகள் ஏரி மற்றும் குளக்கரைகளில் குறைந்த உயரத்திலேயே கூடுகளை அமைக்கின்றன.

    முன்னர் பகிர்ந்த சாதாக் கதிர்க்குருவி மற்றும் சாம்பல் கதிர்க்குருவி குறித்த பதிவுகளிலும் இது குறித்த தகவல்கள் உள்ளன.

    சாதாக் கதிர்க்குருவிகள் புதர்கள் மட்டுமல்ல, நன்கு உயர்ந்து வளர்ந்த கோரைப் புற்களிலும் கூட கூடுகளைக் கட்டுகின்றன. சாம்பல் கதிர்க்குருவிகளும் நிலத்துக்கு அண்மையில், உயர்ந்து வளர்ந்த புற்களின் மேலேயே கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.

    எதிரிகளிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் தெரிந்திருக்கும். ஆயினும் ஆபத்துகளுக்கு வாய்ப்பு அதிகமே.

    ஆம், இந்தக் கதிர்க்குருவி அளவில்.. தோற்றத்தில்.. பார்க்க சாம்பல் குருவியை நினைவூட்டுகின்றன.

    கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. ராமலஷ்மி படங்கள் பார்த்து பிரமித்துப் போனேன். கதிர்க்குருவிகள் அழகு என்றால் அதை நீங்க எடுத்த விதம் அழகோ அழகு. ரசித்துப் பார்த்தேன். உங்கள் பகுதியில் பறவைகள் நிறைய வருகின்றன இல்லையா? வீடு தோட்டமுடனும் இருப்பதால்.

    பறவைகளைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். இந்தக் கதிர்க்குருவிகளை ஏலஹங்காவில் இருந்தப்ப பார்த்திருக்கிறேன் ஆனால் படங்கள் எடுக்க முடியவில்லை. எனவே குருவிகளைப் பற்றி அறிய முடியவும் இல்லை. பொதுவாகத் தெரியாத பறவைகளை எடுத்துவிட்டு கூகுளில் போட்டுப் பார்த்து அறிவது வழக்கம். இப்போதைய பகுதியில் மரங்கள் நிறைய இருந்தாலும் பார்க்க முடிவதில்லை.

    ரசித்துப் பார்த்தேன், ராமலக்ஷ்மி.

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin