#1
அனாடிடாய் (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப்பறவை இனம் வாத்து. உருவத்தில் சிறிய அளவிலான வாத்துகள் ducks எனவும் அளவில் பெரியதாக நீண்ட கழுத்துடன் காணப்படுபவை Geese (பன்மை) எனவும் விளிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் பெண் வாத்து goose எனவும் ஆண் வாத்து gander எனவும் குறிப்பிடப்படுகின்றன.
இதே அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினராக இருக்கும் அன்னப் பறவைகள் geese வகை வாத்துகளை விடவும் பெரிதாக வளைந்த கழுத்துகளுடன் காணப்படும்.
#2
Geese வகை வாத்துகளில் 3 விதமான பிரிவுகள் உள்ளன. அன்செர் (Anser) பேரினத்தைச் சேர்ந்த சாம்பல் வாத்துகள், பிரன்டா (Branta) பேரினம் (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் (Chen) பேரினத்தைச் சேர்ந்த வெள்ளை வாத்துகள்.
இவை gregarious எனப்படும், கூட்டமாக வாழும் வழக்கம் கொண்டவை. இணை சேருதல் போன்றன தாண்டி நட்புறவுடன் ஒரு குடும்பமாக மந்தையாக வசிக்கும்.
#3
தமது இணைக்கு ஆயுட்காலம் முழுவதும் விசுவாசமாக இருக்கும். இணையையோ அல்லது தமது குஞ்சுகள் அல்லது முட்டைகளையோ இழக்க நேரிட்டால் சோகமாக துக்கம் அனுசரிக்கும்.
#5
இவை 12 முதல் 15 முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.
#6
அகன்ற, தட்டையான மூக்கினைக் கொண்டவை.
#7
#8
இவற்றின் உடம்பிலிருந்து சுரக்கும் ஒரு வித எண்ணெய் ஆனது இறக்கைகள் மேல் படர்ந்து நீரிலே மிதக்க உதவுவதுடன், சிறகுகளையும் நனைந்திடாமலும் பாதுகாக்கிறது.
#9
நீந்துவதற்கு ஏற்றதாக இவற்றின் கால்கள் வலைப் பின்னல் போல அமைந்திருக்கும்.
#10
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம் பெயருகையில் வானில் V வடிவத்தில் பறக்கும். முதலாவதாகப் பறக்கும் வாத்து களைப்புறுகையில் மற்றொரு வாத்து அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும்.
ஏரிகள், நதிகள், குளங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் காணப்படும். நீரில் இருப்பதைக் காட்டிலும் கரையோரங்களில் நிலப்பகுதிகளிலே அதிக நேரம் வாழும்.
#11
நீரிலுள்ள சிறு உயிரிகள், தாவரங்கள், தானியங்கள், பூஞ்சைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றை உண்ணும்.
#12
வாத்துகள் அவற்றின் முட்டைகளுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுவது பரவலாக வழக்கத்தில் உள்ளது.
இவற்றின் ஆயுட்காலம் காடுகளில் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலும். பராமரிப்புடன் வளர்க்கப்படுபவை 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழும்.
**
வெள்ளை வாத்துகள் (படங்கள் 1,6,7,9) வீட்டுக்கு அருகாமையிலுள்ள கண்ணமங்களா ஏரிப் பகுதியில் எடுத்தவை. மற்றவை மைசூரில் தங்கியிருந்த (Wind Flower Resort) விடுதியில் சுற்றி வந்த வளர்ப்பு வாத்துகள்.
பதிவுக்குத் தொடர்புடையதாக 2016-17_ல் மல்லேஸ்வரம் சாங்கி ஏரியில் எடுத்த சாம்பல் வாத்துகளும் மற்றும் இலங்கை விகரமகாதேவி பூங்காவில் எடுத்த கருப்பு மஸ்கோவி வாத்துகளும்:
#A
**
*இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்யப்பட்டத் தகவல்கள்.
*பறவை பார்ப்போம் - பாகம்: 120
**
ஆச்சர்யமான சில தகவல்கள், சுவாரஸ்யமான பல தகவல்கள்.
பதிலளிநீக்குஇவ்வளவு சமர்த்து அன்பானவை என்று கொண்டாடப்படும் வாத்துகளில் சில, சும்மா தாண்டிச் சென்ற என்னைத் ஒரு முறை துரத்தியது என்ன நியாயமோ!!!!
படங்கள் யாவும் சிறப்பு.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குஎல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டல்லவா:)? இலங்கை பூங்காவில் என் கெண்டைக் காலைக் கவ்வி அலற வைத்த கருப்பு மஸ்கோவி வாத்து கடைசிப் படத்தில் வலப்பக்கம் உள்ளது பாருங்கள்:)!
இந்த வாத்துகளின் குணம் ரொம்ப ஆச்சரியப்பட வைப்பவை. ன். வாசித்திருக்கிறேஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு என்பது போல ...அவற்றிற்கும் உணர்வுகள் உண்டு என்பது போன்று
பதிலளிநீக்குஅழகான படங்கள். செமையா இருக்கு.
கீதா
கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்குஅருமையான படங்கள். அழகான வாத்துகள், அருமையான விவரங்கள்.
பதிலளிநீக்குஅவற்றின் பழக்க வழக்கங்கள் எல்லாம் அன்பை சொல்கிறது.
வித விதமான வண்ணங்களில் கண்ணையும் கருத்தையும் கவருகிறது.
கோமதி அரசு
கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குவாத்துகளின் படங்களும் தகவல்களும் அருமை. goose - இனத்தை பெருவாத்துகள் என்றே நான் குறிப்பிடுகிறேன். தமிழில் வேறு எப்படிக் குறிப்பிடுவது என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குகண்களைச் சுற்றி திண்டு திண்டாகச் சிவப்பு தசையோடு காணப்படும் மஸ்கோவி வாத்துகளை முதன்முதலாகப் பார்த்தபோது நோய்வாய்ப்பட்ட வாத்துகள் என்று எண்ணிவிட்டேன். பிறகுதான் அப்படி ஒரு இனம் இருக்கிறது என்று அறிந்தபோது இயற்கையின் படைப்பை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது.
‘பெருவாத்து’ அழகான பொருத்தமான பெயர். இலங்கையில் கண்டது மஸ்கோவி வகை வாத்து என்பது நீங்கள் சொன்ன பிறகே அறிய வருகிறேன். அந்தப் பெயரையும் பதிவில் சேர்ந்து விட்டேன். நன்றி கீதா.
பதிலளிநீக்குவாத்துக்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை! புகைப்படங்கள் மிக அழகு!
பதிலளிநீக்கு