திங்கள், 17 மார்ச், 2025

ஆதி ரங்கம் - ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம்

#1


கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் ஒன்று.மைசூரிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள  மாண்டியா மாவட்டத்தில் காவேரி நதியின் தீவான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்.  

#2


#3

வைஷ்ணவர்களின் முக்கிய தீர்த்த ஸ்தலமாகவும், ஆழ்வார் பக்தி இயக்கத்துடன் தொடர்புடையதுமாக உள்ளது. குறிப்பாக காவேரி நதி ஓரத்தில் அமைந்துள்ள  ‘பஞ்சரங்க க்ஷேத்திரங்கள்’ என அழைக்கப்படும் ஐந்து முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.  காவேரி நதி ஆரம்பமான இடத்திலிருந்து  முதலில் அமைந்துள்ள கோயில் இதுவே ஆகையால் இது ‘ஆதி ரங்கம்’ என்றும் அறியப்படுகிறது.  ஸ்ரீரங்கபட்டண நகரம் இந்த கோயிலின் பெயரைக் கொண்டே உருவாகியுள்ளது.

#4

984_ஆம் ஆண்டு உள்ளூர் தலைவரான திருமலையா அவர்களால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் ஹொய்சாள அரசர்களால் பராமரிக்கப்பட்டு அதன் பின்னர் விஜயநகரப் பேரரசின் ஆதரவால் மேம்படுத்தப்பட்டது. ஆகையால் ஹொய்சாளா மற்றும் விஜயநகர கலைக் நுணுக்கங்கள் இரண்டும் கலந்த வகையில் கோயிலின் கட்டுமானம் உள்ளது. மைசூர் அரசர்களான உடையார்கள் காலத்திலும் கோயில் மேலும் அழகூட்டப்பட்டது. 

கோயிலின் உயரமான ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

#5


#6  கோயிலின் உட்புறத்திலிருந்து ராஜ கோபுரம்

#7

கோவிலின் முக்கிய தெய்வமான ஸ்ரீரங்கநாதர், கருவறையில் பெரியதொரு பஞ்சமுக நாகத்தின் மேல் சயனித்த நிலையில் அருள் புரிகிறார்.

கோவிலில் ரங்கநாயகி தாயார், நரசிம்மர், சுதர்ஷன ஆழ்வார், கருடாழ்வார் மற்றும் பெரிய அளவிலான அனுமார் சன்னதிகள் உள்ளன. பெரும்பாலான கோயில்களைப் போல சன்னதிகளைப் படம் எடுக்க அனுமதி இல்லை. 

#8

#9

மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் அற்புதமான சிற்பக்கலையுடன் பல அழகிய தூண்கள், பிரகாரங்கள், மண்டபங்களைக் கொண்டுள்ளது. 

#10


#11
#12



ராமானுஜர் போன்ற பெரிய ஆழ்வார்கள் வழிபட்ட புண்ணியத் தலம். காவேரி நதியின் தீவில் அமைந்துள்ளதால் நதியில் புனித நீராடுவதற்காகவும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். 

#13

#14

இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் ரதோற்சவம் (தேர் திருவிழா) ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

#15

#16

***




6 கருத்துகள்:

  1. படங்கள் ரொம்ப ரொம்ப கவர்கின்றன. கோவிலை ஒரு முறையாவது பார்க்க விருப்பம்.

    பதிலளிநீக்கு
  2. முகத்தை மட்டும் நீட்டி எட்டிப் பார்க்கும் அந்தப் பெண்மணி என்னுடன் பணிபுரிந்த  இளைய அதிகாரி ஒருவரை நினைவு படுத்துகிறார்,  கோபுர வாசலிலும் அங்கேயே நின்று ஒரு குடும்பம் நீங்கள் படம் எடுப்பதை பார்க்கிறது!  ஆளில்லாமல் புகைப்படங்கள் எடுப்பது ஒரு வரம்தான்!

    பதிலளிநீக்கு
  3. பார்க்க வேண்டிய ஸ்தலம். முயன்றிடுங்கள். ஆளில்லாமல் எடுக்க ஒவ்வொரு இடத்திலும் ஓரிரு நிமிடங்கள் வரை நின்று பார்க்கலாம். இடைவெளி கிடைத்தால் அதிர்ஷ்டம் :). நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. ராமலக்ஷ்மி.....சூப்பர் படங்கள். முதல் படம் செம ஆங்கிள்ல எடுத்திருக்கீங்க !!!!! இருங்க அடுத்ததும் பார்த்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நீங்க போயிருந்தப்ப, பதிவு மார்ச் 17 என்றால் அதுக்கு முன்னர் போயிருப்பீங்க இல்லையா? நாங்க மார்ச் முதல் வாரம் போனோம். நீங்க போயிருந்தப்ப கோவில் வெளியிலும் கூட தடுப்பு வரிசை எல்லாம் போட்டிருக்காங்களே. நாங்க போயிருந்தப்ப வெளியில் இல்லை.

    ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஸோ கோபுரம் எடுக்கவே சிரமமா இருந்தது. கோணம் பார்த்து,

    உள் கொடிமரம் எடுத்திருக்கீங்க அட! ஒன்றும் சொல்லலியோ? அவங்க சத்தம் போட்டதுனால நான் எடுக்க பயந்து போனேன். படி ஏறும் இடத்தில் இருந்து எடுக்க முயற்சி செய்தாலும் அங்கு ஃபோட்டோ கூடாது என்பதைப்ப் பார்த்தும் கணவர் சொல்லிட்டார் எடுக்காதன்னு!!!!

    படங்கள் ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க.

    உள்பக்கமும் கூட வெளிலருந்தே வரிசை போல. ஏதேனும் திருவிழா அல்லது விசேஷ நாளோ?

    அட்டகாசமான பட்னகள் விவரங்கள்.

    மக்கள் அதிகமாக இருந்தால் எடுக்கத் தயங்குவேன்.

    முகப்பு, கோபுரம் உள்ளே இருந்து எல்லாமே மிக அழகு!!!! உங்க படங்கள் கோணங்கள் சிறப்பு.

    எனக்கும் நிதானமாகக் கோணம் பார்த்து எடுக்க விரும்புவேன். ஆனால் அதற்கான சூழல் கிடைக்காது பெரும்பாலும்.

    கடைசிப்படங்கள் செம....retro effect!!!

    ரங்கன திட்டுவிலேயே என் கேமராவின் பேட்டரி தீர்ந்துவிட்டது. எனவே கோவில் படங்களெல்லாம் மொபைலில் தான் எடுத்தேன்.

    எனக்கு என்னவோ கேமராதான் பிடித்திருக்கிறது படங்கள் எடுக்க.

    ரசித்துப் பார்த்தேன் படங்கள் எல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கொடிமரம் எடுத்து உள்ளே சென்ற பிறகுதான் தங்கள் பதிவில் நான் சொன்ன நிகழ்வு நடந்தது. மேலும் கொடிமரத்தைப் பலரும் படம் எடுத்துக் கொண்டிருந்ததால் நானும் எடுத்தேன். மற்றபடி சன்னதி பகுதிகளில் படம் எடுக்க அனுமதி இல்லை. வெளிப்பிரகாரங்களில் எடுக்கிறார்கள்.

    பதிவில் உள்ளவை dslr மற்றும் மொபைல் இரண்டிலும் எடுத்தவை.

    கருத்துகளுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin