ஞாயிறு, 7 ஜூலை, 2024

உலகம் உனது

 #1

"எந்தக் குறையும் இல்லை என உணரும் பொழுது, 
முழு உலகும் உனதாகும்."
_ Lao Tzu

#2
"மனிதனின் உயிர்ப்புள்ள ஆன்மா, 
தனது சக்தியை புரிந்து கொள்ளும் நேரத்தில், 
அதனை அடக்க இயலாது."
_ Horace Mann

#3
"என்னால் மூன்றே வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லிவிட முடியும், வாழ்க்கையில் என்ன கற்றுக் கொண்டேன் என: 
அது சென்று கொண்டிருக்கிறது."
_ Robert Frost

#4
"ஆழமான உங்கள் காயங்களுக்குள்ளே 
காத்திருக்கின்றன விதைகள், 
அழகான மலர்களை வளர வைப்பதற்கு."
– Niti Majethia

#5
"நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியிலும் வாழ்வீர்களானால் 
கடந்த காலத்தில் செய்யாது போனவற்றிற்காக 
வருந்திக் கொண்டிருக்க மாட்டீர்கள்."

#6
"தகுதியானதாக நீங்கள் நினைக்கும் வாழ்வை, 
வாழ்ந்திடுங்கள்!"
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 203
*
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
*
பூக்கள் ஆயிரம்
படங்கள் ஆயிரம் - FLICKR பயணம் என 2013_ல் ஆயிரமாவது படமான ரோஜாமலருடன் ஒரு பதிவை என் வலைப்பூவில் இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக அளித்த மற்றுமொரு பதிவு “பூக்களைப் படமாக்குவதில் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது?” [பழைய பதிவுகள் மற்றும் அதிலிருக்கும் பின்னூட்டங்கள், எத்தனை நினைவுகளைத் தருகின்றன! அதில் ஒரு சிலரைப் பிற சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. மற்ற பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.]
அதிலிருந்து சில வரிகள்...

//நேரில் பார்ப்பதை விடவும் மலர்களை மிக அருகாமையில், அழகான கோணத்தில், சரியான ஒளி அமைப்பில் காட்டுவதும், தொட்டு விடத் தூண்டும்படியாக இதழ்களின் மென்மையை.. வண்ணக் கலவைகளின் அற்புதத்தை.. படத்தில் கொண்டு வருவதும் சவாலோ, சுவாரஸ்யமோ கூட இல்லை. பரவசம்! குறுகிய ஆயுளையே கொண்ட மலர்கள், அழியாமல் காலத்திற்கும் வாழும் நம் படங்களில் என்பதிலும் கிடைக்கிறது ஆத்ம திருப்தி.//

மேலும் அப்பதிவில், ‘படங்கள் ஆயிரம்’ போல் என்றேனும் ‘பூக்கள் ஆயிரம்’ என்றொரு பதிவு போட்டாலும் போடுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன். தற்செயலாகக் கவனித்த போது இந்த 16 வருட நெடும்பயணத்தில் அதற்கான நேரம் வந்திருப்பது புரிந்தது.

இப்பதிவின் கடைசிப் படமான ஜினியா மலரின் படத்துடன், 5000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் என் ஃப்ளிக்கர் ஓடையில் “பூக்கள் ஆல்பம்” மட்டும் 1000 படங்களை நிறைவு செய்திருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது 🙂!

***

8 கருத்துகள்:

  1. பூக்கள் ஆல்பம் மட்டுமே 1000 த்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது - வாழ்த்துகள்.  மென்மேலும் தொடரட்டும்.

    வரிகளும் படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கள் ஆல்பம் 1000 நிறைவு செய்து விட்டது ஸ்ரீராம். மொத்த படங்கள் ஐயாயிரத்தை நெருங்கிய படி..!

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. வாழ்த்துகள், பாராட்டுக்கள் 5000 பதிவை நெருங்கி கொண்டு இருப்பதற்கு.
    பூக்கள் ஆல்பம் 1000 செய்து இருப்பது மகிழ்ச்சி. உங்கள் மலர்செண்டு அன்பளிப்பு.

    வீட்டுத்தோட்ட மலரக்ள் படம் அருமை.
    மலர்கள் மலர்ந்து சிரிப்பதை பார்ப்பது பரவசம் தான். அவற்றில் பனித்துளி ஒட்டி இருக்கும் போது உறுண்டு விழுந்து விடுமோ என்று ஆடி கொண்டு இருக்கும் போது பார்ப்பது மேலும் பரவசம்.

    மலர்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் பகிர்வும் அருமை ராமலக்ஷ்மி. 16 வயது பயணத்திற்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    மேலும் மேலும் பயணம் அழகாய் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்களை நீங்களும் ரசித்துப் படமெடுத்து வருகிறீர்கள். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. பூக்கள் மட்டுமே ஆயிரம் - ஆஹா... வாழ்த்துகள்.

    பதிவு வழி வெளியிட்ட படங்களும் வரிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  4. இயற்கை படைப்புகளோடு உறவாடி, அதன் நுட்பமான உணர்வுகளை உணர்ந்து, பல சமயங்களில் அதற்காகக் காத்திருந்து பதிவு செய்து, அதைக் காட்சிப்படுத்துவது கலையைத் தவமாகக் கருதும் கலைஞர்களுக்கே சாத்தியம். 1000/5000.., எனத் தொடர்ச்சியாகச் சோர்வின்றி பதிவேற்றுவது என்பது ஒரு உறுதியான அர்ப்பணிப்பும், திட சங்கல்பமும் உடைய ஆன்மாவிற்கு மட்டுமே சாத்தியம். இவை உங்களுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்:).

    பதிலளிநீக்கு
  5. சோர்வு ஏற்படாமல் இல்லை:). ஆயினும் அதைப் புறந்தள்ளித் தொடர்ந்து வருகிறேன். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin