ஞாயிறு, 21 ஜூலை, 2024

உலகம் பிறந்தது உனக்காக..

#1

“எந்த அளவுக்கு 
நம்பிக்கையுடன் இருக்கிறீர்களோ,
அந்த அளவுக்கு இருக்கும் 
உங்களது செயலாற்றல்.”
_ William Hazlitt

 #2

“உங்களால் முடியும் என நம்பினாலே 
பாதி தூரத்தைக் கடந்து விடுவீர்கள்.”
_ Theodore Roosevelt

#3
“ஒருங்கிணைந்திடுங்கள், 
பொருந்திடுங்கள், வென்றிடுங்கள்!”

#4
“நெடும்பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கும் 
எல்லா சிரமங்களையும் 
முன்கூட்டியே அறிய வருவோமானால், 
நம்மில் பெரும்பாலோர் 
புறப்படவே மாட்டோம்.”
_ Dan Rather

#5
“உலகம் 
உங்கள் புத்தகங்களிலோ வரைபடங்களிலோ 
இல்லை, 
அது 
வெளியே உள்ளது.”
 _J.R.R. Tolkien


#6
“உலகில் 
உங்கள் ஒரே ஒருவரால் மட்டுமே 
உங்கள் திறமையைப் பயன்படுத்த முடியும்.” 
_ Zig Ziglar

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 205
பறவை பார்ப்போம்.. - பாகம்: 116

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

12 கருத்துகள்:

  1. உங்கள் வீட்டுத்தோட்டத்து பறவைகள் அனைத்தும் அழகு.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    பொன்மொழிகள் அனைத்தும் அருமை. 2, 4 பொன்மொழியை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தவற்றைக் குறிப்பிட்டதற்கும் கருத்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. நம்பிக்கை செயலாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது.  ஆனால் இதைச் சொல்லும் அந்தப் பறவையின் முகத்தில் ஏன் அவ்வளவு கவலை?!

    முடியும் என்கிற எண்ணத்தின் பலனை தலையில் கிரீடத்துடன் ராஜகம்பீரமாக சொல்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவாச்சி கவலையுடனா தோற்றமளிக்கிறது? எனக்கு அதன் கண்ணில் ஒரு உறுதி தெரிகிறதே!

      நீக்கு
  3. நல்ல வாசகம்தான்.  சொல்லும் கொய்யாவும் ஒருங்கிணைந்துதான் இருக்கிறது.  கொய்யா என்று பெயர் வைத்துக் கொண்டாலும் கொய்து உண்டு விடுகிறார்களே...!!

    சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் என்பதையே வித்தியாசமாக சொல்கிறது தென்னங்கீற்றுப்பறவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ‘கொய்யா’து அணில்களுக்கும் பறவைகளுக்கும் விட்டு விடுகிறேன் :).

      சரியாகச் சொல்லி விட்டீர்கள்!

      நீக்கு
  4. உலகம் இப்போதெல்லாம் செல்போனுக்குள் இருக்கிறது என்பதை அந்த புறாவுக்கு சொல்லுங்களேன்..    போதாதற்கு மீட்டா AI வர வந்து விட்டது!

    ஆம், நம்மை விட திறமையைக் காட்டுபவர்களும் இருப்பார்கள் என்று நம் திறமையை எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும் சாய்மரக்கிளைப் பறவையே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’உள்ளங்கையில் உலகம்’ வர வர கவலையளிப்பதாக உள்ளது. வெளியுலகையே மனிதர்கள் மறந்து வருகிறோம்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்கள் கவர்கின்றன - குறிப்பாக முதல் படம்.

    பதிலளிநீக்கு
  6. தலைப்பிலேயே உற்சாகமும் நம்பிக்கையும். பாடல் மனதில் ஒலிக்கிறது:). # 5 உலக அனுபவங்கள் மெய்யான ஆசான். எல்லைக்கோடுகளைக் கடந்ததால் பல உண்மைகள் துல்லியமாகப் புரிகிறது “செய்தித்தாள்களின் பல செய்திகள், அச்சிடப்பட்ட பொய்கள்” எனச் சுஜாதாவின் வாசகம் நினைவுக்கு வருகிறது. இன்று வெளியாகும் பல வரலாற்று நூல்களும் இதில் அடக்கம். பறவைகள் ஒவ்வொன்றும் அழகு. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அந்தப் பாடலின் வரிகள் உற்சாகம் தருபவையே. கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin