ஞாயிறு, 30 ஜூன், 2024

கதையின் முடிவு

 #1

“உங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவொரு நேரத்திலும், 
இதைச் சொல்வதற்கான சக்தி உங்களுக்கு உள்ளது: 
'இந்தக் கதை 
இப்படி முடியப் போவதில்லை.' ”
_ Christine Mason Miller
[நேற்றைய டி20 உலகக் கோப்பை வெற்றி 
ஓர் சிறந்த உதாரணம் :) !]


#2
"உண்மையான பெருமை சிறிய விஷயங்களிலும் உயர்ந்திருப்பது."
_ Charles Simmo

#3
"உலகம் உங்கள் வேகத்திற்கு ஏற்ப விரியட்டுமாக."

#4
"அழகான எதையும் காணும் வாய்ப்பைத் தவற விடாதீர்கள், 
ஏனெனில் அழகு ஆண்டவனின் கையெழுத்து."
_ Ralph Waldo Emerson
#VintageLens #Helios 44-2 58mm f2
#5
"எல்லா இடங்களிலும் நம் இருப்பு ஒன்றே, 
அது அடர்த்தியாக இருக்கலாம், 
அல்லது 
மென்னயம் மிக்கதாக இருக்கலாம்."
_ Sadhguru

#6
"நம்பிக்கை 
நம் எதிர்பார்ப்புகளை 
நிதர்சனமாக்க வல்லது."
_ Kenneth E. Hagin
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 202
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

10 கருத்துகள்:

  1. படங்களும் அவைகளுடன் இணைந்த வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. மலர்கள் அழகு, அவை சொன்ன வாழ்வியல் சிந்தனை அருமை.
    கடைசி மலரில் தேன் உண்டு மயங்கி கிடப்பது எறும்புதானே!
    அருமை.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நம்பிக்கையூட்டும் வரிகள். தோட்டத்துப் பூக்கள் ஒவ்வொன்றும் அழகு.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் படங்களுக்கான வரிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான கருத்துடன் அழகிய படம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin