#1
"புதிய தொடக்கங்களில் இருக்கும்
மாயவித்தையை நம்புங்கள்."
#2
"பூ தேனீயைப் பற்றிக் கனவு காண்பதில்லை.
அது பூக்கின்றது, தேனீ வருகின்றது."
_ Mark Nepo
#3
"உங்கள் தெரிவுகள் உங்களது கலக்கங்களை அன்றி, உங்களது நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கட்டும்.
" _ Nelson Mandela
#4
"எது முக்கியம் என்பதில் தெளிவு இருப்பின்,
முடிவெடுப்பது எளிது."
_ Roy Disney
#5
"நாட்களை வெறுமனேக் கடத்தாமல்,
ஒவ்வொரு நாளையும் மதிப்புள்ளதாக மாற்றுங்கள்."
#6
"உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்."
"அதிர்ஷ்டம்
துணிவுள்ளர்களை
நண்பர்களாக்கிக் கொள்கிறது."
_ Emily Dickinson
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
இரண்டாவது படம் காதல் ஓவியம் படத்தின் எனக்குப் பிடித்த பாடல் வரியை நினைவூட்டுகிறது. ரோஜா மொட்டுகள் மிக அழகு. ஐந்தாவதில் அணிவகுக்கும் மொட்டுகளும் அளவான அழகில் மிளிர்கின்றன.
பதிலளிநீக்குதேன் சிந்தும் பூஞ்சோலை..?
நீக்குநன்றி ஸ்ரீராம்.
அனைத்து மலர்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்கு#2 மலர்களின் அழகிய தோற்றம், வண்ணங்கள், வடிவமைப்பு, நறுமணம் இவை தேனீக்களைக் கவர்ந்திழுக்க வேண்டும் எனும் கனவுகளின் வெளிப்பாடாகத் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு#4 மனதில் பதிய வேண்டிய உண்மை. நன்றி.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
நீக்கு