ஞாயிறு, 26 மே, 2024

புதிய பாடல்

 #1

“முந்தைய தினம் எப்படியானதாக இருப்பினும் 
புதிய நாளை எப்பொழுதும் 
பாடலுடன் தொடங்குகின்றன 
பறவைகள்.”


#2
“நீங்கள் உண்மையிலேயே உறுதியுடன் இருப்பீர்களானால், 
ஒவ்வொரு தடைக்கல்லும் படிக்கட்டாக மாறும்.”


#3
“புரிந்து கொள்வது ஒரு கலை, 
அத்தனை பேரும் கலைஞராக இருப்பதில்லை.”


#4
“நீங்கள் இன்னும் கண்டடையவில்லை எனில், 
தொடர்ந்து தேடியபடி இருங்கள்.”


#5
“உங்கள் வெற்றிக்கான வரையறையை நிர்ணயிப்பது 
தடைகளின் அளவு அன்று, 
உங்கள் கனவின் அளவு.”

#6
“மிகத் துணிவான செயல் என்பது, 
 உங்களுக்காக நீங்கள் சிந்திப்பது. 
உரக்கச் சிந்திப்பது.” 

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 199
பறவை பார்ப்போம்.. - பாகம்: 115

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. பாடலுடன் தொடங்கி படிக்கட்டுகள் ஏறி, புரிந்து கொள்ளும் கலைஞர்கள் கண்டடைகிறார்கள் தங்கள் கனவுகளின் வரையறையை!

    படங்கள் அருமை.  மறுபடி பழைய அளவுக்கு குறைந்து விட்டன படங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாகச் சொல்லி விட்டீர்கள்:).

      படங்களின் எண்ணிக்கை.. துல்லியமான அவதானிப்பு:). பதிவிடுவதில் இடைவெளி. படங்கள் சேர்ந்து போய் விடவே இயலும் போது அதிக எண்ணிக்கையில் இடம் பெறுகின்றன:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மிக அருமையான படங்கள். புரிந்து கொள்வது பெரிய கலைதான். புரிதல்தான் மிகவும் நல்லது. தினமும் ஏதாவது தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் லட்சியத்தை அடைய முடியும்.
    பொன்மொழிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாகச் சொல்லி விட்டீர்கள். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. தேடுதலில் உறுதி என்பது அதன் மீதான ஈர்ப்பே தீர்மானிக்கக்கூடும். பொறுமை, விடாமுயற்சி, காத்திருத்தலில் சலிப்பில்லா உறுதியான மனம் ஒரு கொடை. புரிதலும் ஒரு வரம். கறுப்பு வெள்ளையில் புரிதல் அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin